Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
விந்து வெளியேறும்போது சில துளிகள் ரத்தமும் கலந்து வந்தால் என்ன அர்த்தம்?
விந்துவில் ரத்தம் வெளியேறுவது என்பதற்கான காரணங்கள், அறிகுறிகள் ஆகியவை இங்கே விளக்கப்பட்டுள்ளன.
விந்து வெளியேறும் போது, அதில் சில துளிகள் ரத்தம் சேர்ந்து வெளியேறுவது பொதுவாக ஆண்களுக்கு மிகப் பெரும் கவலையைத் தரும். இப்படி விந்துவில் ரத்தம் வெளியேறுவது அவ்வளவு பெரிய பிரச்னைகள் என்று எதுவும் இல்லை.

40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால், இந்த அறிகுறியெல்லாம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. ஆனாலும்அதை அவ்வளவு சாதாரணமான விஷயமாகவும் எடுத்துக் கொள்ளவும் முடியாது. கொஞ்சம் கவனமாக இருக்க முடியாது.

விந்துவில் ரத்தம்
விந்தணுக்களில் ரத்தம் வெளியேறுவதை நம்மால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது தான். ஆனால் அப்படி விந்துவில் ரத்தம் வருவதற்கான காரணம் என்ன, அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன என்று நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது நல்லது. ஏனெனில் இதை தெரிநது கொண்டால் தான், இதுபோன்று திரும்பத் திரும்ப இந்த நிலை தொடராமல் இருக்கும். இதனால் சிறுநீர் வெளியேறுகின்ற பொழுது, எரிச்சலும் வலியும் உண்டாகும்.

காரணங்கள்
விந்துவில் ரத்தம் வெளியேறுவதில், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல், சிறுநீரகப் பிரச்னைகள் மட்டும் இல்லாமல் சில சமயம் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இப்படி ரத்தம் வெளியேறுதற்கான காரணங்கள் இன்னும் பல உண்டு.

நோய்த்தொற்று
விந்துவில் ரத்தம் வெளியேறுவதற்கான முதன்மையான காரணம் முதலில் நோய்த்தொற்று தான் காரணமாக அமைகிறது. சிறுநீர்த் தட்டுக்கள், விதைப்பை மற்றும் ஆணுறுப்பு ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் சில நோய்த் தொற்றுக்கள் இருப்பினும் கூட விந்துக்கள் வெளியேறுகிற பொழுது, ரத்தம் வெளியேறும் வாய்ப்புகள் உண்டு. பாக்டீரியா தொற்றுக்கள் இருப்பதினால் இந்த பிரச்னை உண்டாகலாம்.

விதைப்பை தொற்று
விதைப்பையில் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாவது என்பது 20 வயதுக்கு மேல் இருந்தாலே வருவது இயல்பு தான் என்றாலும் அது அடிக்கடி ஏற்பட்டால் சில பிரச்னைகள் உண்டாகும். இது சில சமயங்களில் விதைப்பை புற்றுநோயாகக் கூட மாறலாம். ஆனால் மற்ற புற்றுநோயைப் போல, இது உயிர்போகும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

குழாய் அடைப்பு
விந்து வெளியேறுகிற, அதாவது மறு உற்பத்தி நிகழ்வு நடக்கின்ற சிறிய குழாயில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் விந்து வெளியேறுவதில் இருக்கின்ற சிரமத்தினால் விந்து வெளியேறுகிற போது அந்த குழாய் சுவரில் உள்ள காயங்களின் வழியாக சில துளிக்ள ரத்தம் வெளியேறுவது உண்டு.

ரத்தக்குழாய் பிரச்னை
ரத்தக் குழாயில் ஏதேனும் சின்னதாய் கீறல், அல்லது வேறு ஏதாவது பிரச்னைகள் வந்தாலும் கூட, விந்தணுக்கள் வெளியேறுகிற பொழுது, சில துளிகள் ரத்தக் கசிவு உண்டாகும்.

வேறு அறிகுறிகள்
சிறுநீரில் ரத்தக்கசிவு உண்டாகும்.
நெஞ்செரிச்சல்
சிறுநீர் கழிக்கும்போது வலி உண்டாதல்
ஆணுறுப்பு வலி
காய்ச்சல்
ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications
