Latest Updates
-
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
ஆண்களே! தினமும் ஆலிவ் ஆயில் சாப்பிட்டால் விறைப்புத்தன்மை பிரச்சனை சரியாகும் தெரியுமா?
டயட்டில் எத்தனையோ வகைகள் உள்ளன. அதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு வகை தான் மத்திய தரைக்கடல் உணவுமுறை. இந்த உணவுமுறையானது மத்திய தரைக்கடல் பகுதியில் பராம்பரியமாக பின்பற்றப்பட்டு வருவதாகும். அதாவது இந்த டயட்டில் காய்கறிகள் மற்றும் ஆலிவ் ஆயில் அதிகமாகவும், மிதமான அளவில் புரோட்டீனும் இருக்கும். பல ஆய்வுகளில் மத்திய தரைக்கடல் டயட்டானது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.
சமீப காலமாக பல ஆண்கள் சந்திக்கும் ஓர் பாலியல் பிரச்சனை தான் விறைப்புத்தன்மை குறைபாடு. இந்த குறைபாட்டினைக் கொண்ட ஆண்கள் தங்களால் உடலுறவின் போது துணையை திருப்திப்படுத்த முடியாமல் போவதால், மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையானது 50 வயதிற்கு மேல் தான் வரும். ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், உடலில் முக்கியமாக அந்தரங்க உறுப்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைக்காமல், பல பாலியல் பிரச்சனைகளை இளமையிலேயே சந்திக்க வைக்கிறது.

ஆனால் இந்த விறைப்புத்தன்மை பிரச்சனையை மத்திய தரைக்கடல் டயட் அல்லது உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதால், சமீபத்திய புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

புதிய ஆய்வு
ஏதென்ஸ் பல்கலைகழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மத்திய தரைக்கடல் டயட்டான அதிகமான பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், மீன், நட்ஸ் மற்றும ஆலிவ் ஆயிலை உட்கொள்ளும் சுமார் 660 ஆண்களை ஆராய்ந்தது. அதில் ஐந்தில் ஒருவர், அதுவும் 67 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு தான் விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 40-70 வயதிற்குட்பட்ட ஆண்கள், மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொண்டு வந்ததில் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரியாகி இருப்பது தெரிய வந்தது.

ஆலிவ் ஆயில்
முக்கியமாக மத்திய தரைக்கடல் டயட்டில் இருக்கும் ஆலிவ் ஆயில் தான் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை சரிசெய்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதற்கு காரணம் ஆலிவ் ஆயில் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் சிறப்பான ஓர் எண்ணெய். எனவே இந்த எண்ணெயை ஆண்கள் தங்களது டயட்டில் சேர்க்கும் போது, ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருந்து, ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். இதன் விளைவாக விறைப்புத்தன்மை பிரச்சனை குறையும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆண் மலட்டுத்தன்மை குறையும்
மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொள்ளும் ஆண்கள், குறிப்பாக ஆலிவ் ஆயிலை அதிகமாக உணவில் சேர்க்கும் போது, அது வயது அதிகரிக்கும் போது ஏற்படும் மலட்டுத்தன்மையை 40 சதவீதம் வரை குறைப்பாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக விறைப்புத்தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள் தீர்வு காண்பதற்கு வயாகராவைப் பயன்படுத்துவார்கள். இனிமேல் வயாகராவிற்கு பதிலாக சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தாலே, விறைப்புத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இப்போது மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

இதய ஆரோக்கியம் மேம்படும்
மத்திய தரைக்கடல் டயட் இதயத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. இன்று ஏராளமானோர் இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் மற்றும் பழக்கங்களைக் கொள்வது மிகவும் அவசியமானதாகும். மத்திய தரைக்கடல் டயட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளும் அடங்கியிருப்பதால், இந்த டயட்டை மேற்கொண்டால் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் என்னும் கெட்ட கொழுப்புக்களின் அளவு குறைந்து, இரத்த அழுத்தம் நிலையாக இருந்து, இரத்த குழாய்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

மூளையின் முதுமை தாமதமாகும்
மத்திய தரைக்கடல் டயட் மூளையின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இந்த வகை டயட் முதுமை காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுப்பதோடு, அல்சைமர் நோயின் அபாயத்தையும் குறைக்கும். மத்திய தரைக்கடல் டயட்டில் உள்ள பல உணவுகள், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் இந்த உணவு முறை மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே நீங்கள் ஸ்மார்ட்டாக மற்றும் நல்ல நினைவாற்றலுடன் இருக்க நினைத்தால், மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொள்ளுங்கள்.

கண் பார்வை மேம்படும்
மத்திய தரைக்கடல் உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், ஆரஞ்சு பழங்கள், குடைமிளகாய் மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண் பார்வைக்கு மிகவும் நல்லது. யார் ஒருவர் வாரத்திற்கு ஒரு முறையாவது மீனை உணவில் சேர்க்கிறார்களோ, அவர்களுக்கு 31 சதவீதம் மாகுலர் திசுச் சிதைவு என்னும் ஒரு வகையான கண் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கும்.
மேலும் எவ்வளவுக்கு எவ்வளவு ஒமேகா-3 கொழுப்பு அமில உணவுகளை உண்கிறோமோ, செல் பாதிப்பால் பார்வை இழப்பு ஏற்படுவதை பெருமளவில் தடுக்க முடியும்.

குடல் புற்றுநோய் அபாயம் குறையும்
உலகில் இரண்டாவதாக ஆண்களுக்கு மரணத்தை உண்டாக்கும் ஒரு வகையான புற்றுநோய் தான் குடல் புற்றுநோய். ஆனால் குறிப்பிட்ட சில உணவுகளை உண்பதன் மூலும், குடல் புற்றுநோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். அதிலும் ஒரு ஒரு நாளைக்கு குறைந்தது 90 கிராம் முழு தானியங்களை உண்பதன் மூலம், 17 சதவீதம் குடல் புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபட முடிவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்க புற்றுநோய் ஆய்வு மையம் கூறுகிறது. இதற்கு காரணம் முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து, செரிமான பாதையில் உள்ள கழிவுகளை முறையாக வெளியேறச் செய்து, புற்றுநோயை உண்டாக்கும் ஊக்குவிப்பான்களின் வளர்ச்சியைக் குறைக்கும்.

சிறுநீரக செயல்பாடு மேம்படும்
நமது உடலில் சிறுநீரகங்கள் சற்றும் ஓய்வின்றி, இரத்தத்தில் இருந்து கழிவுகள் மற்றும் அதிகமான நீரை வெளியேற்றும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் எலும்புகளை வலிமையாக வைக்கும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கின்றன. நாள்பட்ட சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக பாதிப்பால், அமெரிக்காவில் மட்டும் சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒரு நல்ல செய்தி என்னவெனில், ஆய்வு ஒன்றில் சுமார் 900 பேரைக் கொண்டு மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொள்ள வைத்ததில், நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயம் 50 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு இந்த டயட்டில் உள்ள பழங்கள், காய்கறிகள், நட்ஸ், ஆலிவ் ஆயில் மற்றும் மீன் போன்ற உணவுப் பொருட்கள், உடலினுள் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு காரணமான அழற்சியை குறைப்பது தான்.

எடை குறையும்
பல மருத்துவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தைக் கூறியிருப்பார்கள். எனவே மத்திய தரைக்கடல் டயட் மேற்கொண்டால், உடல் எடை குறையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முக்கியமாக மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொண்டால், கலோரிகளைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் மற்ற டயட்டுகளை விட, இந்த வகை டயட்டில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே ஆரோக்கியமான வழியில் எடையைக் குறைக்க நினைத்தால், மத்திய தரைக்கடல் டயட்டை மேற்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications