For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அல்சைமர் நோய்ப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

முதியவர்களை அதிகம் பாதிக்ககூடிய அல்சைமர் நோயினைப் பற்றி விரிவான தகவல்கள்

|

இன்றைக்கு முதியோர்களை பயமுறுத்தும் ஒரு விஷயமாக மாறி வந்து கொண்டிருக்கிறது அல்சைமர். அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயினால் முதியவர்களும் அவர்களை கையாளத்தெரியாமல் இளையோர்களும் பயங்கர சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

அவர்களை எப்படி அணுகவேண்டும் என்றே தெரிவதில்லை. அடிப்படை புரிதல்கள் இன்றி ஏற்படுகின்ற சங்கடங்களால் இருவருக்குமே மனக்கசப்பு ஏற்படுகிறது. உலக அல்சைமர் தினத்தை முன்னிட்டு அல்சைமர் குறித்து மிகவும் அவசியமாக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அல்சைமர் :

அல்சைமர் :

"நம்முடைய நினைவாற்றல் மற்றும் மூளை செயல்படுதிறன் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருவது டிமென்ஷியா என்ற நிலை. அதற்கு முக்கியக் காரணம் அல்சைமர் நோய்.

வயது அதிகரிக்கும்போது, மூளையில் சுரக்கும் ரசாயனங்களில் ஏற்படும் மாற்றங்கள், மூளையில் உள்ள சில நியூரான்களின் செயல் இழப்பு போன்றவையே அல்சைமருக்குக் காரணம்.

மூன்று வகை :

மூன்று வகை :

நினைவாற்றல் பிரச்னை மூன்று வகைப்படும். முதலாவது குறுகிய கால நினைவாற்றல். பயன்படுத்திய தொலைபேசி எண்ணை உடனடியாக மறந்து விடுதல் இந்த வகை.

அடுத்த வகை அண்மைக் கால நினைவாற்றல். இதில் சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்ததை நினைவுக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.

சிறு வயதில் நடந்த விஷயங்களை மறந்து விடுவது நீண்ட கால நினைவாற்றல் குறைபாடு.

யாருக்கெல்லாம் வரும் :

யாருக்கெல்லாம் வரும் :

வயதாகும் போது மூளை செயல்பாட்டுக்கு தேவையான வேதிப் பொருட்கள் உடலில் சரியாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால்தான் வயதாகும் போது நினைவாற்றல் பிரச்னை உருவாகிறது.

பெரும்பாலும், மரபியல் ரீதியாகத்தான் அல்சைமர் வருகிறது. மேலும், ரத்தக்குழாயில் கொழுப்புகள் படியக்கூடிய நோயான ‘அத்ரோஸ்க்லீரோசிஸிஸ்' (Atherosclerosis) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,

அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு, நரம்பு மண்டலத்தில் கோளாறுகள் இருப்பவர்களுக்கு அல்சைமர் வரலாம். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு அல்சைமர் நோய் வரும் வாய்ப்பு உள்ளது.

பாதிப்பு :

பாதிப்பு :

இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது.

முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்.

பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆரம்பம் :

ஆரம்பம் :

60 வயதைக் கடந்தவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் மூளை செயல் திறனில் மாறுதல் இருந்தால் கவனிக்க வேண்டும். உதாரணமாக வங்கி பரிமாற்றங்களில் தடுமாற்றங்கள்,

கடையில் சரியாக கணக்கு பார்த்து பணம் வாங்கத் தடுமாறுதல், பெண்கள் அன்றாடம் செய்யும் சமையலை செய்யத் திணறுவது, கார் ஓட்டுவது, சாலை விதிகளில் குழப்பம் வருவது, சாதாரணப் பிரச்னையை அணுகக் கூட மிகவும் கஷ்டப்படுவது போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

சிறுவயதிலிருந்தே பயிற்சி :

சிறுவயதிலிருந்தே பயிற்சி :

சிறு வயதில் இருந்தே பதற்றமான வாழ்க்கை சூழலை மாற்றி நேரத்தை திட்டமிட குழந்தைகளை பழக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற டென்ஷனை தவிர்க்கலாம்.

சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவை மனநிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் நினைவாற்றல் பிரச்னையை தவிர்க்கலாம். நேரத்தையும் வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பை குறைக்கலாம்.

அடுத்ததாக நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம். எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்.

டயட் :

டயட் :

மறதிப் பிரச்னை வராமல் தடுக்க சிறு வயதில் இருந்தே வைட்டமின் மற்றும் மினரல் சத்துகள் அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளவும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளும் அடிக்கடி பழச்சாறு குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். அசைவ உணவுகள் வேண்டாம். சூடான மற்றும் மசாலா கலந்த உணவுகளையும் தவிர்க்கவும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். பச்சைக் கீரைகள் தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் - ஏ, சி, இ நிறைந்த நிறைந்த, பழங்கள், காய்கறிகள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். கொலஸ்டிரால் குறைந்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்துத் தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What should do to avoid Alzheimer in old age?

What should do to avoid Alzheimer in old age?
Story first published: Thursday, September 21, 2017, 16:24 [IST]
Desktop Bottom Promotion