ஆல்கஹால் நனைத்த பஞ்சை தொப்புளில் தடவுவதால் பெறும் நன்மைகள் என்ன?

Posted By:
Subscribe to Boldsky

ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதா, பாட்டி வைத்தியம் என பல மருத்துவ முறைகள் இருப்பது போல சிலர் கை வைத்தியமும் பின்பற்றுவர்கள். யாரோ ஒருவர் ஒருசில முறையை கையாண்டு அவர்களுக்கு அளித்த நன்மைகளை கூறி அதை மற்றவர்கள் பயன்படுத்த அறிவுரை கூறுவார்கள்.

ஆனால், இது அனைவருக்கும் நன்மை அளிக்குமா? இதனால் எதிர்மறை தாக்கம் உண்டாக வாய்ப்புகள் உள்ளனவா? என்பதற்கு தகுந்த அறிவியல் ஆராய்ச்சி ஆய்வறிக்கை தகவல்கள் இருப்பதில்லை.

இந்த வகையில் ஒருசிலர் காய்ச்சல், சளிக்கு கையாளும் கைவைத்தியம் தான் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து தொப்புளில் தடவும் முறை. இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இது சரியா, தவறா? என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை!

செய்முறை!

பஞ்சை 50% ஆல்கஹாலில் நனைத்து அதை தொப்புளில் மிருதுவாக தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உடல் வலி குறைந்து, இலகுவாக உணர முடியும் என கூறப்படுகிறது.

கூறப்படும் நன்மைகள்!

கூறப்படும் நன்மைகள்!

இவ்வாறு ஆல்கஹால் நனைத்த பஞ்சை தொப்புளில் தடவுவதால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்று வலி, மாதவிடாய் காரணமாக ஏற்படும் வலி குறையும் என கூறப்படுகிறது.

ஆய்வு என்ன கூறுகிறது!

ஆய்வு என்ன கூறுகிறது!

நடுத்தர, ஏழை பெற்றோர்கள் தான் இந்த முறையை பயன்படுத்துகின்றனர். இம்முறை உடல் வெப்பத்தை குறைத்து காய்ச்சல் சரியாக செய்கிறது எனிலும், தொடர்ந்து இம்முறையை பின்பற்றுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் எதிர்மறை தாக்கம் உண்டாக காரணியாக அமையலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோளாறுகள்!

கோளாறுகள்!

சில ஆய்வுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் குறைய பஞ்சில் ஆல்கஹால் நனைத்து தொப்புளில் தடவியதால் இதய கோளாறுகள், நரம்பியல் கோளாறுகள் உண்டானதாக ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அசிட்டமினோஃபென்!

அசிட்டமினோஃபென்!

சிறந்த பலன் பெற வேண்டும் என்றால் ஒரு வயது கடந்த குழந்தைகளுக்கு அசிட்டமினோஃபென் என்ற பாராசிட்டமாலை தரலாம். அதையும் மருத்துவரின் அறிவுரையின்படியே தர வேண்டும்.

இது காய்ச்சல் குறைய உதவும் என்கின்றனர். இதையும் குழந்தைகள் நல மருத்துவரின் அறிவுரையின் பேரில் பயன்படுத்துவதே சரி.

குறிப்பு!

குறிப்பு!

பிரபலமாக பெற்றோர்கள் பின்பற்றும் இந்த ஆல்கஹால் நனைத்த பஞ்சை தொப்புளில் தடவும் மருத்துவ முறை காய்ச்சல் சரிப்படுத்தும் என்ற போதிலும். இதனால் சருமத்திற்கு அபாயமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Rubbing Alcohol Can Help Cool a Fever?

Is Rubbing Alcohol Can Help Cool a Fever?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter