For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய்க்கு எந்த வயதில் பரிசோதனை செய்ய வேண்டும்?

புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்களுக்கு மட்டும் ஏற்பட கூடிய ஒரு புற்றுநோயாகும். பொதுவாக இது 40 முதல் 55 வயது வரை உள்ளவர்களை தாக்குகிறது. DRE மற்றும் PSA பரிசோதனை மூலம் இந்த நோயை கண்டறியலாம்

|

புரோஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களை பாதிக்கக்கூடிய ஒரு புற்றுநோயாகும். இது புரோஸ்டேட் சுரப்பியை பாதிப்பதுடன் அங்கே சில திரவங்களை சுரக்க செய்கிறது, மேலும் ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். புரோஸ்டேட் என்பது சிறுநீர்பைக்கு கீழே இருக்கும் ஒரு சுரப்பியாகும். இதனை குணப்படுத்துவது எளிமையானது சரியான நேரத்தில் கண்டறிந்து விட்டால் இல்லையெனில் இது உயிரிழப்பு வரை ஏற்படுத்தக்கூடும்.

Health

ஆண்களுக்கு அதிகளவில் ஏற்படும் இரண்டாவது புற்றுநோய் புரோஸ்டேட் கேன்சர் ஆகும், முதலாவது தோல் புற்றுநோய். இது தாக்குவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும், அப்போதே நாம் எச்சரிக்கையாக மருத்துவரை அணுகவேண்டும். ஆண்களின் வயதை பொறுத்து இதன் பாதிப்பு இருக்கும். எந்த வயது ஆண்களை புரோஸ்டேட் புற்றுநோய் அதிகம் தாக்கும் என இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

புரோஸ்டேட் புற்றுநோய்க்கு ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரிவது இல்லை ஆனால் சில அறிகுறிகள் புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளவும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் குறிப்பாக இரவு நேரங்களில், சிறுநீருடன் இரத்தம் சேர்ந்து வருதல், சிறுநீர் கழித்தலின் பொது எரிச்சல் மற்றும் குறைந்த அளவு விந்து வெளியேறுதல். இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ஒருவேளை புற்றுநோய் முற்றியிருந்தால் இடுப்பு மற்றும் எலும்புகளில் வலி, கால்களில் வலுவின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும்.

எந்த வயதில் தாக்கும்

எந்த வயதில் தாக்கும்

முன்பெல்லாம் 40 வயதை தாண்டியவர்களுக்குத்தான் இந்த புற்றுநோய் தாக்கும் அபாயம் இருந்தது. ஆனால் தற்போது 30 வயதிலேயே இந்த நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் 25 வயதினர் கூட புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 50 வயதை கடந்தவர்களுக்கு இது ஏற்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் உயிர்வாழலாம். 45 வயதில் இருப்பவர்களுக்கு இந்த நோய் தாக்க வாய்ப்புகள் அதிகம். உங்கள் முன்னோர்களில் யாருக்கேனும் இந்த நோய் இருந்தாலும் உங்களுக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 40 வயதுகளில் இருப்பவர்களுக்குதான் அபாயம் மிக அதிகம். இவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

உங்களுக்கு சோதனை தேவையா?

உங்களுக்கு சோதனை தேவையா?

இந்த பரிசோதனை செய்துகொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் இதன் நன்மை தீமைகளை [பற்றி நன்கு கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பரிசோதனையில் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோயை கண்டறிவது சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக இருக்கும். எதுவாக இருப்பினும் அறிகுறிகள் தென்படும்போது அதனை சோதனை செய்து உறுதிசெய்து கொள்வதே சிறந்தது. உங்கள் வயது உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்காது மறந்துவிடாதீர்கள்.

சோதனை 1

சோதனை 1

புரோஸ்டேட் சோதனையில் புதிதாக ஒன்றுமில்லை, ஆனால் உங்களுக்கு ஒருவேளை மூல நோய் இருந்தால் முன்கூட்டியே உங்கள் மருத்துவரிடம் கூறிவிடுங்கள், டிஆர்ஈ(DRE) பரிசோதனை இந்த நிலைமையை மோசமாக்ககூடும். புரோஸ்டேட் சோதனை செய்துகொள்ள விரும்பினால் உங்கள் மருத்துவர் இரத்த பரிசோதனை செய்துகொள்ள முதலில் அறிவுறுத்துவார். மேலும் ஒப்புதல் படிவத்தில் கையெப்பம் வாங்கிக்கொள்வார்.

சோதனை 2

சோதனை 2

பெரும்பாலும் மருத்துவர்கள் புரோஸ்டேட் மருத்துவ சோதனைக்கு இரத்த பரிசோதனையுடன் நிறுத்திவிடுவார்கள். சிலசமயம் அவர்கள் துல்லிய முடிவுகளுக்காக டிஆர்ஈ(DRE) பரிசோதனை செய்ய சொல்லுவார்கள். இந்த சோதனையில் உங்கள் மலக்குடலில் ஏதேனும் கட்டியோ அல்லது வீக்கமோ இருக்கிறதா என சோதனை செய்யப்படும். ஒருவேளை உங்களுக்கு நோய் முற்றியிருந்தால் இந்த பரிசோதனையில் எளிதாக கண்டறிந்து விடலாம். உங்களுக்கு மூலநோய் இருந்தால் டிஜிட்டல் மலக்குடல் சோதனை செய்ய இயலாது.

சோதனை 3

சோதனை 3

இந்த சோதனையிலிருந்து உங்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் உள்ளதா அல்ல வேறு ஏதேனும் அசாதரண சூழ்நிலை உள்ளதா என அறியலாம். பெரும்பாலும் இந்த சோதனையின் முடிவில் நோய் இல்லையென முடிவு வரலாம் இல்லையெனில் புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது முற்றிய நிலையில் உள்ள புரோஸ்டேட் புற்றுநோய் அல்லது மலக்குடலில் உள்ள வேறு ஏதேனும் நோய் கண்டறியப்படும். ஒருவேளை துல்லிய முடிவுகள் கிடைக்கவில்லயெனில் பிஎஸ்ஏ(PSA) இரத்த பரிசோதனை செய்ய பரிந்துரைப்பார். இந்த இரண்டு சோதனையிலும் முடிவுகள் அசாதாரணமாய் இருந்தால் எம்ஆர்ஐ ஸ்கேன், புரோஸ்டேட் பயாப்சி என்ற சோதனைகளுக்கு பரிந்துரைப்பார்.

முடிவுகள்

முடிவுகள்

DRE முடிவுகள் சாதரணமாய் இருந்தால் மேற்கொண்டு உங்களின் வயது, பழக்கவழக்கங்ள் மற்றும் PSA அளவை அடிப்படையாக கொண்டு முடிவுகள் அறியப்படும். PSA அளவு 2.5 க்கு குறைவாக இருந்தால் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்தால் போதும் ஒருவேளை PSA அளவு 2.5 க்கு அதிகமாக இருந்தால் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஒருவேளை முடிவுகள் சரியாக தெரியவில்லை எனில் மேற்கொண்டு சில பரிசோதனைகள் செய்யப்படும். ஆனால் இவை சில பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே மருத்துவரின் ஆலோசனை பேரில் அடுத்தக்கட்ட பரிசோதனைகளை செய்யவும்.

ரேடிக்கல் புரோசக்டமி

ரேடிக்கல் புரோசக்டமி

புற்றுநோயின் அளவு சிறியதாக இருந்தால் செய்யபடும் சிகிச்சை ரேடிக்கல் புரோசக்டமி ஆகும். அறுவைசிகிச்சை மூலம் புற்றுநோயை அகற்றும் இம்முறையில் 10 நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடலாம். இது சற்று விலை அதிகமான சிகிச்சை முறையாகும்.

பிராச்சிதெரபி

பிராச்சிதெரபி

இம்முறையில் கதிரியக்க மூலக்கூறுகள் புரோஸ்டேட் சுரபிக்குள் பொருத்தப்பட்டு புற்றுநோய் கட்டிகள் அழிக்கப்படும். இதுவும் விலையுயர்ந்த சிகிச்சை முறைதான்.

பாதிப்புகள்

பாதிப்புகள்

புரோஸ்டேட் சுரப்பி இனப்பெருக்கத்துடன் தொடர்புகொண்டிருப்பதால் இது பெரும்பாலும் தாம்பத்ய வாழ்க்கையையும், விந்து உற்பத்தியையும் பாதிக்கிறது. ரேடியோ கதிர்வீச்சுகள் திசுக்களை பாதிப்பதால் விந்தணுக்கள் பாதிக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிகிச்சைக்கு முன்னரே உங்களின் விந்தணுக்களை விந்தணு வங்கிகளில் சேமித்து கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health health care cancer
English summary

Prostate cancer affects which age group

Prostate cancer affects mostly only men. The prostate is located just below the bladder in front of the rectum. Generally it will affect 40 -55 age group men. It can detect by DRE and PSA test.
Desktop Bottom Promotion