Latest Updates
-
இந்தியாவில் மது விற்பனையில் முன்னணியில் உள்ள டாப் 5 மாநிலங்கள் - தமிழ்நாடு முதல் இடத்தில் இல்லையாம் தெரியுமா? -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
ஆண்கள் இளநீர் குடித்தால் விறைப்புத்தன்மை பிரச்சனையே வராது தெரியுமா?
இங்கு இளநீர் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனையை சரிசெய்கிறது என்று காண்போம்.
நம் அனைவருக்குமே இளநீர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புத பானம் என்பது தெரியும். இந்த இளநீர் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமே நன்மைகளை வாரி வழங்கும். குறிப்பாக ஆண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல முடியாத பல பிரச்சனைக்கு இளநீர் நல்ல தீர்வை வழங்கும்.

பொதுவாக ஆண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு ஆணுறுப்பில் இரத்த ஓட்டம் குறைவாக இருப்பது, நரம்பு பாதிப்பு, மன அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலான ஆண்களுக்கு பாலியல் பிரச்சனையே மன இறுக்கத்தை உண்டாக்கும்.
ஆனால் ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுகுக்கு ஏராளமான இயற்கை நிவாரணிகள் உள்ளன. அதில் ஒன்று தான் இளநீர். இங்கு இளநீர் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனையை சரிசெய்கிறது என்று காண்போம்.

காரணம் #1
இளநீரில் சோடியம் அதிகம் உள்ளது. இது தசைகளின் ஆரோக்கியமான சுருக்கத்திற்கு இன்றியமையாதது. மேலும் சோடியம் உடலில் தண்ணீர் மற்றும் நீர்மங்களின் ஓட்டத்திற்கும் முக்கியம். எனவே ஆண்கள் இளநீரைக் குடித்தால், உடலுக்கு போதுமான சோடியம் கிடைத்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கும்.

காரணம் #2
விறைப்புத்தன்மை செயல்பாட்டிற்கு பொட்டாசியம் என்னும் அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் அவசியமாகும். இந்த குறைபாடு ஏற்படும் போது தான், பாலியல் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே பாலியல் பிரச்சனையை சந்தித்தால், இளநீரை தினமும் ஒன்று குடித்து வாருங்கள்.

காரணம் #3
உடலில் மக்னீசியம் ஏற்றத்தாழ்வுடன் இருந்தால், அது இரத்த ஓட்டத்தை பாதித்து, விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். ஆகவே படுக்கையில் சிறப்பாக செயல்பட நினைக்கும் ஆண்கள், மக்னீசியம் நிறைந்த இளநீரை தினமும் குடியுங்கள்.

காரணம் #4
இளநீரை ஆண்கள் குடிப்பதன் மூலம், உடலில் எலட்ரோலைட்டுக்கள் நடுநிலையாக பராமரிக்கப்பட்டு, இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவும் அதிகரிக்கும். இதயத்தில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் சீராக செல்லும். இதன் காரணமாக பல பிரச்சனைகள் வருவதும் தடுக்கப்படும்.

குறிப்பு
எனவே ஆண்களே, உங்களுக்கு பாலியல் பிரச்சனையான விறைப்புத்தன்மை பிரச்சனை இருந்தால், அதை சரிசெய்வதற்கு தினமும் ஒரு இளநீரைக் குடித்து வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications