2 நிமிடத்தில் சளியை நீக்கி, மூக்கடைப்பை சரி செய்ய, இதை நெஞ்சில் தடவுங்க!

Posted By:
Subscribe to Boldsky

சளி தொல்லை என்றால் நம்மில் பலர் உடனே ஒரு சிலர் இரசயான கலப்பு கொண்டு தயாரிக்கப்பட்ட வெபர் ரப் (Vapor Rub), இன்ஹேலர் போன்றவற்றை கையில் எடுத்துக் கொள்வோம். ஓரிரு நாட்களுக்கு இவற்றை மூக்கிலும் நெஞ்சிலும் தேய்த்து எரிச்சல் கூடிய நிலையில் உலாவி கொண்டிருப்போம்.

ஆனால், இவற்றுக்கு பதிலாக காலம், காலமாக நாம் சளி, மூக்கடைப்புக்கு தீர்வு காண பயனளிக்கும் யூக்கலிப்டஸ் , தேங்காய் எண்ணெய், தேன் போன்ற பொருட்களை கொண்டு இயற்கை வெபர் ரப் (Vapor Rub) தயாரித்து பயன் பெறுவது எப்படி என இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்!

தேவையான பொருட்கள்!

  • தேன் மெழுகு (Beeswax) இரண்டு டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் 1/3 கப்
  • யூக்கலிப்டஸ் எண்ணெய் 30 சொட்டு
  • புதினா எண்ணெய் (Peppermint Oil) 30 சொட்டு
  • வைட்டமின் ஈ எண்ணெய் 12 சொட்டு

தேவையான சாமான்கள்!

தேவையான சாமான்கள்!

  1. சிறிய கடாய்
  2. கரண்டி
  3. 4 oz பாத்திரம் அல்லது கண்ணாடி ஜார்
செய்முறை | ஸ்டெப் #1

செய்முறை | ஸ்டெப் #1

சிறிய கடாயை இளஞ்சூட்டில் வைக்கவும். தேன் மெழுகும், தேங்காய் எண்ணெயும் ஒன்றாக கலக்கும் வரை இளஞ்சூட்டில் வைத்திருக்கவும். பிறகு சூட்டை நிறுத்தி விடுங்கள். இந்த கலவை இதமான நிலைக்கு வரும் வரை காத்திருக்கவும்.

செய்முறை | ஸ்டெப் #2

செய்முறை | ஸ்டெப் #2

பிறகு பிற எண்ணெய்களை சேர்த்து, மெதுவாக கலக்கவும். நன்கு கலக்கிய பிறகு அதை உடனே நான்கு அவுன்ஸ் பாத்திரம் அல்லது கண்ணாடி ஜாரில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள்.

செய்முறை | ஸ்டெப் #3

செய்முறை | ஸ்டெப் #3

இதை நீராவி பிடிப்பதால் / நெஞ்சில் தடவுவதால் சளி தொல்லை மற்றும் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய்!

தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் மெழுகு கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை பொருள் சற்று தடிமனான பொருளாக இருக்கும். இதை நெஞ்சில் தடவி விடுவதால் மூக்கடைப்பு நீங்கி நன்கு சுவாசிக்க முடியும். சளி தொல்லையில் இருந்து பாதுகாக்க முடியும்.

தேங்காய் எண்ணெய் அபாயம் உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் திறன் கொண்டது. இது மார்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளித்து வலுவாக்கும்.

யூக்கலிப்டஸ் எண்ணெய்!

யூக்கலிப்டஸ் எண்ணெய்!

யூக்கலிப்டஸ் எண்ணெய் சைனஸ், ஆஸ்துமா முதற்கொண்டு சுவாச குழாய் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வளிக்கும் ஒரு சிறந்த இயற்க்கை பொருளாகும். இது சுவாச மண்டலத்திற்கு அதிக ஆக்சிஜன் கொண்டு செல்ல பயனளிக்கிறது. மேலும், உடலில் உள்ள செல்களிலும் ஆக்சிஜன் அதிகரிக்க உதவுகிறது.

புதினா எண்ணெய் (Peppermint Essential Oil)

புதினா எண்ணெய் (Peppermint Essential Oil)

இதில் இருக்கும் மென்தால் பொருள் முதலில் குளுமையை அளித்தாலும், மெல்ல சூட்டை அதிகரிக்க செய்யும். பிறகு இது சுவாச குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி இலகுவாக சுவாசிக்க பயன் அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Make this vapor rub in 2 minutes to clear mucus and eliminate congestion

Make this vapor rub in 2 minutes to clear mucus and eliminate congestion
Subscribe Newsletter