சர்க்கரை நோயாளிகளுக்கு அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறதா?

Posted By:
Subscribe to Boldsky

உங்களுடைய சிறுநீர் வெளியேறும் அளவு மற்றும் அதன் நிறத்தைக் கொண்டே உங்களுடைய உடல் நலத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக சிறுநீர் எந்த குறிப்பிட்ட நிறத்திலும் இருக்காது லேசாக மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

இளம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைத்திருக்கிறது. சிறுநீர்ப்பையும் துரிதமாக வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ளலாம். நிறத்தை தாண்டி சிறுநீர் சில நேரங்களில் அதீத நாற்றமெடுக்கும். குறிப்பாக உங்களது சிறுநீரில் அமோனியா வாடை வந்தால் என்ன காரணம்? அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரோட்டீன் உணவுகள் :

ப்ரோட்டீன் உணவுகள் :

உங்கள் உடலில் ஏற்படுகிற தொண்ணூறு சதவீத பிரச்சனைகளுக்கு நீங்கள் சாப்பிடுகிற உணவுகள் அதான் முக்கியக்காரணியாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களிடத்தில் ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள் என்று சொல்லப்படும்.

இது அளவுக்கு மீறிச் செல்லும் போது, அதாவது நீங்கள் ப்ரோட்டீன் உணவுகளை அளவுக்கு மீறி எடுக்கும் போது உங்களது சிறுநீரில் அமோனியா வாடை வரும். ப்ரோட்டீன் உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நம் உடலில் நைட்ரோஜன் அளவினை அதிகப்படுத்தும் அதுவே அமோனியா வாடைக்கு காரணம்.

டீ ஹைட்ரேஷன் :

டீ ஹைட்ரேஷன் :

ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் அமோனியா வாடை ஏற்படும்.அதை விட சிறுநீரின் நிறமும் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிடும்.

கல்லீரல் :

கல்லீரல் :

உங்களது கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சிறுநீரில் அமோனியா வாடை ஏற்படும். ஏனென்றால் உடலில் இருக்கிற அமோனியாவை சிதைக்கிற முக்கியப் பணியை கல்லீரல் மேற்கொள்கிறது.

கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அந்த பாதிப்பு உங்கள் சிறுநீரில் தெரிந்திடும்.

மெனோபாஸ் :

மெனோபாஸ் :

நாற்பத்தைந்து வயதைக் கடந்த ஆண் பெண் இருபாலருக்கும் மெனோபாஸ் சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றில் பெண்களுக்கு சிறுநீரில் அமோனியா வாடை வரலாம்.

உணவு முறை மாற்றத்தினால் இதனை சரி செய்திடலாம்.

கர்ப்பம் :

கர்ப்பம் :

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பிறரை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.அப்படி குடிக்காத பட்சத்தில் அவர்களுக்கு டீ ஹைட்ரேசன் ஏற்படும். இதனால் அவர்களது சிறுநீரில் அமோனியா வாடை வருவதற்கு வாய்ப்புண்டு.

பாக்டீரியா தொற்று :

பாக்டீரியா தொற்று :

உங்களது உடலில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் அதன் அறிகுறியாக உங்களது சிறுநீரில் அமோனியா வாடை கலந்து வரும். அதோடு, சிறுநீர்ப் பாதையிலும் கிட்னியிலும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் கூட இந்தப் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

எஸ் டி டி :

எஸ் டி டி :

செக்ஸுவலி ட்ரான்ஸ்மிட்டட் டிசீஸ் எனப்படுகிற பாலியல் சார்ந்த நோய்கள் ஏற்ப்பட்டிருந்தால் கூட சிறுநீரில் அமோனியா வாடை ஏற்படும். பெண்களின் வெஜைனாவில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் கூட சிறுநீரில் அமோனியா வாடை வரும்.

மேப்பிள் சுகர் யூரின் டிசீஸ் :

மேப்பிள் சுகர் யூரின் டிசீஸ் :

இது ஒரு வகையான மரபணு சார்ந்த விஷயம் என்றே சொல்லலாம். இந்த நோய் ஏற்பட்டால் கூட உங்களது சிறுநீரில் அமோனியா வாடை வரலாம். இந்த நோய் ஏற்பட்டால் உடலில் இருக்கிற அமினோ அமிலங்களை உடைக்க முடியாது. இதனால் அது அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறிடும்.

இதனாலேயே சிறுநீரில் அமோனியா வாடை வருகிறது.

மருந்துகள் :

மருந்துகள் :

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலோ அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகளை நிறைய எடுத்துக் கொள்கிறவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கும் சிறுநீரின் வாடை மாறும், குறிப்பாக இந்தப் பிரச்சனை குழந்தைகளுக்குத் தான் அதிகம். டைப் 1 டயப்பட்டீஸ் பிரச்சனையில் சிக்கியிருக்கிற குழந்தைகளின் சிறுநீர் வாடை கூட அமோனியா வாடை கலந்து வரும்.

குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது இந்த வாடை வந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

என்ன செய்யலாம்? :

என்ன செய்யலாம்? :

சிறுநீரில் அமோனியா வாடை வருகிறதென்றால் முதலில் அதை கடந்து செல்லாமல் என்ன பிரச்சனை என்று கவனிக்கப் பழகுங்கள். சரியான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உடலில் ஏற்ப்பட்ட எத்தைகைய பாதிப்பினால் இந்தப் பிரச்சனை உண்டாகியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை சர்வ சாதரணமாக கடந்து செல்ல வேண்டாம். பெரிய பிரச்சனை என்றாலும் உரிய காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது இல்லையெனில் அது பெரும் ஆபத்தை உண்டாக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

தண்ணீரின் அவசியம் :

தண்ணீரின் அவசியம் :

உடல் ஆரோக்கியத்திற்கு, சரும ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக மிக அவசியமானது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். சிறுநீரில் அமோனியா வாடை வருவதற்கு முக்கியக் காரணியாக சொல்லப்படுவது டீ ஹைட்ரேசன் தான்.

இரவுகளில்.. :

இரவுகளில்.. :

அதே போல பகல் நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இரவு நேரத்தில் குடித்தால் ஒன்று தூக்கத்தில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.

இது உங்களது தூக்கத்தை பாதிக்கும். அல்லது இரவு முழுவதும் சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் இருப்பதால் காலையில் சிறுநீர் கழிக்கும் போது அமோனியா வாடை வரலாம்.

 உணவுகள் :

உணவுகள் :

உங்களது உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். குறிப்பாக ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்த்திடுங்கள். அசைவ உணவுகள், கடலை,சோயா பீன்ஸ் ஆகியவற்றில் நிறைய ப்ரோட்டீன் இருக்கிறது.

என்னென்ன சாப்பிடலாம் :

என்னென்ன சாப்பிடலாம் :

பச்சைக் காய்கறிகள் நிறையச் சாப்பிடலாம். இதைச் சாப்பிடுவதால் மட்டும் உங்கள் டயட்டிலிருந்து ப்ரோட்டீன் முற்றிலும் குறைக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

அதை விட உடல்ஆரோக்கியத்திற்கு ப்ரோட்டீன் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதை முற்றிலுமாக குறைக்காமல் நாம் எடுத்துக் கொள்ளும் அளவினை மட்டும் குறைத்துக் கொண்டால் நல்லது.

பள்ளிக்குழந்தைகள் :

பள்ளிக்குழந்தைகள் :

இது போன்ற சிறுநீர்ப் பிரச்சனைகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். தங்கள் ஆசிரியரிடம் சொல்ல வெட்கப்பட்டோ அல்லது பயந்து கொண்டோ நீண்ட நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் இருக்கிறார்கள்.

இன்னும் சில குழந்தைகள் தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்லி தண்ணீரே குடிக்காமல் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான பழக்கம்.

யூரின் டிப்ஸ்டிக் டெஸ்ட் :

யூரின் டிப்ஸ்டிக் டெஸ்ட் :

உங்களது சிறுநீரின் நிறம் மாறியிருந்தாலோ அல்லது அதன் வாடை வித்யாசமானதாக தெரிந்தாலோ நீங்களே வீட்டில் இந்த டிப்ஸ்ஸிடிக் டெஸ்ட்செய்திடலாம்.

யூரின் டிப்ஸ்டிக் அனைட்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். அதைக் கொண்டு உங்களது சிறுநீரை பரிசோதிக்கலாம்.இதில் ஏதேனும் தவறாக இருந்தல உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியமாகும்.

சுத்தம் :

சுத்தம் :

உங்களது பிறப்புறுப்புக்களை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்று. ஏனென்றால் அங்கே பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் கூட சிறுநீரில் அமோனியா வாடை வருவதற்கான வாய்ப்புண்டு.

அத்துடன் பல்வேறு உபாதைகளையும் ஏற்படுத்திடும்.அதனால் எப்போதும் உங்களது பிறப்புறுப்புக்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason For Ammonia Smell In Urine

Reason For Ammonia Smell In Urine
Story first published: Thursday, December 21, 2017, 9:00 [IST]