For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறட்டைப் பிரச்சனையை குணப்படுத்தும் சில பாட்டி வைத்தியங்கள்!

இங்கு குறட்டைப் பிரச்சனையை குணப்படுத்தும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

குறட்டை ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக கஷ்டப்படுகிறார்கள். அதோடு, உடல் பருமன் கொண்டவர்களும் குறட்டை விடுவார்கள். குறட்டை தீவிர பிரச்சனையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இதனால் வாழ்க்கை துணையும், அருகில் உறங்குவோரும் தான் அதிக கஷ்டப்படுவார்கள்.

14 Granny Remedies To Cure Snoring

ஆனால் நாள்பட்ட மற்றும் பயங்கர சப்தத்துடனான குறட்டை என்பது சரியான நேரத்தில் கவனிக்க வேண்டிய சுகாதார பிரச்சனையாகும். ஒருவருக்கு குறட்டையானது தொண்டையில் உள்ள தசைகள் தளர்ந்து இருக்கும் போது, காற்று உள்ளே சென்று வரும் போது ஏற்படும் அதிர்வுகளால் வருவது ஆகும். மேலும் குறட்டை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நெஞ்சு சளி உள்ளவர்களுக்கும் வரும்.

இக்கட்டுரையில் குறட்டை பிரச்சனையை சரிசெய்யும் சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து முயற்சித்து, குறட்டையில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதினா

புதினா

புதினாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொண்டை மற்றும் மூக்கின் புறணியில் உள்ள சவ்வுகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் புதினா மென்மையான சுவாசத்தை ஊக்குவிக்கிறது.

* ஒரு டம்ளர் நீரில் 2 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்நீரால் இரவில் தூங்கும் முன் வாயைக் கொப்பளியுங்கள்.

* வேண்டுமானால் இரவில் படுக்கும் முன் புதினா எண்ணெயை நன்கு சுவாசித்துக் கொள்ளுங்கள். இதனாலும் குறட்டையைத் தவிர்க்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சுவாச பாதையில் உள்ள வீக்கத்தைக் குறைத்து, திசுக்களை மென்மையாக்கி, சுவாசத்தை சீராக்கும். மேலும் ஆலிவ் ஆயில் தொண்டையில் உள்ள அதிர்வைக் குறைத்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

* அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை 2 துளி சாப்பிடுங்கள்.

* இல்லாவிட்டால், 1/2 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

ஆவி பிடிப்பது

ஆவி பிடிப்பது

மூக்கடைப்பு காரணமாகத் தான் குறட்டையே வருகிறது. குறட்டைப் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி ஆவிப்பிடித்தால், மூக்கில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்படும்.

* ஒரு பெரிய பௌலில் சுடுநீரை நிரப்பிக் கொள்ளுங்கள்.

* பின் அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின்பு அந்நீரில் ஆவி பிடியுங்கள். இப்படி தினமும் செய்தால், குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வெண்ணெய்

வெண்ணெய்

சுத்தமான வெண்ணெயில் இருந்து வருவது தான் நெய். இந்த வெண்ணெயில் உள்ள மருத்துவ பண்புகள் சுவாசப் பாதையில் உள்ள அடைப்புக்களைப் போக்க உதவி, குறட்டையின் சப்தத்தைக் குறைக்க உதவும்.

* ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நெய்யை, மூக்கின் இரண்டு துவாரங்களிலும் விடுங்கள்.

* இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.

ஏலக்காய்

ஏலக்காய்

மருத்துவ குணம் நிறைந்த ஏலக்காய், சுவாசப் பாதையில் உள்ள அடைப்புக்களை நீங்குவதோடு, நெஞ்சு சளியைக் குறைத்து, மெதுவாக குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

* 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடியுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் சக்தி வாய்ந்த ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் உள்ளது. இது உடலினுள் உள்ள அழற்சியை சரிசெய்து, சப்தத்துடனான குறட்டையைக் குறைக்கும். மேலும் மஞ்சள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்யும்.

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள்.

* இந்த பாலை தினமும் இரவில் படுக்கும் முன் குடித்தால், குறட்டை பிரச்சனை நீங்கும்.

நெட்டில்

நெட்டில்

நெட்டில் என்னும் மூலிகை குறட்டை பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஹிஸ்டமைன் பண்புகள், குறட்டையில் இருந்து விடுவிக்க உதவும்.

* ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த நெட்டில் இலைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டிக் குடியுங்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டு சுவாசப் பாதையில் சளியின் தேக்கத்தை எதிர்த்துப் போராடும். மேலும் இது சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பான பொருளும் கூட.

* குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட, 1-2 பூண்டு பற்களை சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடியுங்கள்.

தேன்

தேன்

தேனில் உள்ள மருத்துவ குணம், குறட்டையில் இருந்து ஒருவரை விடுவிக்கும். முக்கியமாக இது சுவாச பாதையில் ஏற்படும் அடைப்புகளால் உண்டாகும் அதிர்வுகளைக் குறைக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, இரவில் தூங்குவதற்கு முன் குடித்து வாருங்கள். இதனால் மெதுவாக குறட்டை பிரச்சனை குறைந்திருப்பதைக் காணலாம்.

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி மற்றொரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், குறட்டைக்கு காரணமான சுவாசப் பாதையில் உள்ள வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கும்.

* ஒரு கப் சுடுநீரில் சிறிது சீமைச்சாமந்தி பூக்கள் அல்லது சீமைச்சாமந்தி டீ பேக்குகளை வைத்து 10 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின் அதை வடிகட்டி, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

வெந்தயம்

வெந்தயம்

செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் குறட்டை வரக்கூடும். வெந்தயம் செரிமான பிரச்சனைகளை சரிசெய்யும் என்பதால், இதை அன்றாடம் சாப்பிடுங்கள்.

* அதிலும் வெந்தயத்தை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, இரவில் படுக்கும் முன் நீருடன் விதைகளை சாப்பிடுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில் குறட்டையில் இருந்து விடுவிக்கும் சிறப்பான பொருள். இது நெஞ்சு சளியை எதிர்த்து போராடுவதோடு, சுவாசப் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

* இரவில் படுக்கும் முன் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை சில நிமிடங்கள் நுகர்ந்து வாருங்கள்.

* இப்படி செய்வதால், அந்த நறுமணத்தால் சுவாசப் பாதையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, குறட்டை தடுக்கப்படும்.

சேஜ்

சேஜ்

சேஜ், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்த சக்தி வாய்ந்த ஒரு மூலிகை. இது மூக்கில் உள்ள அழற்சியைக் குறைக்கும். அதற்கு ஒரு கப் நீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது சேஜ் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்நீரால் ஆவி பிடியுங்கள்.

இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சியில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை பகுதியை மென்மையாக்கும். மேலும் இஞ்சி நாசிக் குழியை திறந்து, வீக்கத்தைக் குறைக்கும். அதற்கு கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டி தேன் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Granny Remedies To Cure Snoring

Snoring is often noticed as a disease and people with snoring problem can disturb the other persons sleep. To have a good nights sleep, here are some granny remedies that could help cure snoring.
Story first published: Wednesday, January 3, 2018, 15:09 [IST]
Desktop Bottom Promotion