வெறும் வயிற்றில் ஏதோ உருளுவது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதா? அது ஏன், எதனால் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நமது உடலில் இருந்து பலவிதமான சப்தங்கள் வெளிப்படும். தும்மல், இருமல், வாயுவு வெளியேற்றம் என பல இருக்கின்றன. இவை எல்லாம் வெளிப்படையாக அனைவரும் கேட்கும்படி இருக்கும். ஆனால், சில இதய துடிப்பு, நாடி துடிப்பு போன்றவற்றின் சப்தத்தை நாம் வெளிப்படையாக கேட்க முடியாது.

Ever Wondered Why Stomach Rumbles When It's Empty

இந்த வகையில் நமது உடலில் வெளிப்படும் மற்றுமொரு சப்தமும் இருக்கிறது. வயிற்றில் ஏதோ உருளுவது போன்ற சப்த உணர்வு அவ்வபோது அனைவருக்கும் ஏற்படும். இது ஏன்? எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இது தான் முக்கிய காரணம்!

இது தான் முக்கிய காரணம்!

அடிப்படையில் இரைப்பை பாதை ஒரு வெற்று குழாய் ஆகும். இது வாயில் இருந்து ஆசனவாய் வரை மிருதுவான சுவர் போன்ற தசை அமைப்பு கொண்டிருக்கும். இந்த மிருதுவான சுவர் இயங்க ஆரம்பிக்கும் போது உணவு பொருட்கள், நீர், வாயு போன்றவை கலந்து வயிற்றில் இருந்து குடல் வழியாக பயணிக்கும். இதனால் தான் ஏதோ உருளுவது போன்ற சப்த உணர்வு வெளிப்படுகிறது.

தசை செயல்பாடுகள்!

தசை செயல்பாடுகள்!

வயிற்றில் சுருங்கும் தன்மை கொண்ட தசையின் பெயர் பெரிஸ்டால்சிஸ். உணவு உட்செல்லும் போது இந்த தசை விரியும். உணவு செரித்து வயிறு காலி ஆன பிறகும் கூட இரண்டு மணி நேரம் வரை இந்த செயல்பாடு நடந்துக் கொண்டு தான் இருக்கும்.

10 - 20 நிமிடங்கள்!

10 - 20 நிமிடங்கள்!

ஏதோ வயிற்றில் உருளுவது போன்ற சப்த உணர்வு துவங்கியதில் இருந்து 10 - 20 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். பசியை பொருத்தும் இந்த சப்தம் உண்டாகும். நீங்கள் சாப்பிட்ட பிறகு ஒவ்வொரு ஒன்றில் இருந்து இரண்டு மணிநேர இடைவேளையில் இந்த சப்தம் உண்டாகலாம். (நீங்கள் அடுத்த வேளை உணவு உட்கொள்ளும் வரை)

வயிறு காலியாக இருக்கும் போது...

வயிறு காலியாக இருக்கும் போது...

உங்கள் வயிறு காலியாக இருக்கும் போது இந்த் உருள்வது போன்ற சப்தம் நன்கு தெளிவாகவே கேட்கும். இந்த சப்தம் வயிற்றில் இருந்து மட்டும் வருவது அல்ல. குடலில் இருந்தும் கூட வரும்.

இயல்பு தான்!

இயல்பு தான்!

சில சமயம் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு கூட இந்த சப்தம் கேட்கலாம். இதை சிலர் அசௌகரியமாக உணர்வார்கள். ஆனால், இது முற்றிலும் இயற்கையானது, இயல்பானது. எனவே, இதை எண்ணி அஞ்ச வேண்டாம்.

பண்டைய கிரேக்கர்கள் இந்த சபதத்திற்கு வினோதமான பெயரும் சூட்டியுள்ளனர். அது, "Borborygmi" என்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ever Wondered Why Stomach Rumbles When It's Empty

Ever Wondered Why Stomach Rumbles When It's Empty?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter