Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
இந்த 3 எழுத்துக்களில் பெயரைக் கொண்டவர்கள் இளம் வயதிலேயே பணக்காரர் ஆவார்களாம்!
எப்படி ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் ஒருவரது பெயரின் முதல் எழுத்துக்களும் அந்நபரின் குணங்கள், எதிர்காலம், நிதி நிலை மற்றும் முன்னேற்றம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. பொதுவாக குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயரைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறது.
அதுவும் சில எழுத்துக்களில் பெயரைக் கொண்டவர்கள் இளம் வயதிலேயே நல்ல பெயர், புகழை அடைவதோடு, வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைவதாக நம்பப்படுகிறது. அதில் முக்கியமாக 3 எழுத்துக்கள் மிகவும் அதிர்ஷ்டமானவையாக கூறப்படுகிறது.

இந்த 3 எழுத்துக்களில் பெயர் தொடங்கினாலும் சரி, அல்லது இந்த எழுத்துக்கள் பெயரில் இருந்தாலும் சரி, அந்நபர் நிச்சயம் ஒரு பணக்கார வாழ்க்கையை வாழ்வதாக கூறப்படுகிறது. இப்போது அந்த மூன்று எழுத்துக்கள் எவை என்பதையும், அந்த எழுத்துக்களில் பெயரை தொடங்குபவரின் குணாதிசயங்களையும் காண்போம். உங்கள் பெயரும் இந்த எழுத்தில் தொடங்குகிறதா என்பதை பாருங்கள்.
"R" என்ற எழுத்து
"R" என்ற எழுத்தானது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் எழுத்தாக கருதப்படுகிறது. இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் எங்கு சென்றாலும் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவார்கள். மேலும் இவர்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதோடு திட்டமிட்டு எதையும் செய்யும் திறனால் விரைவில் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். மேலும் இவர்கள் தொழிலில் எவ்வளவு ரிஸ்க் எடுத்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். இவர்கள் கையில் பணம் அதிகம் சேரும். பணத்தை சம்பாதிக்கும் வழிகளை நன்கு அறிந்திருப்பார்கள். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
"S" என்ற எழுத்து
"S" என்ற எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் தலைமைத்துவ திறன்களைக் கொண்டிருப்பார்கள். சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகம் இருக்கும். ஒவ்வொரு வேலையையும் தீவிரமாக எடுத்து செய்வார்கள். ஏதாவது பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் பெரிய அளவில் வெற்றியைக் காண்பார்கள். முக்கியமாக இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் 30 வயதிற்குள் வீடு, கார் என ராஜ வாழ்க்கையை வாழும் யோகம் இருப்பதாக எண் கணிதம் கூறுகிறது.
"M" என்ற எழுத்து
"M" என்ற எழுத்தானது பொறுப்பு, செல்வம், முன்னேற்றம் ஆகியவற்றை குறிக்கிறது. இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் பணத்தை திறம்பட சேமிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் திறமையை விட, எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை அறிந்த வல்லவர்கள். இதன் காரணமாக இவர்கள் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தைக் கண்டு, செல்வந்தராவார்கள். முக்கியமாக இந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்களுக்கு 30-35 வயதிற்குள் வாழ்வில் ஒரு பெரிய திருப்பு முனை ஏற்பட்டு, வாழ்வில் எதிர்பாராத உயரத்தை அடைவதாக கூறப்படுகிறது.
என்ன தான் ஒருவரது பெயரின் முதல் எழுத்து வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உண்மையில் வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர் நிலையை அடைய கடின உழைப்பும், திறமையும் அவசியம். இவ்விரண்டும் இருந்து, வாழ்வில் கிடைக்கும் வாய்ப்பை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், யாராலும் முன்னேற்றமடைவதை தடுக்க முடியாது. உங்கள் பெயரில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் இருந்தால், அவற்றை ஒரு நல்ல அறிகுறியாக கருதி, தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள். இதனால் நிச்சயம் வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
