Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
பரோட்டா கடை சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சுக்கோங்க..
Parotta Kadai Empty Salna Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு இன்னும் என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்கவில்லையா? உங்களுக்கு பரோட்டா கடை சால்னா ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த சால்னாவை வீட்டிலேயே செய்யுங்கள். இந்த சால்னா பரோட்டாவிற்கு மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

முக்கியமாக இந்த சால்னாவை செய்தால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சப்பாத்தியை சாப்பிடுவார்கள். பரோட்டா கடை சால்னா மட்டும் தனி சுவையில் இருப்பதன் ரகசியம், அதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான். அது என்னவென்பதும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தெரிந்து கொண்டு, பரோட்டா சால்னாவை சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
இந்த பரோட்டா கடை சால்னா ரெசிபி குறித்து கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த பரோட்டா கடை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரோட்டா கடை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1 துண்டு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* புதினா - 1/4 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு..
* பிரியாணி இலை - 2
* பட்டை - 2
* கிராம்பு - 6
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 2
* கல்பாசி - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 6
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
தேங்காய் விழுதிற்கு...
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* முந்திரி - 7
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, சோம்பு
ஆகியவற்றை சேர்த்து பொரிய விட வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து நன்கு வெங்காயம்
நிறம் மாற வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அதற்குள் மசாலாவை அரைத்துக் கொள்ளலாம். அதற்கு மிக்சர் ஜாரில்
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கல்பாசி,
சோம்பு, மிளகு, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்
தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு மென்மையாக, பேஸ்ட் போல்
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்த மசாலாவை, நன்கு வதங்கிய தக்காளியுடன் சேர்த்து நன்கு
1 நிமிடம் கிளறி, பின் 2 கப் நீரை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், அதில்
ஹோட்டல் சுவை மற்றும் மணத்தில் சால்னா இருப்பதற்கு 1/4 கப் புதினாவை
சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து
வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் தேங்காய் விழுதை அரைத்துக் கொள்ளலாம். அதற்கு மிக்சர்
ஜாரில் துருவிய தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பொட்டுக்கடலை
சேர்த்து, 3/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* சால்னா நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் அரைத்து
வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, தேவையான அளவு சுடுநீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி
வைத்து, மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* சால்னாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதில் சிறிது
கொத்தமல்லி மற்றும் புதினாவை தூவி கிளறி இறக்கினால், சுவையான பரோட்டா
கடை சால்னா தயார்.



Click it and Unblock the Notifications