வாரம் ஒருமுறை இந்த ஜூஸை குடிச்சா, கல்லீரல் சுத்தமாக இருக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடலை சுத்தம் செய்யும் உறுப்புக்களில், முதலில் அதிக பங்கை வகிப்பது குடல், அதற்கு அடுத்து கல்லீரல் தான். நாம் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கெமிக்கல்கள் கலக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது, அந்த டாக்ஸின்களை உடலில் இருந்து கல்லீரல் வெளியேற்றும்.

Drink This Nutritious Liver Support Juice Weekly For A Healthy Liver

கல்லீரலில் டாக்ஸின்களின் அளவு அதிகரிக்கும் போது, அதனால் டாக்ஸின்களை வடிகட்ட முடியாமல் போவதோடு, அதன் செயல்பாடும் பாதிக்கப்படும். கல்லீரலின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது, நாம் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எனவே கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல ஆரோக்கியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதோடு, கல்லீரலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் ஒருசில ஜூஸ்களை அவ்வப்போது பருக வேண்டும். இங்கு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

சிறிய பீட்ரூட் - 2

வெள்ளரிக்காய் - 1

கிரேப் ஃபுரூட் - 1

எலுமிச்சை - 1/2

இஞ்சி - 1 இன்ச்

பீட்ரூட்

பீட்ரூட்

நற்பதமான பீட்ரூட், உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, கல்லீரலை சுத்தம் செய்து, அதன் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவியாகவும் இருக்கும். இதற்கு பீட்ரூட்டில் உள்ள அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் முக்கிய காரணம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், இது அடிக்கடி சிறுநீரை வெளியேற்றச் செய்து, அதன் மூலம் டாக்ஸின்கள் சேராமல் தடுக்கும்.

கிரேப்ஃபுரூட்

கிரேப்ஃபுரூட்

இந்த பழத்தில் வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமாக உள்ளதால், இயற்கையாகவே கல்லீரலை சுத்தம் செய்யும். மேலும் கிரேப்ஃபுரூட் கல்லீரலை சுத்தம் செய்யும் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவித்து, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் மற்றும் இதர நச்சுக்களை வெளியேற்றும்.

எலுமிச்சை

எலுமிச்சை

கிரேப்ஃபுரூட்டைப் போலவே, எலுமிச்சையிலும் சரிசம அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளது. இதுவும் கல்லீரலை சுத்தம் செய்யும் உணவுப் பொருட்களில் முக்கியமானவையாகும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் மிக்ஸியில் பீட்ரூட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சிறு துண்டுகளாக்கி போட்டு, அத்துடன் கிரேப்ஃபுரூட் மற்றும் எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, இஞ்சியையும் துண்டுகளாக்கி சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டால், ஜூஸ் தயார்.

குறிப்பு

குறிப்பு

இந்த ஜூஸை ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் குடித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகளே வராமல் தடுக்கலாம். அதோடு, உடலில் உள்ள டாக்ஸின்களையும் வாரத்திற்கு ஒருமுறை வெளியேற்றி, கல்லீரல் மற்றும் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink This Nutritious Liver Support Juice Weekly For A Healthy Liver

Drink this nutritious liver support juice weekly for a healthy liver. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter