For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள்தான் உங்கள் உடல் துர்நாற்றம் ஏற்பட காரணம்

வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென விரும்பினால் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள்.

|

வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது என்பது இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என அனைவருக்குமே இந்த பழக்கம் வந்துவிட்டது. அதற்கு காரணம் நமது உடலில் இயற்கையாக உருவாகக்கூடிய துர்நாற்றம்தான். இந்த துர்நாற்றம் ஏற்பட நமது உடலில் ஏற்படும் வியர்வை மட்டும் காரணமல்ல.

foods that cause bad body odor

ஆம். வியர்வை மட்டுமின்றி நாம் சாப்பிடும் உணவுகளும் நமது உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். சில உணவுகள் வாசனை திரவியங்கள் உபயோகித்தாலும் அவற்றின் துர்நாற்றத்தை குறைக்க இயலாது. உங்கள் உடலில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென விரும்பினால் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறைச்சி

இறைச்சி

இறைச்சி சாப்பிட வேண்டாமென்றால் நிச்சயம் நீங்கள் கோபப்படுவீர்கள். ஏனெனில் இதன் சுவை உலகம் முழுவதும் பல கோடி மக்களை கவர்ந்துள்ளது. ஆனால் இறைச்சி செரிக்க அதிக நேரம் தேவைப்படும், இது குடலில் சில நச்சுக்களை விடுவிக்கிறது. இது வெளியிடும் பாக்டீரியா அதிக வியர்வையை ஏற்படுத்தக்கூடும். இப்படி வியர்க்கும்போது மோசமான துர்நாற்றம் ஏற்படும்.

பூண்டு

பூண்டு

பூண்டை நசுக்கும்போதும் சரி, வெட்டும்போதும் சரி அவை சல்ப்யூரிக் அமிலத்தின் மூலப்பொருளான அல்லிசின் என்னும் வேதிப்பொருளை வெளியிடுகிறது. இவை பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து வியர்க்கும் போது மோசமான துர்நாற்றத்தை வெளியிடும். மேலும் இது பேசும்போதும் மோசமான வாசனையை உண்டாக்கும்.

மீன்

மீன்

சமீபத்திய ஆய்வின்படி தொடர்ச்சியாக மீன் சாப்பிடுபவர்களுக்கு எப்பொழுதும் உடலில் ஒருவித துர்நாற்றம் இருக்கிறது என கூறப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள டிரிமெதிலமைன். உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்படும் இந்த நோய்க்கு டிரிமெதிலினுனியாரியா என்று பெயர். இது மோசமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

சில காய்கறிகள்

சில காய்கறிகள்

ப்ரெஸ்ஸிகா குடும்பத்தை சேர்ந்த அனைத்து காய்கறிகளுமே துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும். முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் சல்பர் அதிகளவு உள்ளது. இது மிகவும் விரும்பத்தகாத வாசனையை உருவாக்கக்கூடிய ஒரு மூலப்பொருளாகும். எனவே இந்த காய்கறிகளை சமைக்கும்போது அதில் சீரகம், ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்ற பொருட்களை சேர்த்து சமைக்கவும்.

MOST READ: புத்தர் எப்படி இறந்தார் தெரியுமா? அதன் பின் உள்ள ரகசியம் என்ன தெரியுமா?

காபி

காபி

காபி உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய பானம் என்று மட்டுமே நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அது மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிலை. காபி குடித்தவுடன் உங்கள் வாய் மிகவும் உலர்ந்து விடுகிறது. இதனால் உங்கள் வாயில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் பேசும்போதும் வியர்வை வரும்போதும் துர்நாற்றம் ஏற்படும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் சாப்பிடும்போது உங்கள் உடல் சல்ப்யூரிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதிலுள்ள மெர்காப்டன் உங்கள் உடலில் மோசனமான வாசனையை உருவாகக்கூடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

சுகாதார நிபுணர்களின் படி ஆல்கஹால் அருந்தும்போது அசிட்டிக் அமிலம் உருவாகிறது. இது வியர்வை மற்றும் பேசும்போது துர்நாற்றத்தை உருவாக்கும். நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் உடலில் மோசமான துர்நாற்றத்தை உண்டாக்கும்.

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்

குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்

கார்போஹைட்ரேட் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கக்கூடியதாகும். அவை குறையும்போது உடல் கீட்டோன் என்னும் நச்சுப்பொருளை வெளியிடுகிறது. இதனால் உடலிலதுர்நாற்றம் வெளிப்படும் குறிப்பாக பேசும்போது. எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்.

MOST READ: தென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

foods that cause bad body odor

Eating foods with certain chemical elements can seriously intensify that odor to an almost unbearable level. Here are list of foods that are creating body odor.
Desktop Bottom Promotion