ஃபில்டர் காபி நல்லதா கெட்டதா? படிச்சு தெரிஞ்சுக்கோங்க...

Posted By:
Subscribe to Boldsky

நம்மில் பெரும்பாலானோர் ஃபில்டர் காபியை விரும்பி குடிப்போம். பொதுவாக ஒரு கப் காபியைக் குடித்தால், எப்பேற்பட்ட மனநிலையும் சாந்தமாகும். ஆனால் காபியை ஒருவர் அதிகமாக குடித்தால், அதில் உள்ள காஃப்பைன் ஒரு அடிமைப் பொருள் போல் செயல்பட்டு, அதற்கு நம்மை அடிமையாக்கிவிடும்.

அதோடு, காபி ஒருவரது உயிரைக் கூட பறிக்கும் என்பது தெரியுமா? ஆம், காபி ஒருவருக்கு 15 சதவீதம் இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வு சொல்கிறது. அதிலும் ஃபில்டர் காபி கூட உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இப்போது இதுக்குறித்த சில உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

காபியை எவ்வளவு வடிகட்டினாலும், அதில் உள்ள டெர்பெனாய்டுகள் நீங்காமல் அப்படியே இருக்கும். இந்த பொருள் தான் இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கக் கூடியது.

உண்மை #2

உண்மை #2

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், காபி குடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகிறது. காபி குடிப்பதை நிறுத்தும் போது, அது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ஹோமோசிஸ்டைன்களின் அளவையும் குறைக்கும்.

உண்மை #3

உண்மை #3

உணவு உட்கொண்டதும் காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனால் உணவிலிருந்து பெறப்படும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை உறிஞ்சும் தன்மை குறையும். அதிலும் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இப்பழக்கம் இருந்தால், உடனே இப்பழக்கத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.

உண்மை #4

உண்மை #4

காஃப்பைன் என்னும் உட்பொருள், உடலால் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் தடுக்கும். மேலும் காபியை அதிகமாக குடித்தால், அது உடலில் உள்ள கால்சியத்தை சிறுநீரில் வழியே வெளியேற்றிவிடும். ஆகவே காபியை அளவாக குடிப்பதோடு, கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட பின் குடிப்பத்தைத் தவிர்க்க வேண்டும்.

உண்மை #5

உண்மை #5

அனைத்து வகையான காபியும், உடலால் ஜிங்க் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். ஒருவேளை நீங்கள் நட்ஸ், பீன்ஸ், கோழி, இறைச்சி அல்லது கடல் சிப்பி போன்ற உணவுகளை உட்கொண்டால், சில மணிநேரத்திற்கு காபி குடிக்காதீர்கள். இல்லாவிட்டால், உடலில் இருந்து ஜிங்க் வெளியேற்றப்படும்.

உண்மை #6

உண்மை #6

காபி வைட்டமின் உறிஞ்சுதலில் இடையூறை ஏற்படுத்தி, வைட்டமின் குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.

உண்மை #7

உண்மை #7

காபி இரும்புச்சத்து உறிஞ்சுதலையும் பாதிக்கும். எனவே காபி குடிக்கும் முன், கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், நட்ஸ், பட்டாணி போன்றவற்றை சாப்பிடாதீர்கள். முடிந்த அளவு காபியில் இருந்து விலகியே இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Filter Coffee Bad For You?

Is filter coffee bad for you? Yes, say some studies. It is advisable to consume it in moderation. Here are more facts.
Story first published: Wednesday, May 17, 2017, 16:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter