அன்னாசிப் பழம் சாப்பிட்டா இப்படியொரு பலனா?

Posted By:
Subscribe to Boldsky

உடலின் இயக்கத்திற்கு அத்தியாவசியமான ஒன்று ரத்தம். உடலின் எல்லா பாகங்களுக்கும் போதுமான அளவு ரத்தம் சென்று வர வேண்டும். அப்போது தான் உடலில் ஒவ்வொரு உறுப்பும் அதற்குரிய வேலைகளை எந்த தடையுமின்றி செய்திடும்.

இன்றைக்கு இளைஞர்களிலிருந்து முதியவர்கள் வரை பலரும் பாதிக்கப்படும் பிரச்சனை மாரடைப்பு. இன்றைய வாழ்க்கை முறையினால் எனக்கு மாரடைப்பு வந்திடுமோ என்று பலரும் பயப்படுகிறார்கள். இந்த மாரடைப்பு ஏற்படுவதன் முதற்கட்டமாகத்தான் ரத்த அடர்த்தியை குறிப்பிடுகிறரகள். இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படும். ரத்தத்தின் அடத்தி குறையும் போது அது வேகமாக எல்லா இடங்களுக்கும் பரவிடும். அதே போல இதயப்பிரச்சனைகள், பக்கவாதம், ரத்த உறைவு ஆகியவற்றை தடுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த உறைவு :

ரத்த உறைவு :

நம் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பு மற்றும் இன்ன பிற சத்துக்கள் ரத்த நாளங்களில் அதாவது ரத்தம் செல்லுகிற பாதைகளில் படிய ஆரம்பிக்கும். ரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருந்தால் அந்தப் பகுதிகளில் கடந்து செல்கையில் சிரமங்கள் ஏற்படலாம். சிலருக்கு ரத்த ஓட்டமே இல்லாது பாதிப்பினை உண்டாக்கும்.

இதயப் பிரச்சனை இருப்பவர்களுக்கு ரத்ததின் அடர்தியை குறைப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.

என்ன செய்யும் :

என்ன செய்யும் :

அடர்த்தியின் அளவினைக் குறைப்பதால் அது ரத்த உறைவுப் பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்கும் இதைத் தவிர துரிதமான ரத்த ஓட்டத்தினை உண்டாக்கும். ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவெடுப்பீர்கள். இந்த ஆரோக்கிய வாழ்வு கிடைக்க நிறைய மெனக்கெட வேண்டும் என்றெல்லாம் அவசியமல்ல நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதுமானது.

பூண்டு :

பூண்டு :

இதில் சலிசைலேட் அமிலம் இருக்கிறது. பொதுவாக பக்கவாதத்தை தடுக்க பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் அதிகளவு சலிசைலேட் ஆசிட் இருக்கிறது. இந்த அமிலம் ரத்தத்தின் அடர்த்தியை குறைத்திடும்.

பூண்டினை அதிகமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர பெர்ரீ,அவகேடோ,மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த தட்டுக்கள் :

ரத்த தட்டுக்கள் :

ரத்த உறைவுப் பிரச்சனையின் முதல் பங்கு ரத்த தட்டுக்களை ஒன்றிணைப்பது தான். அன்றாட வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கம் ஆகியவற்றினல் ரத்த உறைவுப் பிரச்சனை ஏற்படும் அதைத் தடுக்கவும் பூண்டு பெரிதும் உதவுகிறது.

இஞ்சி :

இஞ்சி :

பல்வேறு உடல் உபாதைகளுக்கு இஞ்சி மருந்தாக பயன்படுகிறது. சீன மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. பொதுவாக இஞ்சியை நோயெதிர்ப்பு சக்திக்காக தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதையும் தாண்டி இஞ்சி ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க பெரிதும் உதவிடுகிறது.

அதோடு ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்த உதவுவதால் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மீன் எண்ணெய் மாத்திரை :

மீன் எண்ணெய் மாத்திரை :

இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. இதுவும் ரத்த தட்டுக்கள் ஒன்றிணைவதை தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் ஆகியவை நம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இதிலிருந்து EPA மற்றும் DHA ஆகிய இரண்டு அமிலங்கள் கிடைக்கின்றன அவை ரத்த உறைவுப் பிரச்சனையை தடுத்திடும். இவற்றை நம் உடல் தானாகவே உற்பத்தி செய்யாது என்பதால் இதுபோன்ற சப்ளிமெண்ட்டுகள் அவசியமாகும்.

பட்டை :

பட்டை :

பட்டையில் கௌமரின் என்ற சத்து நிறைந்திருக்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு பட்டைத் தூளைப் போட்டு கொதிக்க வைத்திடுங்கள். பின் அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் குடித்திடுங்கள். தொடர்ந்து அதிக நாட்களுக்கு குடிப்பதினால் கல்லீரல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

அன்னாசிப் பழம் :

அன்னாசிப் பழம் :

அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் நிறைந்திருக்கிறது, இவை உங்கள் ரத்தத்தில் ஏற்படுகிற ரத்த உறைவுப் பிரச்சனையை தீர்க்கும். அதோடு ரத்தத்தின் அடர்த்தியை கட்டுக்குள் கொண்டிருக்கும். அதோடு இதிலிருக்கும் அமிலத்தன்மை நல்ல செரிமானத்தை வழங்கக்கூடியது.

மிளகாய் :

மிளகாய் :

மிளகாயில் சலிசைலேட் என்ற சத்து அதிகமுண்டு. இவை ரத்த உறைவினையும், ரத்த அடர்த்தியையும் கட்டுப்படுத்தக்கூடியது. அதோடு ரத்த ஒட்டத்தையும் சீர்படுத்தும் என்பதால் மிளகாய அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிலர் காரம் சேராது என்ற காரணத்தை சொல்லி சுத்தமாக மிளகாய் பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். அது தவறானது.

காரமான பொருட்கள் சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுகிறது என்றால் அதற்குரிய காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெற்றிடுங்கள்.

திராட்சை :

திராட்சை :

திராட்சையில் அதிகப்படியான ஃப்லேவனாய்டுகள் இருக்கின்றன. இதைத் தவிர கெம்ப்ஃபோரல்,க்வர்செட்டின் மற்றும் மைசெடின் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இவையெல்லாம் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடியது.

அதே போல ரத்தத் தட்டுக்களையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவிடுகிறது.

டார்க் சாக்லெட் :

டார்க் சாக்லெட் :

டார்க் சாக்லெட்டில் அதிகப்படியான ஃப்ளேவனாய்டு இருக்கிறது. ஃப்ளேவனாய்டு இயற்கையிலேயே ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கக்கூடியது. வொயிட் சாக்லெட்டினை விட டார்க் சாக்லெட் தான் நல்லது.

இது ரத்த ஓட்டத்தினையும் அதிகப்படுத்தும். இதைத் தவிர தக்காளியையும் நீங்கள் பயன்படுத்தலாம். தாக்காளியில் கேஃபைன்,க்ளோரோஜெனிக் மற்றும் பி-கவுமாரிக் ஆகியவை இருக்கிறது, இவை இதய ஆரோக்கியத்திற்கு பயனளிக்கக்கூடியது.

பீட்ரூட் :

பீட்ரூட் :

இதில் அதிகப்படியான நைட்ரேட் இருக்கிறது. இவை உடலில் ரத்த ஓட்டத்தினை அதிகப்படுத்தும். அதோடு ரத்த உறைவுப் பிரச்சனையை தடுக்கும். உடலில் நைட்ரேட் அளவு குறைந்தால் ரத்த தட்டுக்கள் ஒன்றோடொன்று பிணைந்து கொள்ள ஆரம்பிக்கும் நாளடைவில் ரத்த உறைவு பிரச்சனை ஏற்படும் கவனிக்காமல் விட்டால் ஒரு கட்டத்தில் மாரடைப்பு ஏற்படும்.

அவற்றை தடுக்க பீட்ரூட் அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods To Increase Blood Thinner

Foods To Increase Blood Thinner
Story first published: Wednesday, April 4, 2018, 18:00 [IST]