இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தா உடனே மருத்துவரை சந்திக்கணும்!

Posted By:
Subscribe to Boldsky

பலரும் ஸ்ட்ரஸ் என்பது ஏதோ ஒரு வியாதியென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது. மன அழுத்தம் என்பது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

மன அழுத்தம் ஏற்ப்பட்டால் இந்த பிரச்சனை மட்டும் ஏற்படும் என்பதல்ல, உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா உறுப்புக்களும் பாதிப்படையும். அன்றாட வேலைகளில் தொய்வு ஏற்படும். கடினமான நேரங்களில், அந்த பிரச்சனையை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்கான ஓர் இடம் தான் இந்த ஸ்ட்ரஸ்.

சின்ன சின்ன சங்கடங்களுக்கு கூட மனம் வருந்துனீர்களானால் உங்களுக்கு ஸ்ட்ரஸ் அதிகம் இருக்கும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியமாகும். உங்களுக்கு தீவிரமான மன அழுத்தம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள சில அறிகுறிகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதயம் :

இதயம் :

ஸ்ட்ரஸ் அதிகமாக இருந்தால் உங்களுக்கு பிரசர் அதிகமாகும். வழக்கத்திற்கு மாறான ரத்தஓட்டத்தை சமாளிக்க முடியாமல் இதயம் திணறும். இதனால் பலமாக மூச்சு வாங்குவது, மாரடைப்பு போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

சருமம் :

சருமம் :

மன அழுத்தம் உங்களின் சருமத்தையும் பாதிப்படையச் செய்திடும். அதிக மன அழுத்தத்தினால் ஒரு வகை திரவம் உங்கள் அதிகமாக சுரக்கும் . இதனால் உங்கள் சருமம் ஏற்கவே இருப்பதை விட பல மடங்கு சென்சிடிவ்வாக மாறிடும். அதோடு அதிக எண்ணெய் வழியும். இதனால் ஏராளமான சருமப் பிரச்சனைகள் உண்டாகும்.

எடை மாற்றம் :

எடை மாற்றம் :

அதிக மன அழுத்தம் காரணமாக உடல் எடை கூடுவது அல்லது மிகவும் உடல் எடை குறைவது ஆகியவை ஏற்படும். ஏனென்ன்றால் மன அழுத்தம் ஏற்ப்பட்டால் உங்களின் ஹார்மோன்களையும் பாதிக்கச் செய்திடும்.

செரிமானப் பிரச்சனைகள் :

செரிமானப் பிரச்சனைகள் :

மன அழுத்தம் அதிகமானால் உங்களின் வயிற்றில் அதிகப்படியான அசிட் சுரக்கும். இதனால் வழக்கமாக நடைபெறும் செரிமானம் பாதிப்படையும். அதே நேரத்தில் சரிவர உணவு உண்ணாமல், தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் செரிமானம் அதிகமாக பாதிப்படையும்.

கூந்தல் :

கூந்தல் :

பொதுவாக நன்றாக வளர்ச்சியடைந்த முடி தான் உதிரும். ஆனால் மன அழுத்தம் இருப்பவர்களுக்கு வளரும் பருவத்தில் இருக்கும் முடி உதிர்ந்திடும். இதனால் அதிகமாக முடி உதிர்வது போல உங்களுக்குத் தோன்றும்.

ஹார்மோன் மாற்றம் உண்டாவதால் தான் அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Time to consult a Doctor when your stress level is worst.

Time to consult a Doctor when your stress level is worst.
Story first published: Tuesday, September 5, 2017, 10:55 [IST]
Subscribe Newsletter