For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொண்டை பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க இதைக் குடிங்க!

தேனைப் பயன்படுத்தி தொண்டைப் பிரச்சனையை எளிதாக வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்று இதில் தெரிந்து கொள்ளலாம்.

|

வெயில் காலமோ மழைக்காலமோ பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தொற்று பரவலாகி வருகிறது. ஆரம்ப நிலையிலேயே இதனைக் கண்டறிந்தால் சிறிய பாதிப்புகளின் போதே நாம் தப்பித்து விடலாம். நாளடைவில் தானாக சரியாய்ப் போகும் என்று நாம் அசட்டையாகவிடுவது தான் பல பிரச்சனைகளின் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.

வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் முதலில் உங்களுக்கு அல்லது பெரும்பாலனோருக்கு தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல் போன்றவை ஏற்படும். இதை அப்படியே கவனிக்காமல் விட்டுவிட்டால் சளி,காய்ச்சல் என்று நோயின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே செல்லுமே தவிர குறையாது, அதனால் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே நாம் அதனை குறைக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எல்லாருடைய வீடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஓர் உணவுப் பொருள் தேன். குழந்தைகள் கூட அதனை விரும்பிச் சாப்பிடுவர். தேனை மட்டும் கொண்டு தொண்டையில் ஏற்படுகிற தொற்றை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் :

தேன் :

தேனில் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் நிறையவே இருக்கிறது. வைரஸ் தாக்குதலினால் வீக்கம் ஏற்பட்டிருந்தால் அதனை குறைக்கும். அதோடு தொண்டைக்கு உள்புறம் ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டிருந்தாலும் அதனை தீர்க்கும். இதில் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் என்ற என்சைம் இருக்கிறது. இது பாக்டீரியாவினை ஒழிக்கும்.

தேன் ஒரு ஹைபர்டோனிக் ஒஸ்மாட்டிக் வகையைச் சார்ந்தது. இதனைச் சாப்பிடுவதினால் அதிகப்படியாக எச்சில் சுரக்கும் இதனால் தொண்டையில் இருக்கிற திசுக்களில் ஏற்பட்ட பாதிப்பை தவிர்க்கலாம்.இப்போது தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தண்ணீர் :

தண்ணீர் :

ஒரு டம்பளர் தண்ணீர் சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடைன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். தண்ணீர் அதிக சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ இருக்க வேண்டாம். மிதமான சூட்டில் இருந்தாலே போதுமானது.

இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறை வரை குடிக்கலாம். சூடான தண்ணீரில் கலந்து குடிக்கமுடியவில்லை என்றால் வெறும் தேனை அப்படியே சாப்பிடுங்கள். எக்காரணம் கொண்டும் குளிர்ந்த நீரில் தேனைக் கலந்து குடிக்க வேண்டாம்.

இஞ்சி :

இஞ்சி :

வலியை விரட்ட இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் ஒர் அற்புத மருந்து என்று சொன்னால் அது இஞ்சி தான். இது பாக்டீரியாவிற்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டீஸ்ப்பூன் இஞ்சிச்சாறு என்றால் ஒரு டீஸ்ப்பூன் தேன், இரண்டும் சமமாக இருக்கவேண்டும். இஞ்சிச் சாறு எவ்வளவு கிடைக்கிறதோ அதற்கேற்ப தேன் எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சியுடன் நீர் :

இஞ்சியுடன் நீர் :

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்குங்கள். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும். சுத்தமாக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கக்கூடிய இஞ்சியை அதில் சேர்க்க வேண்டும். சுமார் பத்து நிமிடங்கள் வரை நீர் கொதிக்கட்டும். இஞ்சியை போட்டவுடன் அடுப்பை சிம்முக்கு மாற்றிவிடுங்கள். குறைந்த தீயில் லேசாக கொதித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

பின்னர் இறக்கிவிடலாம். குடிக்கும் அளவிற்கு சூடு குறைந்ததும் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இதைக் குடிப்பதினால் தொண்டை வலி இருந்தல குறைந்திடும்.

பால் :

பால் :

பாலுக்கு எரிச்சலை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. பாலை சூடாக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பால் கலந்து குடிக்கலாம். இதனை இரவு தூங்குவதற்கு முன்னால் குடித்தால் தொண்டைப் பிரச்சனை இல்லாமல் இரவு நிம்மதியாக தூங்கலாம். பகல் நேரங்கள் சூடான தண்ணீரில் கலந்து குடிப்பது தான் நல்லது.

 எலுமிச்சை :

எலுமிச்சை :

எலுமிச்சையில் இருக்கக்கூடிய தாதுக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக போராடும் இதனால் தொண்டை வலி, எரிச்சல், சளித்தொல்லை ஆகியவற்றை நீக்கிட உதவிடும். எலுமிச்சை சாறு ஒரு டேபிள் ஸ்பூன், தேன் இரண்டு டீஸ்பூன் மற்றும் மிளகுப் பொடி அரை டீஸ்பூன் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் எலுமிச்சை சாறு தயார் செய்து கொண்டு அவற்றில் தேன் மற்றும் மிளகுத்தூளை சேர்க்கலாம்.

மிளகு :

மிளகு :

ஒரு கப்பில் தண்ணீரை சூடாக்கி எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் தேன் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கலந்திடுங்கள் மிளகினை தூளாக சேர்த்தால் மட்மே தண்ணீரைல் விரைவாக கரையும் இல்லையென்றால் அது அப்படியே நிற்கும் அதோடு குடிக்கும் போது சிக்கிக் கொண்டு தொல்லையை ஏற்படுத்தும்.

இதனை நீங்கள் தினமும் கூட குடிக்கலாம். பாக்டீரியாக்களை எல்லாம் விரைவில் கொல்லும் என்பதால் இதனை நீங்கள் தாரளமாக பயன்படுத்தலாம்.

தேனில் டீ :

தேனில் டீ :

இதற்கு தேவையான பொருட்கள் தேன், இஞ்சி,பட்டை, மிளகு. ஒரு டம்பளர் தண்ணீரில் இவை எல்லாவற்றையும் ஒரேயளவு சேர்த்து கொதிக்க வைத்திடுங்கள். பின்னர் அதன் சூடு ஆறியதும் தேன் கலந்து குடிக்கலாம். இதனைக் குடிப்பதினால் இதமான உணர்வைக் கொடுக்கும், இதனை நீங்கள் இரவில் தூங்குவதற்கு முன்னால் குடித்தால் நன்றாக தூக்கம் வரவைக்கும்.

மஞ்சள் :

மஞ்சள் :

மஞ்சளில் ஆண்ட்டி பயோட்டிக் தன்மை நிறையவே இருக்கிறது. இது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடும். ஒரு டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். அதனை அப்படியே விழுங்கலாம்.

இல்லையென்றால் லேசாக சுடவைக்கப்பட்ட தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூளைக் சேர்த்து முதலில் நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின்னர் அதில் ஒரு டீஸ்புன் தேன் கலந்து குடிக்கலாம்.

பூண்டு :

பூண்டு :

இதனை தயாரிக்க உங்களுக்கு தேவையான பொருட்கள் பூண்டு மூன்று முதல் ஐந்து வரை. தேன் இரண்டு டேபிள் ஸ்பூன்,தண்ணீர் ஒரு கப் . முதலில் பூண்டினை தோல் நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் அதனை தேன் இருக்கிற பவுலில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

மறு நாள் தண்ணீரை சூடாக்கி அதில் தேனில் ஊறியிருக்கக்கூடிய இந்த பூண்டினை இரண்டு சேர்த்து அப்படியே குடிக்கலாம்.

பட்டை :

பட்டை :

பாலை குடிக்கும் அளவிற்கு சூடாக்கிக் கொள்ளுங்கள். பச்சைப் பாலாக இருந்தால் நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேன், இஞ்சித்தூள் அல்லது இஞ்சிச் சாறு மற்றும் பட்டைத்தூள் ஒரு டீஸ்ப்பூன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதனை குடித்து வர தொண்டைப்பிரச்சனை சட்டென குறைந்திடும்.

 ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

தண்ணீரை சூடாக்கி அதில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து கொள்ளுங்கள் பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சூடு குறையாமல் அப்படியே குடித்திட வேண்டும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் செய்து குடித்திடலாம்.

இல்லையென்றால் சூடான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து அதனைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்த நீரை அப்படியே துப்பிடுங்கள். இது தொண்டையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினை அகற்றிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Home Remedies For Sore Throat Using Honey

Best Home Remedies For Sore Throat Using Honey
Story first published: Monday, May 7, 2018, 12:04 [IST]
Desktop Bottom Promotion