டெங்கு, மலேரியா பற்றி மக்கள் மத்தியில் உலவும் கட்டுக்கதைகள்!

Written By:
Subscribe to Boldsky

மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் இரண்டுமே மிக கொடிய காய்ச்சல்கள் தான். இது மழைக்காலத்தில் இந்தியாவில் பரவும் ஒரு நோயாகும். இது கொசுக்களால் உண்டாகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கை படி 2016 ஆம் ஆண்டு மொத்தமாக 10,59,437 பேர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டனர். சென்ற வருடம் செம்டம்பர் மாதம் இந்தியா முழுவதும் 40,000 மக்கள் டெங்கு காய்ச்சலால பாதிக்கப்பட்டனர். இதில் டெல்லியில் மட்டும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4,431 ஆகும்.

இந்த எண்ணிக்கைகளானது நமக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்வதாக உள்ளன. எனவே இதற்காக நாம் முன்னேச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த பகுதியில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களிடையே பரவி வரும் சில கட்டுக்கதைகளையும், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளையும் பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1 :

கட்டுக்கதை 1 :

டெங்கு மற்றும் மலேரியா ஆகியவை நகரப்பகுதிகளில் குறைவாக தான் வரும் என்ற நம்பிக்கை நம்மில் சிலரிடையே உள்ளது.

உண்மை :

மலேரியா, கிராமப்புறங்களில் தான் அதிகமாக வரும், நகரப்புறங்களில் தான் அதிகமாக வரும் என்பதில்லை. சுத்தமில்லாத பகுதிகளில் இவை பரவும் வாய்ப்புகள் அதிகம். இந்த மலேரியா கொசுக்கள் செடிகள், வாழிகள், பூந்தொட்டிகள், கழிப்பறைகளின் மூலைகளில் கூட ஒளிந்திருக்க கூடும் என்பதால் போதுமான அளவு கவனிப்பு தேவை.

கட்டுக்கதை 2:

கட்டுக்கதை 2:

குழந்தைகள், பெரியவர் என அனைவருக்கும் இந்த நோயானது சம அளவு பாதிப்பை தான் ஏற்படுத்தும்.

உண்மை

கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் முக்கியமாக ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டெங்கு மற்றும் மலேரியாவினால் உண்டாகும் பாதிப்பு அதிகமாகும். ஏனெனில் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியானது டெங்கு மற்றும் மலேரியாவை தாங்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்காது.

கட்டுக்கதை 3:

கட்டுக்கதை 3:

மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய இரண்டுமே ஒன்று தான்.

உண்மை :

டெங்கு மற்றும் மலேரியா இரண்டிற்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் தெரிந்தாலும் கூட அவை இரண்டும் ஒரே வகையான நோய் அல்ல.. அறிகுறியானது முதலில் தலைவலியாக ஆரம்பிக்கும், பின்னர் சோர்வு, கலைப்பு போன்றவை ஏற்படும். தசைகளில் வலி உண்டாகும். இது பின்னாளில் கடுமையானதாக மாறிவிடும். இந்த இரண்டு நோய்களுமே கொசுக்கடியால் தான் உண்டாகிறது. ஆனாலும் கூட இவை இரண்டிற்கும் தனித்தனி சிகிச்சை தேவைப்படுகிறது. இதனை உடனடியாக கண்டறிவதும், அவற்றை சரி செய்வதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

கட்டுக்கதை 4:

கட்டுக்கதை 4:

கொசுக்கள் மழைக்காலத்தில் மட்டும் தான் இருக்கும்.

உண்மை :

கொசுக்கள் மழைக்காலத்தில் அதிகப்படியான எண்ணிகையில் இருக்கும். அதற்காக கொசுக்கள் கோடைக்காலத்தில் காணாமல் மறைந்து போகும் என்று அர்த்தம் கிடையாது. மழைப்பெய்யும் போதும், மழைக்கு பிறகும் கூட இந்த கொசுக்களின் நடமாற்றம் இருக்கும் என்பதால், நீங்கள் எப்போதும் இந்த கொசுக்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டியது அவசியம்.

கட்டுக்கதை 5:

கட்டுக்கதை 5:

கொசு கடித்த பின்னர் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உண்மை :

மக்கள் ஒவ்வொருவருக்கும் கொசு கடியானது ஒவ்வொரு விதமான எதிர்வினையை உண்டாக்கும். ஒவ்வொருவருக்கு சிவப்பு நிற எரிச்சலை உண்டாக்க கூடிய வலியுடன் கூடிய கொப்பளங்கள் வரும். ஒரு சிலருக்கு இது போன்று கொப்பளங்கள் வராது. இது மலேரியா அல்லது டெங்கு உங்களை தாக்காது என்பதற்கான அர்த்தம் அல்ல. உங்களுக்கு மலேரியா அல்லது டெங்குவின் அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியமாகும்.

கட்டுக்கதை 6 :

கட்டுக்கதை 6 :

மலேரியா மரணத்தை ஏற்படுத்தாது.

உண்மை :

மலேரியா மரணத்தை ஏற்படுத்தாது என்று நீங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், இதன் தாக்கம் அதிகரிக்கும். உங்களை இது மீண்டும் மீண்டும் தாக்கும் வாய்ப்புகள் உண்டாகும். இதனால் உங்களது உடலின் பாகங்கள் சிறிது சிறிதாக பாதிப்படைந்து மரணம் வரை கொண்டு செல்லவும் வாய்ப்புகள் உண்டு.

 கட்டுக்கதை 7 :

கட்டுக்கதை 7 :

ஒருமுறை உங்களுக்கு மலேரியா அல்லது டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டால், மறுமுறை ஏற்பட வாய்ப்பில்லை

உண்மை :

ஒரு முறை பாதிக்கப்பட்டால் மறுமுறை இந்த நோய்களால் பாதிக்கப்பட மாட்டோம் என்று நீங்கள் சர்வ சாதாரணமாக இருந்து விட கூடாது. இந்த நோய்களுக்கு தகுந்த சிகிச்சை என்பது மிக மிக இன்றியமையாதது. கவனக் குறைவுடன் இந்த நோய்கள் மறுமுறை வராது என்று அலச்சியம் செய்ய வேண்டாம்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

கடும் காய்ச்சல், வியர்த்து கொட்டுதல், குளிர் ஜூரம், நடுக்கம், தலைவலி, தசைவலி, உடல் சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை மலேரியாவின் அறிகுறிகளாகும்.

சிகிச்சை :

சிகிச்சை :

மலேரியாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் இரத்தசோகை ஏற்படலாம்; உயிருக்கே ஆபத்தாகிவிடலாம். மலேரியாவுக்கான அறிகுறிகள் அதிகமாவதற்கு முன்பே டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

எப்படி பரவும் ?

எப்படி பரவும் ?

மலேரியா கிருமிகள் இருக்கும் கொசு, ஒருவரை கடிக்கும்போது அவர் மலேரியாவால் பாதிக்கப்படுவார். மற்ற கொசுக்கள் இவரைக் கடிக்கும்போது அந்த கொசுக்களுக்கும் மலேரியா கிருமிகள் கடத்தப்படுகிறது. இந்த கொசுக்கள் மற்றவர்களை கடிக்கும்போது அவர்களுக்கும் மலேரியா பரவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

myths about dengue and malaria

myths about dengue and malaria
Story first published: Monday, October 23, 2017, 15:06 [IST]