TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
உங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...!
தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் இன்றைய போட்டி உலகத்தில் ஒரு கண்டுபிடிப்பை அறிமுகபடுத்தினால் அடுத்த சில மணி நேரங்களிலே இன்னொரு கண்டுபிடிப்பு வரும் அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இன்று அனைத்திலும் தொழிற்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மனிதன் எவ்வளவு உணவு உண்ண வேண்டும், எத்தனை மணி நேரம் உறங்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எவ்வளவு கலோரிகள் தற்போதைக்கு உடலுக்கு தேவை, இப்படி எண்ணற்ற வகையில் மனிதனின் உடல் சார்ந்த விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
இன்று அனைவரையும் அதிக அளவு ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்ற செயற்கை நுண்ணறிவியலில் (Artificial Intelligence) தாக்கம் அதி பயங்கரமானது. அறிவியல் என்பது ஆக்கவும் பயன்படும்... அதே நேரத்தில் அழிவை எளிதாக உருவாக்கவும் பயன்படும். இன்றைய அறிவியல் ஒரு மனிதனின் இறப்பை கூட கணிசமாக கணித்து சொல்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய விஞ்ஞான வளர்ச்சி என்பதை நீங்களே எண்ணி பாருங்கள். இந்த பதிவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு ஒரு மனிதனின் இறப்பையும் எவ்வாறு கணிக்கிறது என்பதை பற்றி அறிவோம்.
தொழிற்நுட்பத்தின் அசுர வளர்ச்சி...!
இன்றைய அறிவியல் பல துறைகளில் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வருகிறது. பொதுவாக அறிவியல் என்பது மனித குலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்தரும் வகையில் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாம் உண்ணும் உணவில், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அறிவியல் மிகவும் நன்மை தரும். இத்தகைய வகையான கண்டுபிடிப்புகள் என்றென்றும் போற்றப்படும்.
பிறப்பு முதல் இறப்பு வரை..!
கூகுளின் செயற்கை நுண்ணறிவியல் ஒரு மனிதனை மருத்துவமனையில் சேர்த்த 24 மணி நேரத்தில் அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், எப்போது இறப்பார் போன்ற தகவல்களை 95 % கணித்துவிடுமாம். கிட்டத்தட்ட ஒரு மனிதனின் சாவை கூட இந்த தொழிற்நுட்பங்கள் மிக எளிதாக கணக்கிடுகிறது என்றால் இது அறிவியலில் வளர்ச்சியே..! இந்த செயற்கை நுண்ணறிவியல் இன்னும் சில காலங்களில் மருத்துவ துறையில் அபாரமான மாற்றங்களை கொண்டு வரும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
கூகுளின் ஆராய்ச்சி...
கூகுளின் மெடிக்கல் பிரைன் டீம் (Medical Brain Team) ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உயிர் வாழும் நாட்களை மருத்துவர்களை விட இந்த செயற்கை நுண்ணறிவியல் அற்புதமாக கணித்துள்ளது. அதாவது, அந்த பெண்ணின் முழு ஆரோக்கியத்தை வைத்து 19.9 சதவீதம் அவர் உயர் வாழ வாய்ப்பில்லை என செயற்கை நுண்ணறிவு கணித்துள்ளது. மருத்துவர்களின் கணிப்பு 9.3 சதவீதம் மட்டுமே. இந்த ஆராய்ச்சியின் முடிவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு மனிதனின் இறப்பையும் கூறும் என்பதை நிரூபணம் செய்துள்ளது. மேலும் இதனை மிக சரியான முறையில் கணிக்க இந்த தொழிற்நுட்பத்தை கூகுள் நிறுவனம் வருங்காலத்தில் மேம்படுத்தும் என
கூறியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு..!
மனிதனின் அறிவு தன்மையை போன்றதுதான் இந்த செயற்கை நுண்ணறிவும். ஒரு மனிதனின் முழு அறிவின் தாக்கத்தையும் அறிவியலாளர்கள் ஆராய்ந்து அதற்கேற்ப ரோபோக்களுக்கு இந்த அறிவின் நுணுக்கத்தை செலுத்துவார்கள். இவை மனிதனை விட மிக துல்லியமாக செயல்படவும் கூடும். வருங்காலத்தில் நமது முழு ஆரோக்கியத்தையும் இந்த செயற்கை நுண்ணறிவு கணிசமாக சொல்லிவிடுமாம்.
உடலின் முழுமைக்கும் AI..!
இந்த செயற்கை நுண்ணறிவியல் மனித உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாடு, எந்தவித நோயினால் அந்த குறிப்பிட்ட உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது, கிருமிகளை எவ்வாறு கொல்ல வேண்டும், எத்தகைய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் போன்ற பல வகையான மருத்துவத்திற்கும் இது பயன்படும். குறிப்பாக இதயத்தின் நாடி துடிப்பை வைத்தே மாராடைப்பு எப்போது வரும், மூளையின் செயல்திறனை வைத்தே மனிதன் தற்போது என்ன செய்ய போகிறான், ரத்த ஓட்டத்தின் பாதையின் உள்ள அடைப்புகள், புற்றுநோய் செல்கள் உருவாதல் போன்றவற்றை கணித்து சொல்லி விடும்.
ஆரோக்கிய அறிவியல்..!
அறிவிலின் கட்டுக்கடங்காத வளர்ச்சி பற்றி நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் இதன் வளர்ச்சி மனித குலத்திற்கு நன்மையே தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். வருங்கால விஞ்ஞானம் மனிதனின் முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வல்லதாக இருந்தாலே போதும். பாமர மக்கள் விரும்புவதும் இந்த "ஆரோக்கிய அறிவியல்"தான். நாமும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பிறரையும் பயன்படுத்த செய்வோம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களையும் விழிப்புணர்வு அடைய உதவுங்கள்.