லோ பிரசர் இருப்பவர்கள் இதை தினமும் குடித்தால் நல்லது!

Posted By:
Subscribe to Boldsky

வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே நமக்கு பல்வேறு பிரச்சனைகள் ஆரம்பித்து விடும். இது ஒரு புறம் என்றால் வெயில் சீசனில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களின் வரத்தும் அதிகரிக்கத்துவங்கிவிடும். வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று மாம்பழம்.

மாம்பழம் பற்றியும், அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் ஏராளமான தகவல்களை ஏற்கனவே நமக்கு தெரிந்திருக்கும். இந்த முறை மாம்பழம், மாங்காய் ஆகியவற்றை தவிர்த்து மாவிலைகளைப் பற்றி பார்க்கப்போகிறோம்.

பண்டிகை நாட்களில் நம் வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதுடன் அதன் வேலை முடிந்து விட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் மாவிலையில் எண்ணற்ற சத்துக்கள் இருக்கிறது தெரியுமா? அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன அவற்றை நாம் பயன்படுத்துவதால் நமக்கு என்ன நன்மை கிடைக்கிறது ஆகியவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாவிலையில் என்ன இருக்கிறது :

மாவிலையில் என்ன இருக்கிறது :

மாவிலை எப்போது ஸ்டிஃபாக இருக்கும். அதோடு பார்க்கும் போதே சற்று காய்ந்த இலையாக இருக்குமோ என்று கூட தோன்றும் . ஆனால் அதன் வாசம் ஊரையே இழுக்கும் என்று சொல்லலாம்.

மாவிலையில் விட்டமின்கள் ஏ,சி,பி,இ ஆகியவை இருக்கிறத். இவற்றை தவிர எதில் அசிடேட்,அல்கலாய்டு,டேனின், கில்கோசிட், மேக்னஃபிரின்,ஃபேலவனாய்டு,பீட்டாகரோட்டி,டயட்டரி ஃபைபர்,மக்னீசியம் என ஏரளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

மாவிலையில் டேனின் மற்றும் ஆந்தோசைனின் ஆகியவை இருக்கிறது.இவை சர்க்கரை நோயின் ஆரம்பக்கட்டத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் வராமல் இது தடுத்திட உதவிடுகிறது.

இதைத்தவிர சர்க்கரை நோயினால் கண்களில் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கவும் இது உதவுகிறது. அதோடு இதில் டாராஎக்ஸ்ரோல் என்ற சத்து இன்ஸுலின் சுரப்பை சீர்படுத்துகிறது.

நீர் :

நீர் :

முதல் நாள் இரவு மாவிலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பின்னர் அதனை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பத்து நிமிடம் நன்றாக கொதிக்கட்டும். அதன் பிறகு இரவு முழுவதும் மாவிலை அந்த தண்ணீரிலியே ஊறட்டும். மறுநாள் காலை மாவிலைகளை எடுத்துவிட்டு அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

ஐரோப்பாவைச் சேர்ந்த மருத்துவர்கள் மாவிலைகளை சர்க்கரை நோய் போக்கும் மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார்களாம். இது சர்க்கரை நோயின் தீவிரத்தை குறைக்கும் என்கிறார்கள்.

யூரிக் அமிலம் :

யூரிக் அமிலம் :

வாதப் பிரச்சனையை தவிர்க்க நம் உடலில் யூரிக் அமிலம் அவசியமாகும். இதற்கு நீங்கள் மாவிலை நீர் குடிக்க வேண்டும். இதற்கு குருத்தாக இருக்கக்கூடிய இளம் மாவிலைகள் கிடைத்தால் நல்லது. முதலில் அவற்றை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அதில் சூடான கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து விட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரின் நிறம் மாறியிருக்கும். இப்போது அந்த நீரை வடிகட்டை தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

மவுத் வாஷ் :

மவுத் வாஷ் :

மாவிலை பற்களின் ஆரோக்கியத்திற்கும், ஈறுகளின் உறுதித்தன்மைக்கும் பெரிதும் உதவிடுகிறது. மாவிலை நீரைக் கொண்டு வாய்கொப்பளிக்க வேண்டும். வாயில் அதிக எச்சில் சுரப்பினை கட்டுப்படுத்துகிறது. அதோடு வாயில் உள்ள தொற்று, கிருமி,பாக்டீரியா ஆகியவை இருந்தால் அவற்றையும் நீக்கிடும்.

குழந்தைப் பேறு :

குழந்தைப் பேறு :

ஆரம்ப காலத்தில் குழந்தை பேறுக்கான இயற்கை மருந்தாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.சின்ன வெங்காயச் சாறு மூன்று டீஸ்பூன், ஒரு கைப்பிடியளவு மாவிலைகள் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை பாதியாளவு ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை வடிக்கட்டி குடித்திடலாம்.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று இது. இதனையும் தீர்க்க மாவிலைகள் உதவுகின்றன. இது ரத்த நாளங்களை சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தினை சுத்தப்படுத்துகிறது. தினமும் இந்த மாவிலை நீர் குடித்து வந்தால் அது ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.

லோ பிரசர் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

கிட்னி கற்கள் :

கிட்னி கற்கள் :

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் குழந்தைகளுக்கே பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன. நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுவது போதியளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது ஆகியவை தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.

மாவிலைகளை நிழலில் உளர்த்தி காயவைத்து பின் அதனை அரைத்து பவுடர் செய்து கொள்ளுங்கள். மாவிலைகளுக்கு பதிலாக இந்த பொடியை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

மாவிலைகள் ஆஸ்துமா பிரச்சனைக்க்கு சிறந்த தீர்வினை கொடுக்கிறது. மாவிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் நுரையிரல் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அதோடு தொண்டை அடைப்பு ஏற்பட்டிருந்தால் கூட இதனை முயற்சி செய்யலாம். நல்ல பலன் கொடுக்கும்.

இந்த மாவிலை நீர் சூடாக அருந்தவேண்டும்.

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் :

ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் :

மாவிலையில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இவற்றில் இருக்கும் விட்டமின் சி நம் உடலில் நச்சுக்களை வெளியேற்ற உதவும் அதோடு டிஎன்ஏ பாதிப்புகளை தவிர்க்க உதவிடுகிறது. அதிக வெயிலினால் சருமத்தில் ஏற்படுகிற பாதிப்புகள், பாக்டீரியா தொற்றினால் ஏற்படுகிற வயிற்றுப் போக்கு ஆகியவற்றை தீர்க்கவும் மாவிலை நீர் உதவிடுகிறது.

இது சருமம் சார்ந்த பிரச்சனைகள், சரும வறட்சி ஆகியவற்றையும் தீர்க்க உதவிடுகிறது.

விட்டமின்ஸ் :

விட்டமின்ஸ் :

இதில் பலவிதமான விட்டமின்கள் இருக்கின்றன. தினமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு விட்டமின் அவசியமான ஒன்றாகும். வறுமையான சூழல்கள் மற்றும் சில நாடுகளில் மாவிலைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் தங்களுக்கு தேவையான சத்துக்கள் எல்லாம் கிடைக்கிறது என்பதால் அதனை மருந்தாக பார்க்காமல் உணவாகவே எடுத்துக் கொள்ளக்கூடியவர்களும் உண்டு .

அதிகமாக சாப்பிட்டால் :

அதிகமாக சாப்பிட்டால் :

என்ன தான் அருமையான மருத்துவ குணங்களை கொண்டது என்றாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் தானே, இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய மாவிலைகளை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அப்படிச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உங்கள் எல்லாருக்கும் ஏற்படக்கூடும்.

மாவிலை நீரை குடித்ததினால் என்று எந்த பின் விளைவுகள் ஏற்படாது. உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி பிரச்சனை இருக்கிறது என்றால் இதை எடுத்துக் கொள்வதற்கு முன்னால் மருத்துவ ஆலோசனை பெற்றிடுங்கள். இதைத் தவிர மாவிலை நீரை அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு செரிமானக் கோளாறு ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Benefits Of Mango Leaves

Amazing Benefits Of Mango Leaves
Story first published: Friday, April 13, 2018, 17:47 [IST]