For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நாக்கில் வெள்ளைப்படலாம் இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

ஆரோக்கியமான நாக்கு என்றால் அது பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். சில சமயங்களில் நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படக்கூடும் இதனை தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

|

நாம் உண்ணும் உணவின் சுவையை உணர்த்துவது நாக்கு தான். அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். சீனா மருத்துவத்தின் படி, ஒருவருடைய நாக்கு அவரின் ஆரோக்கியத்தை பறைசாற்றும் விஷயமாக இருக்குமாம்.

நாக்கின் தோற்றம் மற்றும் நிறத்தைக் கொண்டே ஒருவரின் உடல் நலத்தைப் பற்றி கூற முடியும்.

Home remedies to get rid of white coated tongue


உங்கள் நாக்கின் மேல் வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த வெள்ளைப் படலம் இருந்தால், உங்களுக்கு ஈஸ்ட் தொற்றுகள் உள்ளதாக அர்த்தம். பொதுவாக இப்பிரச்சனையானது அளவுக்கு அதிகமான கேண்டிடா உற்பத்தினால் ஏற்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கெல்லாம் வரும் :

யாருக்கெல்லாம் வரும் :

நாக்கில் ஏற்படுகின்ற இந்த படலம் இயற்கையான பூஞ்சை வளர்சியாகும். வாயில் அடிக்கடி புண் ஏற்படுபவர்கள்,நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், ஆகியோருக்கு இது அடிக்கடி தோன்றிடும்.

அதோடு புற்றுநோயாளிகள், எச்.ஐ.வி மற்றும் இரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் வாய் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த வாய் புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அதிகப்படியான ஆண்ட்டிபயோட்டிக் எடுத்துக் கொள்வதும் நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்திடும்.

இதைத் தவிர உடலில் நீர் வறட்சி ஏற்படுவதும் ஒரு காரணமாய் இருக்கிறது . இதைத் தீர்க்க சில எளிமையான குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.

உப்பு :

உப்பு :

நாக்கில் ஏற்ப்பட்டிருக்கும் வெள்ளைப்படலத்திற்கு உப்பு மிகச்சிறந்த தீர்வாக அமைந்திருக்கும். இது இயற்கையாகவே வீரியமிக்கவையாக இருப்பதால் இதனை பயன்படுத்தி வெள்ளைப்படலத்தை நீக்கலாம். இதிலிருக்கும் ஆண்ட்டிசெப்டிக் ப்ராப்பர்ட்டி பாக்டீரியாவை நீக்கிடும்.

நாக்கில் ஒரு பின்ச் உப்பினைத் தூவி டூத் பிரஷ்ஷினைக் கொண்டு லேசாக தேய்த்திடுங்கள். தினமும் இப்படிச் செய்திடலாம். அப்படியில்லை எனில் சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும். நன்றாக கொப்பளித்த பிறகு துப்பிடலாம்.

ப்ரோபயோட்டிக் :

ப்ரோபயோட்டிக் :

கேண்டிடா ஃபங்கஸினால் ஏற்படும் வெள்ளைப்படலத்தை தீர்க்க ப்ரோபயோட்டிக் சிறந்த மருந்தாகும். இது அந்த பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்திடும்.

ப்ரோபயோட்டிக் கேப்சூல் வடிவில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை பிரித்து சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள் அதனை நேரடியாக நாக்கில் தடவலாம் அல்லது இந்த ப்ரோ ப்யோட்டிக் கலந்த நீரினை கொண்டு வாயை கொப்பளிக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.

எண்ணெய் :

எண்ணெய் :

ஆயில் புல்லிங்.. பழங்காலத்திலிருந்தே இது நடைமுறையில் இருக்கிறது. இதனைச் செய்வதால் ஈஸ்ட் தொற்றினை தவிர்க்கச் செய்திடும். காலை பல் விளக்குவதற்கு முன்னர் தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்பூன் எடுத்து வாயை கொப்பளிக்க வேண்டும்.

குறைந்தது பத்து நிமிடம் வரை வாயை கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் அப்படி வெள்ளை நிறமாக மாறிடும். அதனை துப்பிடலாம். பிறகு சூடான நீரில் ஒரு வாயை கொப்பளித்த பிறகு வழக்கமாக நீங்கள் செய்பவனற்றை செய்திடலாம்.

கவனம்.... எண்ணெயை கொப்பளித்த பிறகு முழுங்கிடக்கூடாது.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழையில் இருக்கும் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் உங்களது வாய் பிரச்சனையை தீர்க்கும். இதில் அதிகப்படியான ஆண்ட்டிமைக்ரோபியல் துகள்கள் இருக்கின்றன. அதோடு வெள்ளைப்படலத்தை உருவாக்கிடும் பாக்டீரியாவை அழித்திடு்ம்.

ஒரு ஸ்பூன் ஆலிவ்வேரா ஜெல்லுடன் சிறிதளவு தண்ணீரைக் கலந்து வாயில் போட்டு நன்றாக கொப்பளிக்க வேண்டும். வாயின் எல்லா பகுதிக்கும் அந்த ஜெல் பரவுமாறு கொப்பளித்த பிறகு துப்பிடலாம்.

தயிர் :

தயிர் :

தயிரில் அதிகப்படியான ப்ரோபயோட்டிக் துகள்கள் இருக்கின்றன. இது கேண்டிடா பாக்டீரியாவை அழிக்க பெரிதும் உதவியாய் இருக்கும். நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படுவதற்கு கேண்டிடா பாக்டீரியா தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒரு ஸ்பூன் தயிரை எடுத்து நாக்கில் தடவிக் கொள்ளங்கள். அதனை இரவு முழுவதும் வைத்திருந்த பின்னர் மறு நாள் காலை எழுந்ததும் வாயை கொப்பளித்து விடலாம்.

மஞ்சள் :

மஞ்சள் :

மஞ்சளில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியா துகள்கள் நாக்கில் ஏற்படும் வெள்ளைப்படலத்தை நீக்க உதவிடும். இது அந்த பாக்டீரியாவின் வளர்ச்சியையும் தடுக்கும்.

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்ப்பூன் மஞ்சளை கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் பாக்டீரியாவை அழிப்பதில் துரிதமாக செயல்படும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறினை எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து வாயை கொப்பளிக்கலாம்.

அப்படியில்லை எனில் பயன்படுத்திய எலுமிச்சையை நேரடியாக நாக்கில் வைத்து தேய்த்து பின்னர் வாயை கொப்பளிக்கலாம்.

அப்படியில்லை எனில் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் அரை டீஸ்ப்பூன் மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். பேஸ்ட் பதத்தில் இருக்கும் அதனை வெள்ளைப்படலம் இருக்கும் இடத்தில் தடவி ஐந்து நிமிடம் கழித்து வாயை கொப்பளித்து விடலாம்.

க்ளிசரின் :

க்ளிசரின் :

நாக்கில் இருக்கும் வெள்ளைப்படலத்தை போக்க வெஜிடபிள் க்ளிசரினை பயன்படுத்தலாம். உங்கள் வாயில் ஏற்படும் அதிக வறட்சியினாலும் சிலருக்கு நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படும். இதனைத் தீர்க்க வெஜிடபிள் க்ளிசரின் பயன்படுகிறது. அதோடு இது கெட்ட நாற்றத்தையும் போக்கிடும்.

நாக்கில் சிறிதளவு வெஜிடபிள் கிளசரினை இரண்டு சொட்டு ஊற்றி பின்னர் பிரஷ்ஷினைக் கொண்டு தேய்க்க வேண்டும். அதன் பின்னர் சூடான நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.

 பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடா :

அரை டீஸ்ப்பூன் பேக்கிங் சோடாவினை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து வாயை கொப்பளியுங்கள். இது ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்திடலாம்.

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உங்கள் நாக்கினில் தடவி பிரச்சனைக் கொண்டு லேசாக தேய்த்து பின்னர் வாயை கொப்பளித்து விடலாம்.

வேப்பிலை :

வேப்பிலை :

வேப்பிலையில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆண்ட்டி ஃபன்கல் துகள்களினால் நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படுத்தும் பாக்டீரியாவினை அழித்திடலாம். அதோடு இது உடலிலிருக்கும் நச்சுக்களையும் நீக்கும்.

ஒரு கப் தண்ணீரில் நான்கைந்து வேப்பிலையை போட்டு கொதிக்க வைகக் வேண்டும். பாதிக்கு பாதி குறையும் அளவுக்கு கொதிக்க வைக்க வேண்டும்.சூடு ஆறியதும் அதனை எடுத்து வாயை கொப்பளிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் செய்தால் நல்ல பலனை கிடைக்கும்.

பூண்டு :

பூண்டு :

நான்கைந்து பூண்டினை எடுத்து நசுக்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள் . ஒரு ஸ்பூன் பூண்டுச்சாறுடன் அரை ஸ்பூன் தண்ணீர் கலந்து நாக்கினில் தடவலாம். வெள்ளைப்படலம் அதிகமாக இருந்தால் பூண்டுச் சாறினை அப்படியே நாக்கில் தடவி ஐந்து நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும்.

சுத்தம் :

சுத்தம் :

வெள்ளைப்படலாம் வந்த பின்னர் பல்வேறு மருத்துவ முறைகளை பின்பற்றுவதை விட வராமல் தவிர்ப்பது தான் நல்லது. தினமும் பல் விளக்கும் போது நாக்கினையும் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் நாக்கிற்கும் முக்கியத்தும் கொடுத்து சுத்தம் செய்து வந்தால் வெள்ளைப்படலம் ஏற்படாது.

தண்ணீர் :

தண்ணீர் :

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிப்பதற்கும், உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று, உங்கள் உடலை எப்போதும் தண்ணீர்ச் சத்துடன் வைத்துக் கொண்டால் நாக்கில் இந்த தொற்று ஏற்படுவதை தவிர்த்திட முடியும்.

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to get rid of white coated tongue

Home remedies to get rid of white coated tongue
Story first published: Thursday, November 2, 2017, 11:44 [IST]
Desktop Bottom Promotion