Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா: பக்ரீத் ஸ்பெஷல்
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைத்து முஸ்லீம்களின் வீடுகளில் இருந்தும் கமகமவென்று அசைவ உணவுகளின் வாசனையானது வீசும். அந்த வகையில் பெரும்பாலான வீடுகளில் செய்யப்படுவது பிரியாணி. சரி, அந்த பிரியாணிக்கு என்ன சைடு டிஷ் செய்ய போறீங்க..? தெரியவில்லையா..
அப்படியென்றால் நம்ம மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா செய்யுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி மட்டுமின்றி, ருசியுடனும் இருக்கும். சரி, இப்போது அந்த மதுரை ஸ்டைல் மட்டன் சால்னாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா...

தேவையான பொருட்கள்:
மட்டன் - 200 கிராம்
துவரம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 1/4 இன்ச்
கல்பாசி - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
செய்முறை:
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மசாலாக்கள் ஒன்று சேர வதக்க வேண்டும்.
பின் துவரம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து அதில் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
