For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையில் கருநாக்கிற்கு மந்திர சக்தி உள்ளதா..? உங்கள் நாக்கு கூறும் மர்மங்கள்..!

|

பொதுவாக நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பின் தன்மைக்கும் பல அர்த்தங்கள் உள்ளன. உறுப்புகளின் நிஜ தன்மைக்கும் அவற்றின் மாறுதலான தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒவ்வொரு உறுப்புகளின் பல வகையான நிறங்கள் ஆச்சரியமூட்டும் தகவல்களை தரவல்லது.

உண்மையில் கருப்பு நாக்கிற்கு மந்திர சக்தி இருக்கா...? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கா..?

அந்த வகையில் நமது நாக்கும் அடங்கும். நாம் பல வகையான நாக்குகளை பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்கும் தனி விதமான நாக்குகள் தான் இருக்கின்றன. கருநாக்கு, வெள்ளை நாக்கு, பிங்க் நாக்கு, சிவப்பு நாக்கு என பல வண்ணங்களில் நாக்குகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு நிறங்களும் உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாகாவார் ஆயினும் நாகாக்க..!

யாகாவார் ஆயினும் நாகாக்க..!

மனிதனின் நக்கானது நம்மை அழிக்க கூடிய வல்லமை பெற்றதாகும். தப்பி தவறி கூறிய ஒரு வார்த்தையால் பல குடும்பங்கள் பிரிந்த கதைகளும் இங்குண்டு. வள்ளுவர் கூட "நாவடக்கம்" பற்றி தனது குறளின் மூலம் இவ்வுலகிற்கு எடுத்து கூறியுள்ளார். எனவே, நாக்கிற்கு என்று பல வித தனி தன்மைகள் உள்ளன.

பிளந்த நாக்கு

பிளந்த நாக்கு

உங்களது நாக்கு பிளந்தது போன்று இருந்தால், உங்களின் உடல் வயோதிக நிலைக்கு செல்கிறது என்று அர்த்தம். நாக்கில் வெடிப்பு போன்றும், பிளந்தும் இருந்தால் இளமை தொலைகிறது என்பதை குறிக்கும். மேலும், ஏதேனும் தொற்றுகளின் பாதிப்பாலும் இப்படி ஏற்படலாம்.

ஸ்ட்ராவ்பெரி நிற நாக்கு

ஸ்ட்ராவ்பெரி நிற நாக்கு

செக்க சிவந்த ஸ்ட்ராவ்பெரி பழத்தை போன்று உங்களின் நாக்கு இருந்தால் நீங்கள் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இந்த நிறம், உடலில் வைட்டமின் பி12 மற்றும் இரும்பு சத்து குறைவாக உள்ளதை உணர்த்துகிறது. ஒரு சில நேரங்களில் இந்த நிற நாக்கை கொண்டவர்களுக்கு கொஞ்சம் காரமாக சாப்பிட்டாலோ அல்லது அதிக சூடாக சாப்பிட்டாலோ நாக்கில் வலி ஏற்பட கூடும். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.

வெள்ளை நிற நாக்கு

வெள்ளை நிற நாக்கு

நாக்கு வெள்ளையாக இருப்பதை கண்டு சுத்தமாக உள்ளது என நினைத்து விடாதீர்கள். இது ஈஸ்ட் தொற்றுகளால் ஏற்பட்ட பாதிப்பாகும். ஆரம்பத்தில் குறைந்த அளவில் இருந்து பின் மிக அதிகமாக நாக்கு முழுக்க பரவ தொடங்கும். எதிர்ப்பு சக்தி குறைபாடு, உயர் ரத்த அழுத்தம், மாத்திரைகளை அதிகமாக எடுத்து கொள்ளுதல், சர்க்கரை நோய் ஆகிய காரணிகளால் கூட இந்த நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

MOST READ: நீங்க இந்த பிளட் குரூப்பா..? உங்களுடைய பிளட் குரூப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்...!

நாக்கில் சூடா..?

நாக்கில் சூடா..?

எதை சாப்பிட்டாலும் ஒரு வித எரிச்சலையும், சூட்டையும் தருகிறதா..? இது "burning mouth syndrome" என்று மருத்துவத்தில் கூடுவார்கள். நாக்கில் உள்ள நரம்புகளில் ஏற்பட்ட சிறிய பாதிப்பாக இது இருக்கலாம். இவர்களுக்கு அன்னாச்சி பழம், டூத்பேஸ்ட், சாக்லேட் சாப்பிட்டால் கூட இந்த உணர்வு ஏற்பட கூடும்.

வெள்ளை திட்டுகள்

வெள்ளை திட்டுகள்

நாக்கில் வெள்ளை வெள்ளையாக சிறிய திட்டுகள் இருந்தால் அதற்கு காரணம் புற்றுநோய் செல்களாக கூட இருக்கலாம். இவை கொஞ்சம் காலம் வந்து விட்டு மறைந்தால் பிரச்சினைகள் குறைவு. அதுவே அதிக காலம் இருந்தால் புற்றுநோயாக கூட இருக்கலாம்.

கருநாக்கா..?

கருநாக்கா..?

பொதுவாகவே கருநாக்கு உள்ளவர்கள் எதை சொன்னாலும் பலித்து விடும் என்கிற மூட நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இது ஒரு வகையான பாக்டீரியாவால் கருப்பு நிறத்தை அடைகிறது. இவ்வாறு இருந்தால் வாயில் துர்நாற்றமும் ஏற்படும்.

நாக்கில் புண்களா..?

நாக்கில் புண்களா..?

உங்களது நாக்கில் புண்கள் ஏற்படுகிறதா..? இதற்கு காரணம் என்னன்னு தெரியுமா..? உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலோ, அதிக மன அழுத்தம் ஏற்பட்டாலோ இந்த றிகுறி தென்படும். இதுவே நீண்ட நாட்களாக இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

MOST READ: தக்காளியுடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் உங்களை புற்றுநோய் ஒருபோதும் தாக்காது

நாக்கில் முடியா..?

நாக்கில் முடியா..?

சிலருக்கு நாக்கில் சிறிது முடி போன்ற தோற்றம் இருக்கும். இது சில சமயங்களில் ஆபத்தான அறிகுறியை நமக்கு சொல்கிறது. அதாவது, உங்களின் நாக்கு இவ்வாறு இருப்பதற்கு HIV வைரஸ் பாதிப்பாக கூட இருக்கலாம். அல்லது பாக்டீரியா தாக்குதலால் நாக்கு இது போன்று பழுப்பு நிறத்தில் முடி வளர்ந்தது போன்று காணப்படுகிறது.

நாக்கில் கட்டியா..?

நாக்கில் கட்டியா..?

உங்களின் நாக்கில் நீண்ட நாட்களாக கட்டி இருந்தால் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விடாதீர்கள். ஏனெனில் இவை வாய் புற்றுநோயாக கூட இருக்கலாம். நாக்கில் வீக்கமோ, அதிக வலியோ, மெல்லும் போதுமாம் விழுங்கும் போதும் சிரமம் இருந்தால் கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things Your Tongue Is Telling About Your Health

Here are a lot of things that your tongue can say about your health.
Desktop Bottom Promotion