Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
தட்டையான வயிறு வேணுமா? இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடாதீங்க
சிலசமயம் நீங்கள் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளே உங்கள் வயிற்றின் கொழுப்பை குறையாமல் தடுக்கிறது.உண்மைதான் ஆரோக்கியம் என நினைத்து சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் உங்கள் தொப்பையை குறையாமல் தடுக்கும் மேல
ஒல்லியான தேகமும், தட்டையான வயிறும் யாருக்குத்தான் பிடிக்காது. அதற்காக நாம் செய்யும் முயற்சிகளும், உடற்பயிற்சிகளும் சிலசமயம் பயன்களை அளித்தாலும் பலசமயம் அவை விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகத்தான் போகிறது. அதற்கு காரணம் நம்முடைய ஆரோக்கியமற்ற உணவுமுறைதான். அதிலும் சிலசமயம் நீங்கள் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகளே உங்கள் வயிற்றின் கொழுப்பை குறையாமல் தடுக்கிறது.

உண்மைதான் ஆரோக்கியம் என நினைத்து சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் உங்கள் தொப்பையை குறையாமல் தடுக்கும் மேலும் வயிற்றில் வீக்கத்தையும் ஏற்படுத்தும். அந்த உணவுகள் ஆரோக்கியமானவைதான் ஆனால் அவற்றை நீங்கள் சாப்பிடும் நேரம் மற்றும் அளவு அவற்றை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும். அப்படி எந்தெந்த ஆரோக்கிய உணவுகள் நீங்கள் தட்டையான வயிறு பெறுவதை தடுக்கிறது என்று பார்க்கலாம்.

தயிர்
வெறும் தயிர் உங்கள் குடலுக்கு நல்லது, இதில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் செரிமானத்தை சீராக்கக்கூடியது. ஆனால் சுவையூட்டப்பட்ட தயிரை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இதில் உள்ள அதிகளவு சர்க்கரை வாயுக்கோளாறு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

தானியங்கள்
நிபுணர்களின் கூற்றுப்படி கம்பு மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் ப்ரெக்டொன் என்னும் பொருள் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட் எளிதில் செரிக்காது, மேலும் இது குடல்களில் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தக்கூடும். இதனால் குடலில் வீக்கங்கள் ஏற்படலாம்.

தர்பூசணி
தர்பூசணி வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அதுதான் உண்மை, இதற்கு காரணம் தர்பூசணிக்கு இயற்கை இனிப்பு சுவையை அளிக்கும் ப்ரெக்டொஸ் ஆகும். தொடர்ச்சியாக ப்ரெக்டொஸ் எடுத்துக்கொள்வது உங்களின் வயிற்றுச்சதையை அதிகரிக்கும்.

வெங்காயம்
தானியங்களில் காணப்படும் அதே கார்போஹைட்ரேட் வெங்காயத்திலும் இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். ப்ரக்டன் என்னும் இந்த பொருள்எளிதில் செரிமானம் ஆகாமல் இருப்பதுடன் உங்கள் உடலில் உள்ள நீரின் அளவையும் குறைக்கக்கூடும். இதன் விளைவாக உங்கள் வயிற்றில் வீக்கம் ஏற்படக்கூடும்.

பால்
பிரபல பால் பொருட்களான சீஸ், தயிர் போன்ற பொருட்களில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது இதனை அதிகம் எடுத்துக்கொள்வது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி செரிமான கோளாறுகள் உங்கள் வயிறை பெரிதாக்கக்கூடும். இது மற்ற பிரச்சினைகள் ஏற்பட காரணமாய் அமைகிறது.

பருப்பு
சில பருப்பு வகைகள் உண்மையில் நல்ல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும், ஆனால் சில பருப்புகள் வாயுக்கோளாறு மற்றும் வயிறு வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதிக நார்ச்சத்துக்கள் உள்ள பருப்புகளான பீன்ஸ், பட்டாணி மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பருப்புகள் எளிதில் செரிமானம் அடையாமல் இருப்பதுடன் வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்துக்கள், ப்ரக்டோஸ் மற்றும் சார்பிடோல் போன்ற பொருட்கள் அவற்றை குடலுக்கு தீங்கானதாக மாற்றுகிறது. ஆப்பிளை இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது ஆரோக்கியமற்றது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்கறிகள்
ப்ரோக்கோலி, காலிபிளவர், கேல் போன்ற காய்கறிகளில் ராபினோஸ் என்னும் பொருள் உள்ளது. ஒருவகை கார்போஹைட்ரேட்டான இதனை மனித உடலால் தாங்கிக்கொள்ள இயலாது. ராபினோஸ் உள்ள காய்கறிகள் வயிறு மற்றும் குடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.



Click it and Unblock the Notifications
