For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீரகம் ஆரோக்கியமாய் இருக்க வேண்டுமெனில் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

ஆரோக்கியமான உணவுகள் சிறுநீரகம் மட்டுமின்றி உடலின் மற்ற பாகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் நாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளே நம்முடைய சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது

|

நமது உடலின் ஆரோக்கியத்திற்கு சிறுநீரக செயல்பாடு என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் சிறுநீரகம்தான் நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சு பொருட்களை வெளியேற்றும் முக்கியமான பணியை செய்கிறது. இது ஒழுங்காக செயல்படாவிட்டால் உடலில் நச்சுக்கள் தேங்கி அவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

foods to avoid for kidney health

சிறுநீரகம் சிறப்பாக செயல்பட நமது உணவு முறை மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான உணவுகள் சிறுநீரகம் மட்டுமின்றி உடலின் மற்ற பாகங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் நாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளே நம்முடைய சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது அதிர்ச்சியான ஒன்று. இந்த பதிவில் சிறுநீரகத்தை பாதிக்கும் ஆரோக்கிய உணவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ

அவகேடோ

அவகேடோ இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பழமாகும். ஏனெனில் இதில் நார்ச்சத்துக்களும், ஆன்டிஆக்சிடண்ட்களும் அதிகம் உள்ளது. இதனை அனைவரும் சாப்பிட்டாலும் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. அதற்கு முக்கிய காரணம் இதில் அதிகளவு உள்ள பொட்டாசியம்தான். ஏனெனில் அதிகளவு பொட்டாசியம் சிறுநீரகத்தில் அடைப்பை உண்டாக்கும்.

அடைக்கப்பட்ட உணவுகள்

அடைக்கப்பட்ட உணவுகள்

அடைக்கப்பட்ட உணவுகளான சூப், காய்கறிகள் போன்றவற்றை நாம் அதிகம் உண்ண காரணம் அதில் எளிதில் கிடைப்பதுதான். இதுபோன்ற அடைக்கப்பட்ட உணவுகளில் அதிகளவு சோடியம் மற்றும் உப்பு இருக்கும். எனவே சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புபவர்கள் இதனை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி என்பது ஆரோக்கியமான தானியமாக இருக்கிறது இதில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. அவகேடாவை போலவே இதிலும் உள்ள பிரச்சினை இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம்தான்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

இது உங்களுக்கு அதிர்ச்சியானதாக இருக்கலாம். ஏனெனில் வாழைப்பழம் மிகச்சிறந்த ஆரோக்கிய உணவாக நம்மால் உட்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சோடியம் குறைந்தளவு இருந்தாலும் பொட்டாசியம் 422மிகி உள்ளது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது கண்டிப்பாக சிறுநீரக பிரச்சினையை ஏற்படுத்தும்.

MOST READ: புத்தர் எப்படி இறந்தார் தெரியுமா? அதன் பின் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பல தீங்குகளை ஏற்படுத்தக்கூடியது. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள்தான். இதில் அதிகளவு உப்பு மற்றும் உலர்தன்மை இருக்கும். இதில் உள்ள குறைவான சோடியம் மற்றும் அதிகளவு புரோட்டின் சிறுநீரக கற்களை உருவாக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

பொதுவாகவே உருளைக்கிழங்கு அதிகளவு பொட்டாசியம் உள்ள ஒரு காய்கறி ஆகும். உருளைக்கிழங்கை தண்ணீரில் நனைக்கும்போது அதில் உள்ள பொட்டாசியம் அளவு குறைகிறது. உருளைக்கிழங்கை சிறியதாக நறுக்கி வேகவைக்கும்போது அதிலுள்ள பொட்டாசியத்தின் அளவு பாதியாக குறைகிறது. இருந்தாலும் அதிகளவு உருளைக்கிழங்கு சிறுநீரகத்திற்கு ஆபத்துதான்.

தக்காளி

தக்காளி

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றொரு காய்கறி தக்காளி ஆகும். தக்காளியை நாம் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள பொட்டாசியத்தின் அளவு உங்கள் சிறுநீரக கற்களை மட்டும் உருவாக்காமல் மற்ற சில சிறுநீரக பிரச்னைகளையும் உருவாக்க்கூடும்.

உலர்பழங்கள்

உலர்பழங்கள்

அனைத்து உலர் பழங்களுமே காயும்போது அதில் பொட்டாசியம் மற்றும் அனைத்து சத்துக்களுமே அதிகரிக்கிறது. எனவே அதிகளவு உலர்பழங்கள் எடுத்துகொள்ளுமுன் சற்று யோசிக்கவும். குறிப்பாக பேரிட்சை பழம் அதிகமாக சாப்பிடாதீர்கள்.

MOST READ: மெட்ரோ ரயிலில் மக்கள் அடித்த கூத்து - புகைப்படத் தொகுப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods to avoid for kidney health

The kidneys are a pair of bean-shaped organs that are found in all vertebrates. They remove waste products from the body. But some healthy foods are affecting kidney health.
Desktop Bottom Promotion