Latest Updates
-
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...!
விந்தணுவின் எண்ணிக்கையை குறைக்கும் தினசரி உணவுகள் என்னென்னன்னு தெரியுமா..?
குழந்தை பேறு என்பது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இது எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமோ அதே அளவிற்கு தான் ஒரு ஆணின் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால், இந்த பெரும் பாக்கியத்தை தடுக்க கூடிய சில முக்கிய நோய்களும், அன்றாட பழக்கங்களையும் நாம் செய்து கொண்டே வருகின்றோம். குறிப்பாக ஆணின் உடலிலே இது முக்கிய பங்கு வகிக்கிறது.

அவர்களின் உடலில் இருந்து விந்தணு வெளியேறினால் தான், ஒரு பெண்ணால் குழந்தை பெற இயலும். இதற்கு தடையாக ஆண்கள் சாப்பிடும் தினசரி உணவுகளே உள்ளன. இந்த வகை உணவுகள் ஆண்களின் விந்தணுவை பாதித்து, அவற்றின் எண்ணிக்கையை குறைத்து விடுகிறது. எந்தெந்த தினசரி உணவுகள் ஆண்களின் விந்துவை குறைக்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

ஜாக்கிரதை ஆண்களே..!
இன்று பத்தில் 5 முதல் 4 பேருக்கு விந்தணு குறைபாடு ஏற்படுகிறது. இது பல ஆண்களின் வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. ஆண்கள் எந்த அளவுக்கு இந்த பிரச்சினையை சமாளிக்கிறார்கள் என்பதே இப்போது கேள்விக்குறியாக உள்ளது. விந்து பிரச்சினைக்கு என்னென்னவோ மருந்துகள் வந்தாலும் தினசரி உணவுகள் சரி இல்லையெனில் அவ்வளவுதான்.

DNA பாதிப்பா..?
உங்கள் விந்தணுவின் எண்ணிக்கையில், அவற்றின் நீந்து தன்மையும் மிக மோசமாக இருந்தால் அதற்கு DNA பாதிக்கப்படுதலே காரணம். கரு முட்டையில் விந்து சரியாக சென்றடையாவிடில் அவை ஆண்களின் உடலில் ஏற்பட்டுள்ள DNA பாதிப்பாகவே மருத்துவர்கள் சொல்கின்றனர்.

காஃபி மாயை..!
காஃபி குடிக்கும் ஆண்களே, உங்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. நீங்கள் அதிகமாக காபி குடித்தால் உங்கள் படுக்கையில் உங்களுக்கான இன்பத்தை இழந்து விட கூடும் என ஆய்வுகள் சொல்கிறது. அதிக காபி பழக்கம், தயக்கத்தையும் பதட்டத்தையும் தந்து இல்லற வாழ்வை கெடுத்து விடுமாம்.

கோலாக்கள் செய்யும் வினை..!
பல ஆண்கள் தினம்தோறும் இந்த கோலாக்களை சாப்பிட்டு வருவது வழக்கமான ஒன்றாகும். குறிப்பாக டயட் இருப்பதாக கூறி டயட் பானங்களை குடிப்பார்கள். இது எத்தகைய பிரச்சினை ஏற்படுத்தும் என்பதை உணராமல் ஆண்கள் இதை செய்கின்றனர். இவை விரையின் ஆரோக்கியத்தை பாதித்து, விந்தணு உற்பத்தியை குறைத்து விடும்.

புதினா எப்படி..?
புதினா உண்மையில் நல்ல வாசனை மூட்டிதான். என்றாலும், இவை டெஸ்டோஸ்டெரோனின் அளவை குறைத்து விட கூடும். ஆண்கள் தங்களின் உணவில் அதிக அளவில் புதினாவை சேர்த்து கொண்டால் எண்ணற்ற பக்க விளைவுகளை சந்திக்க நேரடிடலாம். அதாவது, இதனால் விந்தணு குறைபாடு விரைவிலே ஏற்படும்.

சீஸ் பிடிக்குமா..?
பல ஆண்களுக்கு சீஸ் மிகவும் பிடித்த ஒன்று. இந்த "சீஸ்" என்னும் பாலாடைக்கட்டியை சீஸ் பிரட், சீஸ் பீட்சா போன்றவற்றை செய்ய பயன்படுத்தவர். இவை பாலில் இருந்து எடுக்கப்பட்டாலும், இவற்றை பதப்படுத்தப்பட்டே தயாரிக்கின்றனர். எனவே இது விந்தணு உற்பத்தியை குறைத்து விடும்.

சாக்லேட்
பொதுவாக சாக்லேட் ஆண்களுக்கு நல்லது என்பதை தான் நாம் கேள்விபட்டிருப்போம். அதாவது, நேரடியாக கோக்கோவில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உடலுக்கு நன்மை தரும். மாறாக, வேதி பொருட்களை சேர்க்கப்படும் சாக்லேட்டுகளை உண்டால் ரத்த ஓட்டத்தை பாதித்து, விறைப்பு தன்மை போன்ற பிரச்சினையை ஏற்படுத்துமாம். மேலும், விந்தின் ஆரோக்கியத்தையும் இது கெடுக்கும்.

காரமான உணவா..?
அதிக காரம் கொண்ட உணவை ஆண்கள் மிகவும் விரும்புவார்கள். ஆனால், இது அவர்களின் தாம்பத்திய வாழ்வில் சில முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வித துர்நாற்றத்தை ஆண்களின் பிறப்புறுப்பில் ஏற்படுத்த கூடுமாம். இதனால், இல்லற வாழ்வு பாதிக்க செய்யும்.

சோயா
சோயாவை வைத்து செய்யப்படும் சோயா சாஸ், சோயா பிரெட், சோயா தின்பண்டங்கள் ஆகியவை ஆண்களுக்கு பெரும்பாலும் பிடிக்கும். ஆனால், இவை phytoestrogen- களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் பெண்களுக்கு அதிகம் தேவைப்பட கூடிய ஹார்மோனாகும். ஆனால், இவை ஆணின் உடலில் அதிகம் சேர்ந்தால் ஹார்மோன்களின் சமநிலை மாறி விந்தணு கோளாறுகள் ஏற்படும்.

பிளாஸ்டிக் பாட்டில் நீர்
நாம் வெளியில் எங்காவது போகும் போது, பாட்டிலில் அடைபட்ட நீரையே வாங்கி குடிக்கின்றோம். இதன் ஆபத்து என்னவென்று இனி தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. இவை ஆண்களின் ஆண்மையை குறி வைக்கும் மோசமான ஒன்றாம். இந்த நீரை குடித்தால், விந்தணு தட்டுப்பாடு, ஆண்மை குறைவு, மலட்டு தன்மை ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

உணவுகள் ஜாக்கிரதை..!
அதிக நாள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் விந்துவின் உற்பத்தியை தடை செய்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக நச்சு தன்மை உள்ளதாம். எனவே, நீங்கள் சாப்பிடும் உணவின் தன்மையை அறிந்து கொள்வது அவசியம்.

சிவப்பு இறைச்சி
எல்லா வகையான இறைச்சிகளையும் சாப்பிடுவது ஆபத்தானது. இது உடல் நலனை பெரிதும் பாதிக்குமாம். இறைச்சியில் ஆட்டு இறைச்சி மற்றவற்றை விட உகந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாட்டு இறைச்சியை சாப்பிட விருப்பப்படுவோர் அது எத்தகைய இறைச்சி என்பதை பார்த்து கொண்டு உண்ணுங்கள்.
எனவே, மேற் சொன்ன உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே...! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











