Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
பத்தே நாட்களில் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டுமா? அப்ப இந்த ஜூஸை குடிங்க...
இங்கு 10 நாட்களில் கல்லீரலை சுத்தம் செய்யும் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி தான் கல்லீரல். உடலிலேயே கல்லீரலில் தான் அழுக்குகள் அதிகம் சேரும். ஆகவே இதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கல்லீரல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான், உடலில் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

ஒருவர் அடிக்கடி எதையேனும் சாப்பிடுபவராயின், கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகம் சேரும் வாய்ப்புள்ளது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை கல்லீரலை வேகமாக சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுத்துள்ளது. அதைப் படித்து குடித்து, உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 4
தேன் - 1 டேபிள் ஸ்பூன்

நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் சி சத்து, கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்களை முற்றிலும் வெளியேற்றி, ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கும்.

தேன்
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கல்லீரலை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் செல்களுக்கு ஊட்டமளித்து, கல்லீரலைத் தாக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

தயாரிக்கும் முறை:
மலை நெல்லிக்காயை வெட்டி துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து, தேவையான அளவு நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொண்டால், ஜூஸ் தயார்.

குடிக்கும் முறை:
இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி 10 நாட்கள் குடித்து வந்தால், கல்லீரல் முழுமையாக சுத்தமாகிவிடும்.



Click it and Unblock the Notifications
