For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுறவில் ஓவர் ஆர்வமா? இதையும் கொஞ்சம் படிங்க...

அடிக்கடி அளவுக்கு அதிகமாக உடலுறவு கொள்வதால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

By Venkatakrishnan S
|

நல்லதோ, கெட்டதோ ஏன்ய்யா இதுக்கும் ஒரு வியாக்கியானமானு யோசிக்கமால் தொடர்ந்து படியுங்கள். முதல்ல பதட்டமே தேவையில்லை.

what happens Do you have sex frequently

அவசியமான உடலுறவு மனதுக்கும் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமான தான். ஆனால் எதுவும் அளவை மீறுகிறதா என்பதை அறிந்து கொள்வது தான் அவசியமானது. உங்களின் அதீத உறவு ஆசைகளுக்கு உங்கள் உடலும் உடன்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டியதும் மிக அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணர்வுப்பூர்வமான உறவு

உணர்வுப்பூர்வமான உறவு

காமம் என்பது இரு உடல்களுக்கு இடையே பாலியல் நெருக்கத்தை தாண்டி பல சங்கதிகளை உள் அடக்கியது. துணையோடு உணர்வுப் பூர்வமாக நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. உடல் தீண்டலும், சுகங்களுமே உடலுறவு ஆசைகளை தூண்டி விட்டு முன்னிலை பெற்றாலும் காமம் முற்றுப் பெறும் போது அது உடல் ரீதியான சுகங்களை தாண்டி வேறு ஒரு உன்னத நிலையை தொடுகிறது. காமத்தின் கிளர்ச்சியில் கடைசியில் காதலே வெல்கிறது என்பது தான் சங்கதி.

உடல், மனதை தளர்வாக்கும்

உடல், மனதை தளர்வாக்கும்

ஆய்வாளர்களின் கூற்றுப்படி அதிகம் உடலுறவு கொள்பவர்கள் உணர்வுப்பூர்வமாக சிக்கல்களில் சிக்கிக் கொள்வது இல்லை. அவர்கள் தனிமையை விரும்புவது இல்லை. அதிகம் கோபப்படுவதும், உணர்ச்சிவசப் படுவதும் கூட குறைவு தான். அதாவது தன் துணையோடு சண்டை சச்சரவுகள் இன்றி நல்ல தோழமையை பேணுவதற்கும் அதிக உடலுறவு தேவைப்படுகிறது. இதற்கு பாலியல் ஆசைகளை தூண்டும் ஹார்மோன் கூட்டங்களுக்கு தான் மேடை போட்ட மாலை அணிவித்து நன்றி சொல்ல வேண்டும். நம்மை எப்போதும் மகிழ்வாக வைத்திருக்க உதவுவது அவைகள் தான்.

காமம் கவர்ச்சியை கூட்டும்

காமம் கவர்ச்சியை கூட்டும்

நம்புங்கள் நண்பர்களே, காலையில் உங்களின் முகப் பொலிவை பார்த்தே முந்தின நாள் உங்களின் படுக்கை அறை எப்படி என்பதை பகிரங்கமாக சொல்லி விட முடியும். இதற்கு பிக்பாஸ் கேமராக்களை பொருத்தி கண்டு பிடிக்க வேண்டியது இல்லை. உங்கள் உடலின் இரத்த ஓட்டமே குஷியாக ஓடி உங்கள் நாடி நரம்புகளை திடமாக்கி, உங்கள் வெளித்தோற்றம், தோல் மற்றும் முக நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகத்தை பொலிவாக்கி உங்களை போஷாக்காக மாற்றி உங்களை கவர்ச்சிகரமாக மாற்றி விடும். அதனால் முந்தின நாள் இரவு மேட்டரை எக்காரணம் கொண்டு மிஸ் செய்து விடாதீர்கள். அதற்காக மறு நாள் வருத்தபடக் கூடும்.

உடல் வலி

உடல் வலி

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வு குறிப்பு ஒன்று நம் உடலில் ஏற்படும் பல வித வலிகளுக்கும் நமது உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவிக்கிறது. சில நபர்களிடம் அவர்கள் விரும்புவோரின் புகைப்படத்தை காட்டிய போது அவர்களின் உடல் வலி சுமார் 44 சதவிகிதம் குறைந்ததாக ஆதாரத்தோடு சுட்டிக் காட்டுகிறார்கள். ஆக நாம் விரும்பும் துணையோடு உணர்ச்சி மிகு உடலுறவை கொண்டால் உடல் வலியை தாங்கும் சக்தியும் அதிகரிக்கும் என்பது தான் அந்த ஆய்வின் முடிவு தெளிவு படுத்துகிறது.

பெண்களுக்கு கொஞ்சம் பேஜார் தான்

பெண்களுக்கு கொஞ்சம் பேஜார் தான்

நல்லவை அறிந்தாலும் அல்லவையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா. அதிக உடலுளவு எப்போதும் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்று சொல்லி விட முடியாது. பெண்களைப் பொருத்தவரை அதிக உடலுறவு அவர்களுக்கு சிறுநீரக தொற்று பொதிப்பை (UTI) ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். அதிக உடலுறவில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோனோர் பிற்காலத்தில் சிறுநீரக தொற்று பாதிப்பை அடைந்ததாக சுகாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிறுநீரகத் தொற்று

சிறுநீரகத் தொற்று

யுடிஐ எனும் சிறுநீரக தொற்றை உருவாக்கும் நுண்ணுயிரி (bacteria (E. coli)) எப்போதும் பிறப்பு உருப்புகளை சுற்றி மையம் கொண்டு இருப்பதால் அதிக பட்ச உடலுறவுகளின் போது மிகச் சுலபமாக பெண்களின் சிறுநீரக பையை நோக்கி சென்றடைந்து விடும். அதனால் உடலுறவு முடிந்த நிலையில் பெண்கள் மிக கவனத்தோடு அவர்களின் பிறப்பு உறுப்புகளை கழுவி விடுவது மிகவும் அவசியம் ஆகும்.

சிறுநீரக வீக்கம்

சிறுநீரக வீக்கம்

அநேக பெண்களுக்கு இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. சிறுநீர் கழித்து விட்டு வந்த பிறகும் சிறுநீரக பை நிரம்பி, சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றும்.. இதற்கு காரணம் பெண்களின் ஜி-ஸ்பாட் (g-spot) வீக்கம் அதிக உடலுறவால் வீக்கம் அடைகிறது. அதுவே சிறுநீரக பையில் ஒரு உந்துதலை ஏற்படுத்தி, அது நிறைந்து விட்டது போலவும், மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போலவும் நினைக்கத் தோன்றுகிறது.

எல்லாம் சரி தினந்தோறும் உடலுறவு என்பது அதிகம் சாத்தியமில்லை தான். ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அதை அளவோடு வைத்துக் கொள்வது நல்லது. அமிர்தமே என்றாலும் எதுவும் ஒரு அளவோடு இருந்தால் அனைவருக்கும் நலமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do you have sex frequently? Here's what happens when you do

reasons to be a little cautious before you have more sex than what your body can handle. Let’s have a look at these things.
Story first published: Friday, August 24, 2018, 15:57 [IST]
Desktop Bottom Promotion