சர்க்கரை நோயாளிகள் சுடு தண்ணீரில் குளிப்பதற்கு முன்னால் இதை சோதித்திடுங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பனிக்காலம் துவங்கிவிட்டது. பாத்ரூமுக்குச் சென்று தண்ணீரில் கை வைப்பது என்னவோ பனிப்பிரதேசத்தில் சென்று ஐஸ் கட்டியை தொடுவது போன்ற உணர்வு தான் நமக்கு ஏற்படும். அதுவும் இந்தக் காலத்தில்,கதகதப்பான படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனம் வராது. ஆனாலும் வேறு வழியில்லை எழுந்து தானே ஆக வேண்டும்.

இந்தக் காலத்தில் வெந்நீர் பயபடுத்த எல்லாரும் தயாராக இருந்தாலும் வெந்நீரில் குளிப்பது நல்லதல்ல என்றும், பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான் நல்லது, அது தான் நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் சொல்லி பீதியை கிளப்பிக் கொண்டிருப்பார்கள்.

இப்போது இவை இரண்டு நீரில் குளிப்பதன் சாதக பாதகங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருமிகள் அழிந்திடும் :

கிருமிகள் அழிந்திடும் :

குழந்தை பிறந்ததிலிருந்து தொடர்ந்து 100 நாட்கள் வரை வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி கூடும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைப்பதால் கிருமிகள் அழிந்துவிடும்.

தொடர் சுடுநீர் குளியலை அவரவர் உடல் தாங்கும் ஆற்றலைப் பொறுத்து தொடரலாம்.

காலை மாலை :

காலை மாலை :

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் உடலில் கை, கால்களில் புழுதிக்காற்று மூலமாக கிருமிகள் பரவும். அதனால், அவர்களை காலை, மாலை என இரு வேளையும் வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

 ஆண் பெண் :

ஆண் பெண் :

வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபடும். குளிர்காலங்களில் வேலை செய்வதற்கான முனைப்பு குறைந்து ஒருவித சோம்பல் ஏற்படுவது இயல்பு. வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஈரப்பதம் :

ஈரப்பதம் :

சுடுநீரில் குளிப்பதால் நன்மைகள் இருந்தாலும் கெடுதல்களும் உண்டு. பொதுவாக அளவுக்கு அதிகமாக தண்ணீரை கொதிக்க வைத்து குளிப்பதால், இயற்கையாக சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, அவை வறண்டு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றம் வரலாம்.

அதிக சூடு :

அதிக சூடு :

அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படும். ஆண்கள் பாத்டப்பில் நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பதால் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 5 நிமிடங்களுக்குள் குளித்து விட வேண்டும். பெண்கள் சுடுதண்ணீரில் குளிப்பதால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

துடைத்தெடுக்க வேண்டாம் :

துடைத்தெடுக்க வேண்டாம் :

நோயாளி எனில், அனைத்து தேவைகளுக்குமே சுடுதண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். சிலர் நோயாளிகளுக்கு வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள். அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும். அவர்களும் வெந்நீரில் குளிப்பது நல்லது.

சருமப் பிரச்சனை :

சருமப் பிரச்சனை :

சோரியாசிஸ் போன்ற சரும நோயாளிகளுக்கு இயற்கையாகவே சருமத்தில் எரிச்சல் மற்றும் வறட்சி காணப்படும். இவர்கள் வெந்நீரில் குளிப்பதால் நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும். பொடுகு பிரச்னை உள்ளவர்கள் சுடுதண்ணீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் :

சர்க்கரை நோயாளிகள் :

சர்க்கரை நோய் முற்றிய நிலையில், சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருப்பதால் இவர்களுக்கு கொதிக்கும் நீராக இருந்தாலும், சூடு குறைவாகவே தெரியும்.

உடன் இருப்பவர்களின் உதவியுடன் தண்ணீரின் வெப்ப அளவை தெரிந்து கொண்டு குளிப்பது நல்லது. இல்லையெனில், அதிக சூடான நீரை மேலே ஊற்றிக் கொள்ளும்போது உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.

குளிர்ந்த நீர் :

குளிர்ந்த நீர் :

காலையில் எழுந்து தினமும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் குளித்தாலே போதும். அதிலேயே உடல் வெப்பம் குறைந்து, செல்கள் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பி ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் சுறுசுறுப்பாகும்.

நம்முடைய வாழ்விடம் வெப்பமான பகுதி என்பதால் நம் உடலுக்கு தேவையான வெப்பம் தானாகவே கிடைத்திடும். இந்த குளிர்ந்த நீரினால் கிடைக்கும் குளிர்ச்சி கூட ஒரு மணி நேரத்தில் வெப்பமாகிடும்.

கூந்தல் :

கூந்தல் :

சூடான நீரைக் கொண்டு தலைக்குளிக்க வேண்டாம். இப்படி அதிக வெப்பம் உங்கள் தலையில் பட்டால் தலையில் இருக்கும் மயிர்கால்கள் எல்லாம் வலுவிழந்து விடும். இதனால் முடி அதிகமாக கொட்டும். உங்கள் உடல் எந்த அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு முடியின் வளர்ச்சி இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

கவனம் :

கவனம் :

மிகவும் சூடான தண்ணீரைக் கொண்டு குளித்து வந்தால் உங்கள் தோலின் மிருதுவான தன்மை மாறிடும். உடலில் இருக்கும் எண்ணெய்ப்பசை நீங்கிடும்.

தோலின் மினுமினுப்பு குறைந்திடும், சருமத்தில் இருக்கும் மெலனின்கள் பாதிப்படையும். இதனால் சருமத்தில் எளிதில் தொற்று உண்டாகி கொப்புளங்கள், அரிப்பு ஆகியவை உண்டாகும். மிதமான சூட்டில் குளிப்பதே நல்லது.

 சுவாசம் :

சுவாசம் :

குளிர் மற்றும் சளி காரணமாக மூக்கடைப்பு ஏற்படும். இதனால், சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.

சருமத்தில் உள்ள நுண்துளைகளில் உள்ள அடைப்பை நீக்கி தூய்மையாக வைத்திருக்கிறது.

மன அழுத்தம் :

மன அழுத்தம் :

குளிர்ந்த நீரில் குளிக்கும்போது ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphoctes) எனப்படும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடி அதிகரிக்கும்.

மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குளிர்ந்த நீரில் நீராடும்போது குறைகிறது.

செரிமானம் :

செரிமானம் :

நாம் உண்ணும் உணவு சீராக செரிமானம் ஆக வேண்டியது அவசியம். இல்லையென்றால் அது பல்வேறு உபாதைகளை ஏற்படுத்திடும். உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி, நச்சுத்தன்மைகள் வெளியேறுவதற்கு வளர்சிதை மாற்றம் அவசியம். குளிர்ந்த நீரில் குளிப்பதால், இந்தப் பணி சீராக நடக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Health Benefits of Taking a Hot Bath

The Health Benefits of Taking a Hot Bath
Story first published: Tuesday, December 5, 2017, 17:56 [IST]
Subscribe Newsletter