For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா...? அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்...!

|

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் மகிழ்ச்சியாக வாழ்கிறோமோ இல்லையோ..?!' ஆனால், வசதியாக வாழ வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கின்றோம். இது எத்தகைய விளைவை தருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளாமலே இன்றளவும் உள்ளோம். நாம் எத்தகைய வசதி உள்ளவராக இருக்கின்றோம் என்பது முக்கியம் இல்லை. ஆனால், எந்த அளவு ஆரோக்கியமுடனும் நோய்கள் இன்றியும் உள்ளோம் என்பதே அவசியம்.

உங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா..? அப்போ கட்டாயம் உங்களுக்கு வரிசையாக இந்த நோய்கள் வரும்..!

அந்த வகையில், ஆடம்பர வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ள ஏ.சி-யும் அடங்கும். இன்று நம் வீடுகளில் ஏ.சி இல்லையென்றால் மிக பெரிய பிரளயமே வந்து விடுகிறது. இதனால் ஏற்படுகின்ற மோசமான விளைவுகள் என்னென்னெ என்பதை நாம் முதலில் நன்கு அறிய வேண்டும். ஏ.சி-யை பயன்படுத்துவதால் எப்படிப்பட்ட நோய்களும், பாதிப்புகளும் வரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏ.சி-யில் எமனா..?

ஏ.சி-யில் எமனா..?

நாகரிக வாழ்வில் நாம் ஏசியையும் சேர்த்து கொண்டுள்ளோம். வீட்டில் ஏ.சி, காரில் ஏ.சி, அலுவலகத்தில் ஏ.சி, பள்ளி கூடத்தில் ஏ.சி, கழவறையில் ஏ.சி... இப்படி நாம் செல்லும் எல்லா இடங்களிலும் ஏ.சி-யுடனே வாழ்க்கையை நாம் ஓட்டி கொண்டிருக்கின்றோம். இது கிட்டத்தட்ட எமனை நம்மலுடனே அழைத்து செல்வதற்கு சமம்.

ஆடம்பரம் ஆபத்தா..?

ஆடம்பரம் ஆபத்தா..?

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அளவுக்கு மீறினால் அது நம் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்பது மிக முக்கிய நிதர்சனம். ஏ.சி யின் குளிர்நிலை 45 டிகிரி வரைக்கும் நம்மில் சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இது உங்களின் உடல் நிலையை முற்றிலுமாக பாதிக்க செய்யும். அதிக நேர ஏ.சி- குறைந்த ஆயுளை தரும் என்பதை நினைவில் கொள்க..!

நுறையீரல் பிரச்சினை...

நுறையீரல் பிரச்சினை...

நீங்கள் அதிக நேரம் ஏ.சியிலே உங்களின் நாட்களை கடத்தினால் கட்டாயம் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். மூக்கு, தொண்டை, மூச்சு குழாய் போன்ற உறுப்புகள் இதனால் பெரிதும் பாதிப்படையுமாம். மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் பிரச்சினை இதனால் வர கூடும்.

கண் பாதிப்பு...

கண் பாதிப்பு...

நீண்ட நேரம் ஏ.சியில் இருப்பதால் உங்களின் முதன்மையான உறுப்பான கண் பெரிதும் பாதிப்படைகிறது என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். கண்ணில் அதிக வறட்சி ஏற்பட்டு, எரிச்சலை இது உண்டாக்கும். கண் பார்வை பிரச்சினையும் இதனால் ஏற்பட கூடிய வாய்ப்பு இருக்கிறது.

MOST READ: ஒரே மாதத்தில் 5 கிலோ எடை குறையணுமா..? அதற்கு கொள்ளு தானியத்தை இப்படி பயன்படுத்துங்க...

தொற்று நோய்கள்

தொற்று நோய்கள்

உங்களுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சு திணறல் போன்றவை ஏற்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த ஏ.சி தான். தொடர்ந்து இதில் இருந்து வெளியேறும் குளிர்ந்த காற்று உங்களின் மூக்கின் குழாய்களை பாதிக்க செய்யும். மேலும், இதனால் தொற்று நோய்கள் கூட ஏற்படும்.

வைட்டமின் டி குறைபாடு..!

வைட்டமின் டி குறைபாடு..!

அதிக நேரம் ஏ.சியிலே இருப்போர்க்கு இந்த முக்கிய குறைபாடு ஏற்படும். சூரிய ஒளியே உடலில் படாமல் இருந்தால் வைட்டமின் டி குறைபாடு உங்களுக்கு உண்டாகும். இதனால் இதய பிரச்சினை, ஆஸ்துமா, புற்றுநோய் ஆகியவை கூட உருவாகலாம்.

நீர்சத்து குறைபாடு

நீர்சத்து குறைபாடு

ஏ.சியால் ஏற்பட கூடிய பாதிப்புகளுள் இந்த நீர்சத்து குறைபாடும் ஒன்று. உடலில் எப்போதும் குளிர் நிலையே பட்டு கொண்டு இருந்தால் என்னவாகும் என எண்ணி பாருங்கள். தட்பவெப்ப நிலை உடலில் சீராக இல்லையென்றால் ஏரளமான நோய்கள் உருவாகும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

இத்தனை நாட்கள் நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்த உங்களின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கினால், அதில் ஏ.சியின் பங்கும் உள்ளது என்பதை நினைவில் கொள்க. ஏ.சி-யில் அதிக நேரம் இருந்தால் ஆஸ்த்துமா பிரச்சினை வரும். எனவே, உங்களின் சுவாச நிலை சீராக இருக்காது.

MOST READ: விழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..? அப்போ இதை பயன்படுத்துங்க

அதிக சோம்பலா..?

அதிக சோம்பலா..?

பலருக்கு வேலைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், அதனை செய்ய ஏதோ தடுப்பது போன்று தோன்றும். இதற்கு பெயர் தான் "சோம்பல்". நீங்கள் அதிக நேரம் ஏ.சியில் இருந்தால் கண்டிப்பாக சோம்பேறி தனம் அதிகரிக்கும் என ஆய்வுகள் சொல்கிறது. எனவே, ஏ.சியை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே.

சரும பிரச்சினை...

சரும பிரச்சினை...

ஏ.சியிலே அதிக நேரம் இருந்தால் உங்களின் அழகிய முக அழகு பெரிதும் பாதிக்கும். குறிப்பாக நாம் வெயில் காலங்களில் வெளியே போய்விட்டு வியர்வையுடன், நீண்ட நேரம் ஏ.சியிலே இருப்போம். இது அரிப்பு, அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும், சொரசொரப்பான முகத்தையும் தரும்.

தலை வலியும், தலை சுற்றலும்...!

தலை வலியும், தலை சுற்றலும்...!

ஏ.சி-யால் ஏற்படும் பக்க விளைவுகளில் இந்த தலை வலி பிரச்சினையும் ஒன்று. நீண்ட நேரம் ஏ.சியில் இருப்பவர்களுக்கு நிச்சயம் இந்த தலைவலி, தலை சுற்றல் ஏற்படுமாம். உடலில் ஏற்பட கூடிய அதிக குளிர் நிலையும், நீர்சத்து குறைபாடுமே இதற்கு காரணமாம்.

முக்கிய குறிப்பு...

முக்கிய குறிப்பு...

நீங்கள் ஏ.சி-யை பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் கூறவில்லை. மாறாக அதிக நேரம் அதிலே இருக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். உங்களின் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எண்ணற்ற நோய்களுக்கு இதுவே வழி வகுக்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

MOST READ: எந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது? யார் நிறைய பேசலாம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Side Effects Of Air Conditioning

Air conditioners are a lifeline for most people today, especially now that you have unseasonably warm days in spring and summers are hotter than ever.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more