குருமித் ராம் ரஹீமால் பாதிக்கப்பட்டவர்கள் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஹரியானாவைச் சேர்ந்த சீக்கிய மதகுருவான குருமித் ராம் ரஹீம் சிங்கின் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டு அவருக்கு சமீபத்தில் இருபது ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதில் முக்கியமானது தன் சிஷ்யைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்பது தான். சுமார் பதினைந்து ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் பல திருப்பங்கள், அழுத்தங்களை கடந்து வந்திருக்கிறது. குருமித் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே ஏற்ப்பட்ட கலவரத்தில் 30 பேர் வரை பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலியல் வழக்கு :

பாலியல் வழக்கு :

குருமித் சிறை செல்ல காரணமானவர்கள் இரண்டு பெண்கள். குர்மீத் ராம் ரஹீமிடம் சிஷ்யைகளாக இருந்த இந்தப் பெண்கள் ஆசிரமத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்களை அப்போதைய பிரதமர் வாஜ்பாயிக்கு அநாமதேய கடிதம் ஒன்றை அனுப்பினர்.

இது தேரா சச்சா ஆதரவளார்களுக்கு தெரியவர இந்தப் பெண்களின் சகோதரன் ஒருவன் கொல்லப்பட்டான். இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையாளர் ராம்சந்த்ர சத்ரபதி என்பவரும் கொல்லப்பட்டார்.

செல்வாக்கு :

செல்வாக்கு :

பெற்றோர்கள் அனுமதியுடனே இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தொடர்ந்து தப்பி வந்த குருமித் தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலை தான் பயங்கர சிக்கலானது. தன்னம்பிக்கையை முற்றிலுமாக இழந்து தான் ஏமாற்றப்பட்டோம் என்கிற உணர்வில் தவித்துக் கொண்டிருப்பார்கள். இங்கே அவர்களின் தவறு எதுவும் கிடையாது என்பதால் அவர்களை அரவணைப்பது அவசியம்.

இங்கே பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் மனரீதியாக என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்று பார்க்கலாம்.

விரக்தி :

விரக்தி :

வாழ்வில் மன்னிக்க முடியாத ஒரு தவறை செய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு அவர்களை விரக்தி நிலையிலேயே வைத்திருக்கும். இனிமேல் இந்த சமூகத்தை, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினரை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற பயமும் அவர்களை விரக்தியாக இருக்கச் செய்திடும். இதனால் அவர்கள் மீதே நம்பிக்கை இழப்பார்கள்.

பயம் :

பயம் :

எதிர்பாராத நேரத்தில் தான் தாக்கப்படுவது, பலவந்தப்படுத்துவது போன்றவற்றால் பயந்திருக்கும் நிலையில் அவரை இந்த சமூகம் அணுகும் விதத்தாலும் மிகவும் பயந்து காணப்படுவார்.

யாரால் தாக்கப்பட்டார்களோ அல்லது அன்றைய தினத்தில் அவர்கள் பார்த்த விஷயங்கள், அன்றை தினத்தில் சென்ற இடங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே அதிகம் பயப்படுவார்கள். காரணமின்றி திடீரென்று அழுவது, உடல் எடையில் திடீர் மாற்றங்கள் உண்டாகும்.

ஸ்ட்ரஸ் :

ஸ்ட்ரஸ் :

நடந்த சம்பவத்தையே மனதில் நினைத்து மன அழுத்ததிற்கு ஆளாவார்கள். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாது, தான் தாக்கப்படுவது போலவும் அல்லது கொல்லப்படுவது போலவும் நினைத்துக் கொண்டேயிருப்பர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவர்.

பெர்ஸ்னாலிட்டி :

பெர்ஸ்னாலிட்டி :

அவர்களின் பெர்ஸ்னாலிட்டி முற்றிலுமாக மாறிப்போகும். யாரைப் பார்த்தாலும் கோபமும் எரிச்சலும் வரும், தனக்கு தீங்கு விளைவிப்பவர்கள் இவர்கள் என்ற எண்ணமே முதலில் தோன்றும். யார் மீதும் நம்பிக்கை வராது.

எல்லாரும் தன்னை ஏமாற்றுகிறவர்கள் என்ற எண்ணத்தால் சகஜமாக பிறருடன் பழகுவதில் சிரமங்கள் இருக்கும்.

முறையற்ற உணவுப் பழக்கம் :

முறையற்ற உணவுப் பழக்கம் :

தங்களின் எண்ணங்களை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு இருக்காது. தான் தோன்றித்தனமாக தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்கள் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டாரகள். அல்லது வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக சாப்பிடத் துவங்கிவிடுவார்கள்.

தூக்கம் :

தூக்கம் :

தன்னை மறந்து எதைப் பற்றியும் யோசிக்காமல் இருக்க நினைப்பார்கள் இதனால் நீண்ட நேரம் தூங்குவது அல்லது குறைந்த நேரம் மட்டுமே தூங்குவது போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகளும் அவர்களுக்கு ஏற்படும்.

தற்கொலை :

தற்கொலை :

அடிக்கடி இவர்களுக்கு தற்கொலை எண்ணம் தலைதூக்கும். இதில் என் தவறு என்ன? என்று மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே யோசித்து இனி இந்த தவறை சரி செய்யவே முடியாது என்ற முடிவெடுத்துவிடுவார்கள்.

இது போன்ற நேரங்களில் வழக்கமான சிந்தனைகளை மாற்றும் விஷயங்கள் அருகில் உடனடியாக கிடைக்காது என்பதால் தான் பெரிய தவறு செய்துவிட்டதாகவே உறுதியாக நம்பிடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

gurmeet ram rahim convicted in rape case know the psychological effects of rape

Psychological Effects of a Rape victim.
Story first published: Wednesday, August 30, 2017, 12:06 [IST]
Subscribe Newsletter