நீங்கள் அலட்சியம் செய்யக் கூடாத உடல் வலிகள்!

Posted By: Saravanan Kirubananthan
Subscribe to Boldsky

வலி என்ற உணர்வு இல்லாமல் இருந்தால், நம் உடலில் உள்ள ஒரு காயம் அல்லது கோளாறை பற்றி நமக்கு தெரிய வராது குறிப்பாக உடலுக்குள் உள்ள பிரச்சனைகளை வலியால் மட்டுமே நம்மால் உணர முடியும். இதற்கு காரணம், வலி என்பது பல்வேறு நிலைகளுக்கு உதாரணமாக உள்ளது. குறிப்பாக ஒரு காயத்தால் ஏற்படும் தொ்று அல்லது வீக்கம் என்பது வலியால் உணரப்படுகிறது. நரம்பு அல்லது திசுக்கள் உடலின் எதாவது ஒரு பகுதியில் வீங்கும் போது, அந்த இடத்தில் வலி உண்டாகிறது.

9 types of body aches you must never ignore

அந்த இடத்தில ஏற்பட்ட தொற்றின் காரணமாக இரத்த ஓட்டம் தடைபடுகிறது. சில நேரத்தில் சில வகை வலிகள் மிகும் ஆழமானதாக உள்ளது. அந்த நேரத்தில் நாம் மருத்துவ உதவியை நாடுகிறோம். சில வலிகள் மிகவும் ஆழமானதாக இல்லாமல் இருப்பதால் நாம் அதனை அலட்சியம் செய்கிறோம் . ஆனால் அதுவே நமக்கு சில நேரத்தில் ஆபத்தை விளைவிக்கிறது.

ஆகவே, இங்கு சில உடல் வலி வகைகளை குறிப்பிட்டுள்ளோம். அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 முதுகு வலி :

முதுகு வலி :

பலர் தங்கள் வாழ்வில் முது வலியை அனுபவித்திருப்பார்கள் . குறிப்பாக வயது அதிகரிக்கும்போது, பொதுவாக அனைவருக்கும் முதுகு வலி உண்டாகும். முதுகு தசைகள் உடலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளுக்கு ஆதரவாக இருப்பதால் இந்த பகுதிக்கு அதிக சிரமங்கள் உண்டாகிறது. நீங்கள் தொடர்ச்சியாக முதுகு வலியை உணர்ந்து அதனுடன் கால் பதங்களிலும் விரல்களிலும் ஒரு வித கூச்ச உணர்வை அனுபவித்தால் உடனடியாக இதனை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகலாம். முதுகு தண்டின் டிஸ்கில் சேதம் ஏற்பட்டாலும் இந்த வித வலிகளை அனுபவிக்க முடியும்.

 தாடை வலி :

தாடை வலி :

பலர் தாடை வலியை அடிக்கடி அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே தாடையில் வலி ஏற்பட்டாலும், அதனை அழுத்தத்தின் காரணமாக வந்திருக்ககூடும் என்று நினைத்து அலட்சியமாக இருப்பர் . இது உண்மை தான். தாடை வலி என்பது மன அழுத்தம் அதிகம் உண்டாகும்போது ஏற்படுவது தான். ஆனால் இந்த வலி, தாடை தசைகளை கடினமாக்குகிறது. எப்படி இருந்தாலும், அடிக்கடி தாடை கடினமாக மாறி வலி ஏற்படுவதால் நெஞ்சு வலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சில வகை இதய நோயின் அறிகுறியாகவும் இந்த தாடை வலி பார்க்கப்படுகிறது.

நாட்பட்ட மாதவிடாய் வலி :

நாட்பட்ட மாதவிடாய் வலி :

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் முதல் இரண்டு நாட்களுக்கு இந்த வலி உண்டாகிறது. இதற்கு காரணம், கர்பப்பை சுவற்றில் ஏற்படும் வீக்கமாகும். வீக்கத்தை குறைக்கும் மருந்துகளால் இந்த வலிகள் எளிதில் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த நாட்களில் பொதுவாக எல்லா பெண்களும் இத்தகைய வலிகளை அனுபவித்தே வருகின்றனர். ஆனால் இதே மாதவிடாய் வலி, நாட்பட்டு இருக்கும்போது, எந்த மருந்துகளும் இதனை சரி செய்யாதபோது, மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம். கர்பப்பை புற்று நோய் அல்லது பால்வினை நோய்களுக்கான அறிகுறியாகவும் இந்த வலிகள் இருக்கலாம்.

தலைவலி :

தலைவலி :

இன்றும் என்றும் எல்லா மனிதனும் உணரக்கூடிய ஒரு வலி தலை வலி ஆகும். இந்த தலை வலிக்கான காரணங்கள் மன அழுத்தம் முதல் புற்று நோய் வரை இருக்கும். ஆகவே இதனை அலட்சியம் செய்யாமல் தலை வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது என்பது மிகவும் அவசியம் ஆகும். தலை பகுதியில் கூர்மையான வலி நீண்ட நேரம் இருக்குமாயின்,அது பிரைன் ட்யுமர் எனப்படும் மூளை கட்டியாக அல்லது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் ஆகவே உடனடி மருத்துவ சிகிச்சை என்பது அவாசியமாகிறது.

அடி வயிறு வலி :

அடி வயிறு வலி :

அடி வயிறு வலி என்பது பொதுவாக எல்லோருக்கும் வரும் வலி ஆகும். குறிப்பாக அசிடிட்டி அல்லது வாய்வு கோளாறு போன்ற செரிமான தொந்தரவுகள் உள்ளவர்களுக்கு இந்த வலி அடிக்கடி வரும். ஆனாலும், வலது பக்க அடி வயிற்று பகுதியில் லேசான வலி தொடர்ந்து இருக்கும்பட்சத்தில் அது அப்பெண்டிக்ஸ் என்ற நோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனை உறுதி செய்ய ஒரு ஸ்கேன் செய்து பார்ப்பது நலம். அப்பெண்டிக்ஸ் நோயை அலட்சியம் செய்வது உயிருக்கு ஆபத்தான ஒரு செயலாகும்.

 பாத வலி :

பாத வலி :

நீங்கள் நீண்ட தூரம் நடந்து கொண்டே இருப்பவரா அல்லது நாள் முழுதும் உங்கள் பாதங்களை கொண்டு உங்கள் பணிகளை செய்பவரா, உங்களுக்கு எப்போதாவது பாத வலி உண்டாவது என்பது ஒரு சாதாரணமான விஷயம் தான். ஆனால் தொடர்ந்து சொல்ல முடியாத அளவிற்கு உங்கள் பாதங்களில் வலி ஏற்பட்டால், அதோடு உங்கள் கால் மற்றும் பாதங்களில் உணர்வற்ற தன்மை இருக்குமானால், அது நீரிழிவின் அறிகுறியாக இருக்கும். ஆகவே இதற்கு உடனடி சிகிச்சை மிகவும் அவசியம்.

நடு முதுகு வலி :

நடு முதுகு வலி :

உங்கள் நடு முதுகில் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருப்பது, அதுவும் எந்த ஒரு காயம் ஏற்படாமல், தொடர்ச்சியான வலி இருப்பது அலட்சியம் செய்யகூடாத ஒரு வலி ஆகும். நடு முதுகு எந்த ஒரு காரணமும் தெரியாமல் வலிக்கும் போது உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது. இந்த வலியுடன் சேர்ந்து காய்ச்சலும் இருந்தால் சிறுநீரக தொற்றுகள் இருக்கும் வாய்ப்புகள் உண்டு. சிறுநீரக பிரச்னையை அலட்சியம் செய்வதால் இறப்பும் சாத்தியமாகும். ஆகவே அலட்சியம் செய்யாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.

 கெண்டைக்கால் வலி :

கெண்டைக்கால் வலி :

உங்கள் கெண்டை காலில் உள்ள தசைகளில் தொடர்ந்து வலி இருப்பதை உணர்ந்தால், அதுவும் அதிக தூரம் நடக்காமல், உடற்பயிற்சி செய்யாமல் இந்த வலி உண்டாகும்போது, கால்சியம் குறைபாடு இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது எலும்புப்புரை நோயின் காரணமாக இந்த வலி ஏற்படலாம். கால்சியம் குறைபாடு முதலில் கெண்டைகால் தசைகளை தான் பாதிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

விந்தகத்தில் வலி :

விந்தகத்தில் வலி :

நீங்கள் ஆண்களாக இருக்கும்பட்சத்தில் விந்தகத்தில் தொடர்ந்து கூர்மையான வலி நீடித்துக் கொண்டு இருந்தால், பால்வினை தொடர்பான நோய்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. அல்லது விந்தக புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. ஆகவே உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 types of body aches you must never ignore

9 types of body aches you must never ignore