For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெண்களுக்கு மட்டும் வெயிட் ஏறிக்கிட்ட போறதுக்கு இந்த 10 மேட்டரு தான் காரணமாம்...

  |

  எடை குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்பது அர்த்தம் இல்லை. உடலின் ஹார்மோன்கள் சரியான இயக்கத்தில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடை குறைப்பது அவ்வளவு சுலபமான காரியமும் இல்லை. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் சமச்சீரின்மை காரணமாக கொழுப்பு கரைவதில் சிக்கல் ஏற்படுகிறது. வளர்சிதை மாற்றம், அழற்சி, மெனோபாஸ், க்ளுகோஸ் உட்கொள்ளல் போன்ற தீவிர உடல் செயல்பாடுகளை ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன.

  health

  ஹார்மோன் சமச்சீரின்மை, மனஅழுத்தம், வயது , மரபணு, வளரசிதை போன்றவற்றில் பாதிப்பை ஊக்குவிக்கிறது. தவறான வாழ்வியல் முறை, ஆரோக்கியமற்ற வளர்சிதை மாற்றம், அஜீரணம், தீர்க்க முடியாத பசி போன்றவை எடை அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கின்றன. பெண்களில் வாழ்க்கை முறையில் அடிக்கடி ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படுவது வழக்கமாக இருந்தாலும், நாட்பட்ட ஹார்மோன் சமச்சீரின்மை உடல் பருமன் தொடர்பான நோய்களை உண்டாக்கும். ஆகவே, பெண்களின் எடை அதிகரிப்பிற்கு தொடர்புள்ள ஹார்மொன்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தைராய்டு

  தைராய்டு

  கழுத்தின் அடிப்பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியானது, மூன்று ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. அவை, டி3, டி4 , கால்சிடோனின் போன்றவையாகும். வளர்சிதை மாற்றம், தூக்கம், இதயத் துடிப்பு, மூளை வளர்ச்சி போன்றவற்றை இந்த ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. சில நேரங்களில் தைராய்டு சுரப்பி, குறைவான ஹார்மோனை சுரப்பதால் தைராய்டு சுரப்பு குறைபாடு என்ற ஹைப்போ தைராய்டு ஏற்படுகிறது. எடை அதிகரிப்பு, மன அழுத்தம், மலச்சிக்கல், சோர்வு, உயர் இரத்த கொலஸ்ட்ரால், குறைந்த இதயத் துடிப்பு, போன்றவை ஹைப்போ தைராய்டுடன் தொடர்புடையது. க்ளுடேன் சகிப்பு தன்மை இன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச் சூழல் நச்சு போன்றவை தைராய்டு ஹர்மொனின் குறைவான சுரப்பிற்கு காரணமாக உள்ளன. தைராய்டு பாதிப்பால் உடலில் அதிகமான நீர் தேக்கம் உண்டாகிறது. இவை கொழுப்பு அல்ல. இத்தகைய அதிக நீர் தேக்கத்தால் உடல் பருமனாக இருப்பது போல் தோற்றமளிக்கிறது. தைராய்டு சமச்சீரின்மை காரணமாக உடலின் 5-10 பவுண்ட் வரை எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

  தைராய்டு சமச்சீரின்மைக்கு என்ன சிகிச்சை கொடுக்கலாம் ?

  தைராய்டு ஊக்குவிக்கும் ஹார்மோன்களை டி3 மற்றும் டி4 ஆகியவற்றுடன் சேர்த்து பரிசோதனை செய்து மருத்துவரிடன் அறிக்கை பெறவும் .

  பச்சையாக காய்கறிகளை உட்கொள்ளாமல், நன்கு வேக வைத்த காய்கறிகளை உட்கொள்ளவும். ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பைச் சேர்க்கவும். ஜிங்க் சத்து அதிகம் உள்ள சிப்பிகள், பூசணி விதை போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும். மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் டி சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரை இருந்தால், தைராய்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

  இன்சுலின்

  இன்சுலின்

  கணையத்தில் சுரக்கும் ஹார்மோன் இன்சுலின் ஆகும். இவை அணுக்களுக்குள் க்ளுகோசை எடுத்துச் செல்ல உதவுகின்றன. இவை ஆற்றலாக அல்லது கொழுப்பாக மாற்றப்படுகின்றன. இது, இரத்தத்தில் க்ளுகோஸ் அளவைப் பராமரிக்க உதவுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவது, மது அருந்துவது, செயற்கை இனிப்புகள் சேர்த்த உணவை எடுத்துக் கொள்வது, ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வது, (அதிகமான பழங்களை உட்கொள்வதும் ) போன்றவை இன்சுலின் தடையை உண்டாக்கும். இந்நிலையில், தசை அணுக்களால், க்ளுகோஸ் பிணைந்த இன்சுலினை அடையாளம் காண முடியாமல், இரத்தத்தில் க்ளுகோஸ் தங்கி விடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது முடிவில், டைப் 2 நீரிழிவாகவும், எடை அதிகரிப்பிற்கும் காரணமாகிறது

  இன்சுலின் பாதிப்பை எப்படி குறைக்கலாம்?

  இரத்த சர்க்கரை அளவைப் பரிசோத்தித்து, மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள்.

  ஒரு வாரத்தில் 4 மணி நேரம் உடற் பயிற்சி செய்யுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவது , மது அருந்துவது , பின்னிரவு நேரத்திற்கு பிறகு சிற்றுண்டி எடுத்துக் கொள்ளுவது , செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அருந்துவது, போன்றவற்றைத் தவிர்க்கலாம். பச்சை இலையுடைய காய்கறிகள் மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் கிடைக்கும் காய்கறிகளை ஒரு நாளைக்கு 4-5 வேளை மற்றும் பழங்களை 3 வேளை எடுத்துக் கொள்ளலாம்.

  கொழுப்பு அதிகம் உள்ள மீன்கள், நட்ஸ், ஆலிவ் எண்ணெய், ஆழி விதைகள், போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஒமேகா கொழுப்பு அமிலம் அளவு அதிகரிக்கிறது. குறைந்த கலோரி உணவுகளாக அதே சமயம் ஊட்டச்சத்து மிக்க உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2000-2200 கலோரிகள் வரை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 3-4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம்.

  லெப்டின்

  லெப்டின்

  சாதாரண சூழ்நிலையில், உங்கள் வயிறு நிறைவதையும், இதற்கு மேல் சாப்பிட முடியாது என்பதை உணர்த்தவும் உதவும் ஒரு அறிகுறி லெப்டின் ஹார்மோன் சுரப்பது ஆகும். இனிப்புகள், சாக்லேட், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால், அதிக அளவு பிருக்டோஸ் உற்பத்தியாகி, அவை கொழுப்பாக மாறி, கல்லீரல், வயிறு மற்றும் உடலின் மற்ற பாகங்களில் தேங்கி விடுகிறது. இப்போது கொழுப்பு அணுக்கள் லெப்டின் ஹார்மோனை சுரக்கின்றன. பிருக்டோஸ் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு சேர்ந்து, அதிக லெப்டினைச் சுரக்கின்றன. இதனால், லெப்டின் சுரப்பதை உணரும் திறன் உடலில் குறைகிறது. இதனைத் தொடர்ந்து , சாப்பிடுவதை நிறுத்துவதற்கான சிக்னல் மூளைக்கு செல்வது நிறுத்தப்படுகிறது. இதனால் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.

  லெப்டின் அளவைக் குறைப்பது எப்படி ?

  உடலுக்கு போதுமான அளவு ஓய்வு தேவை. தூக்க குறைபாட்டால், உடலில் லெப்டின் அளவில் மாற்றம் ஏற்பட்டு, உணவு எடுத்துக் கொள்வதை நிறுத்தும் சிக்னல் மூளைக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. ஆகவே, ஒரு நாளில் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.

  ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடவும். சர்க்கரை சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள். ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் பழங்களை உண்ண வேண்டாம். பச்சை இலையுடைய காய்கறிகளை அதிகம் உண்ணலாம், ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை உண்ணலாம். உடலை நீர்ச்சத்தோடு வைத்துக் கொள்ளுங்கள், நீர்சத்து குறைபாடும் உங்களுக்கு பசியைத் தோற்றுவிக்கலாம்.

  க்ரேலின்

  க்ரேலின்

  இந்த ஹார்மோன் பிரபலமாக "பசி ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. க்ரேலின், பசியின்மையைத் தூண்டுகிறது மற்றும் கொழுப்பு சேமிப்பை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் வயிற்றில் சுரக்கிறது. சிறு குடல், மூளை மற்றும் கணையத்திலும் ஒரு சிறு அளவு க்ரேலின் சுரக்கப்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் அதிக அளவு க்ரேலின் , உடல் எடையை அதிகரிக்கிறது. பருமனான மக்கள் இந்த ஹார்மோனுக்கு மிகுந்த உணர்திறன் கொண்டுள்ளனர். கடினமான உணவுக் கட்டுப்பாடு மற்றும் விரதம் இருந்தால் க்ரேலின் அளவு அதிகரிக்கும்.

  க்ரேலின் அளவைக் குறைப்பதற்கான வழிகள் என்ன ?

  2-3 மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு உட்கொள்ளவும். ஒரு நாளைக்கு 6 முறை சாப்பிடவும்.

  பிரெஷ் பழங்கள், காய்கறிகள், புரதச் சத்து , நார்ச்சத்து மற்றும் ஆரோக்கிய கொழுப்பு கொண்ட உணவுபொருட்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு 20 நிமிடங்கள் முன் 1 1/2 கப் தண்ணீர் பருகவும். இவற்றை பின்பற்றியும் பிரச்சனை தொடர்ந்தால் , மருத்துவரை அணுகவும். உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும்.

  ஈஸ்ட்ரோஜென்

  ஈஸ்ட்ரோஜென்

  ஈஸ்ட்ரோஜென் அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும், உடை எடையில் மாற்றம் உண்டாகி எடை அதிகரிக்கும். ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிப்பதைப் பற்றி இப்போது காண்போம். கருப்பை அணுக்கள் இந்த ஹார்மோனை அதிக உற்பத்தி செய்வதால் அல்லது, ஈஸ்ட்ரோஜென் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கிறது. இன்றைய நாட்களில் விலங்குகளுக்கு அதிக அளவில் ஸ்டீராய்டு, ஹார்மோன், நுண்ணுயிர் எதிர்ப்பி போன்றவை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய விலங்குகளின் இறைச்சியை நாம் உண்பதால் இவை உடலில் ஈஸ்ட்ரோஜன் போல் செயலாற்றுகின்றன. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் உடல் சரியான அளவு இன்சுலின் சுரந்து உங்கள் இரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கும். அதுவே, உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும்போது, இன்சுலின் சுரக்கும் அணுக்கள் அழுத்தப்படுகிறது. இதனால் இன்சுலின் சுரப்பது தடைபட்டு, க்ளுகோஸ் அளவு இரத்தத்தில் அதிகரிக்கிறது . இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

  மெனோபாஸ் காலத்திற்கு முந்தைய பருவத்தில் உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் குறைபாடு தோன்றும். இதனால் அவர்கள் கருவுறுதல் நிறுத்தப்படும். இதனால் ஈஸ்ட்ரோஜென் அளவு மேலும் குறைகிறது. எல்லா கருப்பை அணுக்களும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி செய்வதால் , அவை நிறுத்தப்படும்போது , மேலும் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைகிறது. ஆகவே ஈஸ்ட்ரோஜென் அளவை சீராக்க, இதனை சுரக்கும் மற்ற அணுக்களை உடல் தேடுகிறது. அத்தகைய ஒரு மூலம் தான் கொழுப்பு செல்கள் ஆகும். ஈஸ்ட்ரோஜென் குறைப்பாடு தோன்றியவுடன், உடலின் க்ளுகோஸ் அளவைப் பூர்த்தி செய்ய, ஆற்றல் முழுவதையும் கொழுப்பாக மாற்றம் செய்கிறது. இதனால் குறிப்பாக உடலின் கீழ் பகுதியில் எடை அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜென் அளவைப் பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?

  பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

  மது அருந்துவதை நிறுத்த வேண்டும். தினமும் உடற்பயற்சி செய்ய வேண்டும் . மெனோபாஸ் காலகட்டத்தில் இருப்பவர்கள், மன அழுத்தத்தில் இருந்து விடுபெற தினமும் யோகா செய்யலாம். முழு தானியம், காய்கறி மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஈஸ்ட்ரோஜென் அளவைப் பராமரிக்க நீங்கள் ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்களை உங்கள் மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்.

  கார்டிசோல்

  கார்டிசோல்

  கார்டிசோல் என்பது அட்ரீனல் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும். மனச்சோர்வு, பதட்டம், மனஅழுத்தம், கோபம் அல்லது காயம் ஏற்படும்போது இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. கார்டிசாலின் இரண்டு முக்கிய செயல்பாடுகள் எரிசக்தி கட்டுப்பாடு மற்றும் ஆற்றல் அணிதிரட்டல் ஆகும். அதனைப் பற்றி இப்போது விரிவாகக் காண்போம். கார்டிசோல் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை செய்ய உடலின் எந்த வகை ஆற்றல் (கார்பர், புரதம், அல்லது கொழுப்பு) தேவை என்பதை முடிவுசெய்து ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறது. கார்டிசோல் கொழுப்பு இருப்புகளிலிருந்து கொழுப்புக்களை "பசி செல்கள்" அல்லது வேலை தசைகளுக்கு அனுப்பி, ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. அடிப்படையில், கார்டிசோல் குறுகிய-கால அழுத்தம் (மன, உடல், உண்மையான, அல்லது கற்பனை) போன்றவற்றைக் கையாள தேவைப் படுகிறது. ஆனால் தேவையற்ற வாழ்க்கை முறை தேர்வு மற்றும் மோசமான உணவு பழக்கம் காரணமாக, உங்கள் உடல் மன அழுத்தத்தின் நிலையாக இருக்கலாம். இதனால் கார்டிசால் சுரப்பு அதிகரிக்கிறது. இதனைத் தொடர்ந்து உடலில் அதிக அளவு இன்சுலின் சுரக்கிறது, உடலின் உட்புற கொழுப்பு சேமிப்பு அதிகரிக்கிறது . ஆகவே கொழுப்பு அணுக்களின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.

  கார்டிசால் அளவைக் குறைப்பது எப்படி ?

  கார்டிசால் அளவைக் குறைக்க நீங்கள் செய்ய வேண்டியவற்றை ஒரு அட்டவணையாக போட்டுக் கொள்ளுங்கள். செய்தவற்றை எல்லாம் டிக் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்களைப் பற்றிய உங்கள் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமானவற்றை செய்திடுங்கள், புத்தகம் படியுங்கள், திரைப்படம் பாருங்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழியுங்கள். உங்களை மதிப்பிடாமல் உங்களுக்கு சிறந்தது கிடைக்கக் வேண்டும் என்று நினைப்பவர்களுடன் அதிகம் பழகுங்கள். உங்கள் தினசரி வேலைகளை சில நாட்கள் தவிர்த்து, இதுவரை நீங்கள் செய்யாத சில செயல்களை அந்த நாட்களில் தொடர்ந்து செய்து வாருங்கள். மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். மூச்சுப்பயிற்சி, யோகா , தியானம் போன்றவற்றிற்கு தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்குங்கள். இதனால் மன அழுத்தம் குறையும். தினமும் இரவில் 7-8 நமி நேரம் தூங்குங்கள். மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.

  டெஸ்டோஸ்டிரோன்

  டெஸ்டோஸ்டிரோன்

  பெண்கள் குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன்களை ( (15 - 70 ng/dL)) உருவாக்குகின்றனர். இது கொழுப்பை எரித்து, எலும்பு மற்றும் தசைகளை வலுவாக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்கிறது. பெண்களுக்கு கருப்பையில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியாகிறது. வயது மற்றும் மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும். எலும்பு திடம் குறைவது, தசை வலிமை குறைவது, உடல் பருமன், போன்றவை டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டுடன் தொடர்பு கொண்டவையாகும். இதனால் மனச்சோர்வு அதிகரிக்கிறது. இதனால் மனஅழுத்தம் மற்றும் அழற்சி அதிகரித்து, அதிக கொழுப்பு சேருகிறது.

  டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது எப்படி?

  டெஸ்டோஸ்டிரோன் அளவை உங்கள் மருத்துவரிடம் பரிசோதித்து அளவிடுங்கள்.

  எடை குறைப்பிற்காக நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஆழி விதை, பூசணி விதை, முழு தானியம் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளன.

  தினமும் உடற்பயிற்சி செய்வதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது , மேலும் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் ஏறப்டாமல் தடுக்க வைட்டமின் சி, ப்ரோபயோடிக், மெக்னீசியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் இருக்க மது அருந்துவதைத் தடுக்கவும். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க ஜின்க் மற்றும் புரதம் அதிகம் உள்ள உணவு அல்லது மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

  புரோஜெஸ்ட்டிரோன்

  புரோஜெஸ்ட்டிரோன்

  புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள், உடல் செயல்பாடு சரியாக உதவுவதற்கு சமநிலையில் இருக்க வேண்டும். மெனோபாஸ் , மன அழுத்தம், கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு அல்லது உடலில் ஈஸ்ட்ரோஜனை மாற்றும் ஆண்டிபயாடிக்குகள் மற்றும் ஹார்மோன்களைக் கொண்ட உணவுகள் நுகர்வு ஆகியவற்றால் புரோஜெஸ்ட்டிரோன் நிலை வீழ்ச்சியடையும். இதனால் எடை அதிகரிப்பு மற்றும் மனச்சோர்வு உண்டாகும்.

  புரோஜெஸ்ட்டிரோன் அளவை அதிகரிப்பது எப்படி ?

  மகப்பேறு மருத்துவரிடன் ஆலோசனைப் பெற்று உங்களுக்கு ஏற்ற பிறப்பு கட்டுப்பட்டு முறையை தேர்வு செய்யலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆழ்ந்து மூச்சு விடுவதை பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.

  மெலடோனின்

  மெலடோனின்

  பினியல் சுரப்பியில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் மெலடோனின் ஆகும். இது உறங்கும் மற்றும் விழிக்கும் நேரத்தை பராமரிக்கிறது. மாலை நேரம் முதல் நள்ளிரவு வரை இந்த மெலடோனின் அதிகமாக சுரக்கும் நேரம் ஆகும். காலையில் அதன் சுரப்பு குறைந்து விடும். அதனால், இரவு நேரத்தில் ஒரு இருட்டான அறையில் உறங்குவதால் உங்கள் உடலில் மெலடோனின் அளவு அதிகரித்து உடல் வெப்பநிலை குறையும். இப்படி நடக்கும்போது ,உடலில் வளர்ச்சி ஹார்மோன் வெளியிடப்படுகிறது, இது உடல் குணமடைய உதவுகிறது, உடல் அமைப்பு மேம்படுத்துகிறது, மெலிந்த தசையை பலமாக்க உதவுகிறது, மற்றும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. ஆனால் இந்த சுழற்சி தடைபடும்போது, உறக்கத்தில் தடை ஏற்படுகிறது. இருட்டான இடத்தில் போதுமான தூக்கம் கிடைப்பது உடல் குணமடைய உதவுகிறது. அப்படி இல்லாத சூழ்நிலையில், தூக்கம் தடைபடுவதால், அழற்சி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்கிறது.

  மெலடோனின் அளவை அதிகரிப்பது எப்படி?

  இருட்டாக இருக்கும் அறையில் உறங்க வேண்டும். 7-8 மணிநேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். இரவில் தாமதமாக உணவு அருந்தக் கூடாது. இரவு உறங்கச் செல்வதற்கு முன், வீட்டில் உள்ள மொபைல், கணினி, டேப்லெட் போன்ற கேட்ஜெட்களை அணைத்து விட வேண்டும். பாதாம், செர்ரி, இலக்கை, கொத்துமல்லி, சூரிய காந்தி விதை போன்றவற்றை இரவு உறங்குவதற்கு முன் எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் மெலடோனின் அதிகம் உள்ளது.

  க்ளூகோகார்டிகாய்டு

  க்ளூகோகார்டிகாய்டு

  அழற்சி என்பது குணப்படுத்துதலின் முதல் படியாகும். ஆனால் நாட்பட்ட அழற்சி பல எதிர்பாரா விளைவுகளை உண்டாக்கும். அதில் ஒன்று எடை அதிகரிப்பு. க்ளூகோகார்டிகாய்டு அழற்சியைக் குறைக்க உதவுகிறது. உடலில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் புரத பயன்பாட்டை பராமரிக்க இவை உதவுகின்றன. குளுக்கோகார்டிகோயிட்கள் கொழுப்பு முறிவு மற்றும் புரத முறிவுகளை அதிகரிக்கின்றன, ஆனால் குளுக்கோஸ் அல்லது சர்க்கரைப் பயன்பாட்டை ஆற்றலாக மாற்றுவதைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, இன்சுலின் தடையை அதிகரிக்கிறது/ இன்சுலின் தடை ஏற்படுவதால், எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவின் அபாயம் உண்டாகிறது.

  க்ளூகோகார்டிகாய்டு அளவைக் குறைப்பது எப்படி?

  அழற்சியைக் குறைக்க மனம் மற்றும் உடலில் அழுத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இலையுடைய காய்கறிகள், புரதம், ஆரோக்கிய கொழுப்பு கொண்ட நட்ஸ் , விதை , ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய் போன்றவை அழற்சியைக் குறைப்பதால் இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.ஒரு நாளில் 7-8 மணி நேரம் தூக்கம் தேவை. ஒரு நாளில் 3-4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். உங்கள் உடல் மற்றும் மனம் உறுதியாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் ஒரு நீண்ட நடைபயணம் மேற்கொள்ளலாம்.

  உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். உங்களுக்கான தனிமையான நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுங்கள். மனச்சோர்வு, பதட்டம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், மருத்துவ உதவியைப் பெறலாம். கடினமான உணவுக் கட்டுப்பாட்டு முறையை பின்பற்றுவதால் உடலில் அழற்சி அதிகமாகும். ஆகவே அவற்றை பின்பற்ற வேண்டாம். ஹார்மோன் மூலமாக ஏற்படும் எடை அதிகரிப்பு விசித்திரமானதாக இருக்கும். ஆகவே ஹார்மோன் சமச்சீரின்மையை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை,

  முன்னெச்சரிக்கை

  முன்னெச்சரிக்கை

  எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆகவே உங்கள் எடை அதிகரிப்பதற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்ளாமல், சுயமாக மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்கள் ஆரோக்கியத்தில் தீங்கு ஏற்படும். மருத்துவரிடம் ஆலோசனை செய்து, எடை அதிகரிப்பிற்கு காரணம் ஹார்மோன்கள் தான் என்பதை உறுதி செய்ய சில தேவையான சோதனைகளை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஆம் என்றால், ஒரு ஹார்மோன் எடை அதிகரிப்பதைத் தருகிறதா அல்லது பிற தூண்டுதல் ஹார்மோன்களும் உள்ளனவா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

  எனவே, உங்கள் எடை அதிகரிப்பதில் 10 ஹார்மோன்கள் தொடர்பு கொண்டுள்ளன. இது சிக்கலானதாக இருந்தாலும், உங்கள் எடை அதிகரிப்பதற்கான உண்மையான காரணத்தை இறுதியாக கண்டுபிடித்து நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட உதவிக்குறிப்பைப் பின்தொடரவும், உறுதியாக உங்களுக்குத் தெரிந்ததை விட விரைவாக எடை இழக்க முடியும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  10 Hormones Responsible For Weight Gain In Women

  Losing weight is not just about healthy eating. It’s also about keeping your hormones in check
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more