தூங்கும் போது குறட்டை விட்டதால் வந்த வினை!

Posted By:
Subscribe to Boldsky

குறட்டை . தான் குறட்டை விட்டோம் என்பதை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். தூங்குபவருக்கு பெரும் இடைஞ்சலைக் கொடுக்கும் இதனை குறைக்கவே முடியாதா? நிறுத்தவே முடியாதா? வேறு வழியே கிடையாதா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள் உங்களுக்காக சில எளிய வைத்திய முறைகளும் யோசனைகளும் இருக்கிறது.

Home remedies for snoring

பெரும்பாலும் இந்த குறட்டை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது கணவன் மனைவி இடையில் தான். இதனால் பேச்சு ஆரம்பித்து சண்டையாகி முற்றிலுமாக கருத்துவேறுபாட்டுடனேயே இருப்பவர்களுக்கு இது நிச்சயம் நல்லபலனைத் தரும். நான் குறட்டை விடுகிறேன் என்று உணர்ந்தவர்களும் சரி என் கணவர்,அல்லது யாரேனும் குடும்பத்தார் குறட்டை விடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தாலும் சரி இந்த யோசனைகளை செயல்படுத்திடுங்கள் அல்லது பகிர்ந்திடுங்கள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன்? :

ஏன்? :

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது என்று தெரியுமா?

தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுகிறது.

அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.

 காரணங்கள் :

காரணங்கள் :

தூங்கும் முறையை தவிர்த்து குறைட்டை வருவதற்கு வேறு என்னவெல்லாம் காரணமாக இருக்கிறதென்றால், சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, டான்சில் வளர்ச்சி,

மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட காரணங்கள்.

இதைத்தவிர புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படும்.

சிக்கல்கள் :

சிக்கல்கள் :

குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது ‘அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா' (Obstructive Sleep Apnea) எனப்படும்.

அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.

ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப் பாதை மீண்டும் திறந்துகொள்ள வழி செய்துவிடுகிறது.

இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக்கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.

ஆபத்து :

ஆபத்து :

இதில் சில ஆபத்துகளும் உள்ளன. இவர்களுக்கு இரவில் தூக்கம் கெட்டுவிடும். காலையில் எழுந்ததும் கடுமையாகத் தலைவலிக்கும். பகலில் புத்துணர்வே இல்லாமல் தூங்கி வழிவார்கள், வேலையில் கவனக்குறைவு ஏற்படும், ஞாபக மறதி உண்டாகும்.

இந்த நிலைமை நீடிக்கும்போது, இதயத் துடிப்பில் பிரச்சினை ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு என்று பல நோய்களும் கைகோத்துக்கொள்ளும்.

குறட்டையை தவிர்க்க வீட்டு மருத்துவம் என்னவெல்லாம் செய்யலாம் அவை எப்படி குறட்டையை தடுக்க உதவுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

புதினா :

புதினா :

புதினா இயற்கையின் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பயன்படும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இது குறட்டையை தவிர்க்கவும் செய்கிறது.

இதிலிருக்கும் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகல்கள் மூக்கு மற்றும் தொண்டையில் இருக்கும் மெம்ப்ரைங்களுக்கு புத்துணர்வு ஊட்டுகிறது, வீக்கங்களை குறைக்கிறது.

குறிப்பாக அலர்ஜி,க்ளைமேட் மாற்றத்தினால் மூக்கடைப்பு ஏற்ப்பட்டு தொண்டைப்புண் ஏற்ப்பட்டிருப்பவர்கள் இதனை முயற்சிக்கலாம்.

தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு கிளாஸ் தண்ணீரில் நான்கைந்து புதினா இலைகளை போட்டுவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.

ஆவிப்பிடித்தல் :

ஆவிப்பிடித்தல் :

குறட்டை விடுவதற்கான முக்கிய காரணியாக இருப்பது மூக்கடைப்பு.மூக்கில் சரியாக மூச்சுக் காற்று செல்லமுடியவில்லையெனில் குறட்டை ஏற்படும் .இதனைத் தவிர்க்க தூங்குவதற்கு முன்பாக ஆவிப்பிடித்திடுங்கள். ஆவிப்பிடிக்கும் நீரில் இரண்டு சொட்டி யூக்கலிப்டஸ் ஆயில் ஊற்றலாம்.

 ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

இதுவரை ஆலிவ் ஆயில் பற்றிய உடல் நல நன்மைகளை படித்திருபோம் இப்போது எப்படி குறட்டையை தவிர்க்க பயன்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். இவை மூக்கிலுள்ள தசைகளையும் மூச்சுக்குழாயையும் சீராக்குகிறது.

இதனால் மூச்சுக்காற்று எளிதாக பயணிக்க முடிகிறது.

அரை ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் தூங்கச் செல்வதற்கு முன்னால் குடித்திடுங்கள்.

நெய் :

நெய் :

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் கொழுப்பை விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்பார்கள். சிலர் அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். கொழுப்பு நிறைந்த பொருளான நெய் உங்கள் குறட்டையை விரட்டும்.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒரு ஸ்பூன் நெய்யை சுடாக்கி மூக்கின் இரண்டு துவாரங்களிலும் ஒவ்வொரு சொட்டு ஊற்றிக் கொள்ளுங்கள். மூக்கில் ஏதேனும் அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

ஏலக்காய் :

ஏலக்காய் :

நம் சமையலறைகளில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்களில் ஒன்று ஏலக்காய். இதில் ஏரளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீரில் அரைடீஸ்ப்பூன் ஏலக்காய்த்தூள் கலந்து குடிக்க வேண்டும். இது தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் செய்ய வேண்டும்.

மஞ்சள் பால் :

மஞ்சள் பால் :

இதுவும் நாம் தினமும் சமையலில் பயன்படுத்துவோம். இதில் ஏராளமான ஆண்ட்டி செப்டிக் மற்றும் ஆண்ட்டிபயோட்டிக் ப்ராப்பர்டீஸ் நிறைந்திருக்கிறது. தினமும் இரவு உணவு முடித்து ஒரு மணி நேரம் கழித்து மஞ்சள் சேர்த்த பாலை குடிக்க வேண்டும்.

இது நிம்மதியான தூக்கத்தை கொடுப்பதுடன் குறட்டையை குறைக்கும்.

பூண்டு :

பூண்டு :

சைனஸ் அல்லது தொண்டை வறட்சியினால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகியிருந்தால் பூண்டு அதற்கு சிறந்த தீர்வாக அமைந்திடும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் பூண்டினை கடித்துச் சாப்பிட்டு தண்ணீர் குடித்திடுங்கள். இது ஆழ்ந்த உறக்கத்திற்கும் வழிவகுக்கும்.

தேன் :

தேன் :

உடல் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மட்டுமே பயன்பட்டு வந்த தேன் குறட்டையை விரட்ட பயன்படுகிறது. தூங்குவதற்கு முன்னால் ஒரு ஸ்பூன் தேன் பாலில் கலந்து குடிக்கலாம். இவை நல்ல தூக்கத்திற்கு வழி வகுப்பதுடன் குறட்டையை தவிர்க்க உதவுகிறது.

வாழ்வியல் மாற்றங்கள் :

வாழ்வியல் மாற்றங்கள் :

குறைட்டையை நிறுத்த அல்லது குறைக்க உணவுகளிலும் சிறு மருத்துவக் குறிப்புகளிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்தால் போதாது. உங்களுடைய வாழ்வியலையும் மாற்ற வேண்டும். பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது நீங்கள் மேற்கொள்கிற மருத்துவ முறைகள் உங்களுக்கு முழுவமையான பலனைக் கொடுத்திடும்.

அதிகமான எடை இருப்பது பெரும் ஆபத்தை உண்டாக்கும் அதைவிட குறட்டை வருவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று என்பதால் உடல் எடையை குறைக்க முயற்சி செய்திடுங்கள். தூங்கும் முறையை மாற்றிப் பாருங்கள், உயரமான தலையனை வைத்து பழகியிருந்தால் அதனை மாற்றிடுங்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் கூடவே கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies for snoring

Home remedies for snoring
Story first published: Saturday, October 28, 2017, 9:49 [IST]