சிறுநீரக கற்கள் வராமல் தவிர்க்க நீங்கள் சாப்பிட வேண்டியவை என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று கிட்னி கல். வயது வித்யாசங்கள் இன்றி பலரும் கிட்னி கல் பிரச்சனையில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை முறையினால் அதிக தண்ணீர் எடுத்துக் கொள்ளாததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இதைத் தவிர கிட்னியில் ஏற்படுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கிறது அவற்றை எப்படி போக்கலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கிட்னி கல் :

கிட்னி கல் :

சிறுநீரில் சில மணிச்சத்துக்கள், சில உயரி பொருட்கள் இருக்கும். இவை இரண்டு சரியான விகிதத்தில் இருப்பதால் தான் சிறுநீர் திடப்பொருட்களாக மாறாமல் இருக்கின்றன.

சில வளர்சிதை மாற்றங்கள் காரணமாகவோ அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தினாலோ மணிச்சத்துக்கள் மற்றும் உயரி பொருட்கள் விகிதங்கள் மாறிடும் இதனால் சிறுநீரை சிறு துகள்களாகவோ அல்லது கற்களாகவோ படிகின்றன. நாளடைவில் கற்களாக உருவாகிறது.

யூரிக் அமிலம் :

யூரிக் அமிலம் :

பொதுவாக இந்த கற்களில் கால்சியம், பாஸ்பேட் போன்ற மூலப்பொருட்கள் தான் அதிகமிருக்கும். ஹைப்பர் தைராய்டு, சிறுநீர்ப்பாதை தொற்று போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

புரதச்சத்து சிதைப்பினால் உண்டாகும் கழிவுப்பொருள் யூரிக் அமிலம். இது ரத்தத்தில் ஆறு மில்லிகிராம் அளவில் தான் இருக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் அவை சிறுநீரில் வெளியேறும், அப்போது படியும் யூரிக் அமிலம் கற்களாக மாற வாய்ப்புண்டு.

கால்சியம் :

கால்சியம் :

நம் உடலுக்கு தேவையான கால்சியத்தை விட அதிகப்படியான கால்சியத்தை நாம் எடுக்கும் போது அவை கழிவாக சிறுநீரில் வெளியாகும். அப்படி வெளியாகும் கால்சியம் படிந்து சிறுநீர் கற்களாக உருவாகிடும்.

யாருக்கு வரும் :

யாருக்கு வரும் :

வயது வித்யாசங்கள் இன்றி பலருக்கும் வர வாய்ப்புகள் உண்டு. நாற்பது வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் அடிக்கடி பரிசோதித்துக் கொள்வது நன்று.

ஒருவருக்கு ஒரு முறை கிட்னியில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கற்கள் வந்துவிட்டால் அடுத்தடுத்து கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஜெனிட்டிக்காகவும் கிட்னி கல் ஏற்படும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

அடிவயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகும். சிறுநீர் கழிக்கும் போது வலியோ அல்லது எரிச்சலோ உண்டாகும். சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கூட வெளியேறும்.

சேர்க்க :

சேர்க்க :

கிட்னி கற்கள் ஒரு முறை வந்துவிட்டால் அடுத்தடுத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கிட்னியில் கல் வராமல் தவிர்க்க, அன்றாட உணவில் அதிகமான காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

திராட்சை,ஸ்ட்ராபெர்ரி, போன்ற பழங்கள், பூசணிக்காய், வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். தர்பூசணிப்பழம், ஆப்பிள்,எலுமிச்சை போன்றவை சிறுநீர்க கற்களை கரைக்கும் தன்மை கொண்டது.

தவிர்க்க :

தவிர்க்க :

கொழுப்பு அதிகம் சேரும் பொருட்களை தவிர்த்திட வேண்டும், அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உப்பு அதிகமாக சேர்க்க கூடாது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்சியம் அதிகம் இருக்கும் என்பதால் அவற்றை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிக மசாலா உணவுகளை தவிர்த்திட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Brief description about kidney stone

Brief description about kidney stone
Story first published: Monday, September 4, 2017, 10:46 [IST]
Subscribe Newsletter