ஹோட்டல்களில் அரைகுறை உடையோடு பணிபுரியும் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனை என்ன தெரியுமா?

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ரெஸ்டாரென்ட் மற்றும் பாரில் பணிபுரியும் பெண்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சிறிய ஆடைகளை அணிவதால் அவர்களுக்கு ஆன்சைட்டி டிஸ்ஆர்டர் எனப்படும் மனப்பதட்டம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓரு புதிய தகவல் கூறுகிறது.

இந்த தகவலை பற்றிய ஆராய்ச்சியானது ஹோட்டல் மற்றும் பாரில் கண்காட்சிக்காகவும், பரிமாறுவதற்காகவும் பெண்களை அரை குறையான ஆடையுடன் வாடிக்கையாளர்களை கவர நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் வேலை சமயத்தில் பல மனரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர் என்று கூறுகிறது.

Waitress With Revealing Clothes May Suffer Anxiety Disorders

இந்த மாதிரியான ரெஸ்டாரென்ட் பெண்களை ஒரு செக்ஸ் காட்சிப் பொருளாக அங்கு வரும் ஆண்களிடம் காட்டுவதால் அவர்களின் உடலமைப்பு பற்றிய வக்கிரமான பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இந்த மாதிரியான ரெஸ்டாரென்ட்டிக்கு எதிராக கண்டிப்பாக அங்கு பணிபுரியும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று தவன் ஸ்ஷைமன்கி புரபொசர் யுனிவர்சிட்டி ஆஃப் டீனீஸ்யிலிருந்து கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து மன அழுத்தம் தவிர மெண்டல் ஹெல்த் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொள்ள போகிறோம் என்கிறார் ஸ்ஷைமன்கி.

முந்தைய ஆராய்ச்சிப்படி ரெஸ்ட்டாரெண்ட்டில் செக்ஸ் காட்சிப் பொருளாக பயன்படும் பெண்கள் தங்கள் மன ரீதியாகவும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர்.

Waitress With Revealing Clothes May Suffer Anxiety Disorders

எதிர் மறை பிரச்சினைகளான கவலை, அனிஸ்சிட்டி, கோபம், பாதுகாப்பின்மை, குழப்பம், சீரழிவு, குற்றவுணர்வு போன்ற நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

இந்த தகவலலை சைக்காலாஜி ஆஃப் உமன் க்கோர்ட்ர்லி என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த தகவலானது 252 அமெரிக்க ரெஸ்டாரென்ட்களில் பணிபுரியும் 18-66 வயதுள்ள பெண்களிடம் இருந்து பெறப்பட்டது.

மக்களாகிய நாம் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த மாதிரியான ரெஸ்டாரென்ட்டுகளுக்கு சப்போர்ட் பண்ணாமல் இருந்தால் நல்ல மாற்றத்தை கொண்டு வரலாம் என்று ஸ்ஷைமன்கி கூறுகிறார்.

English summary

Waitress With Revealing Clothes May Suffer Anxiety Disorders

Waitress With Revealing Clothes May Suffer Anxiety Disorders
Story first published: Friday, July 21, 2017, 8:00 [IST]