உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வராம இருக்கனுமா? அப்ப இந்த ஜூஸ் குடிங்க...

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

புகைப் பிடிப்பதால் ஏற்படும் மிகக் கொடிய நோய்களுள் ஒன்று தான் நுரையீரல் புற்றுநோய். புகையிலையில் உள்ள அதிகப்படியான நச்சுப் பொருட்கள் தான் இதற்குக் காரணம். புகைப்பிடிப்பதால் அந்த நச்சுப் பொருட்கள் நுரையீரலுக்குள் சென்று நுரையீரலை முற்றிலுமாக அழித்து விடுகிறது.

மனித உடலுறுப்புகளில் முக்கியமான ஒன்று நுரையீரல். நுரையீரலானது நாம் மூச்சை உள்ளே இழுக்கும் போது ஆக்ஸிஜனை நம் உடலுக்குள் கொண்டு வரவும் மூச்சை வெளியேற்றும் போது கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவும் உதவுகிறது.

An amazing juice to prevent lung cancer

புகைப்பிடிப்பதால் ஆக்ஸிஜனோடு சேர்த்து நச்சுப் பொருட்களான நிக்கோடின், தார் மற்றும் காட்மியம் போன்றவையும் உள்ளே சென்று நுரையீரலின் உள்ளே தங்கிவிடும். இவையெல்லாம் அதிகமாக சேரும் போது நுரையீரல் கருப்பாக மாறுகிறது.

அப்படிப்பட்ட நச்சுப் பொருட்களில் இருந்து உங்களது நுரையீரலை காப்பாற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான ஜூஸை தயாரித்து குடித்துப் பாருங்கள்.

இப்போது அந்த ஜூஸ் செய்யத் தேவையான பொருட்களையும், எப்படி செய்வது என்பதனையும் பார்ப்போம் வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

ஒரு பெரியத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது.

மஞ்சள் தூள்

மஞ்சள் தூள்

2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் தேவை இந்த ஜூஸ் செய்வதற்கு. மஞ்சள் தூளில் மிக முக்கியமான குர்குமின் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பு உள்ளது. இது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கக்கூடியது.

வெங்காயம்

வெங்காயம்

4 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவு பெரிய வெங்காயமாகப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகம் இருக்கிறது. இவை நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றிவிடும்.

சர்க்கரை

சர்க்கரை

இந்த ஜூஸ் செய்ய 250 கிராம் சர்க்கரை தேவை.

தண்ணீர் :

தண்ணீர் :

ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

செய்முறை :

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். அதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். அடுத்ததாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து சற்று நேரம் கொதிக்க விடுங்கள்.

பின்னர் மஞ்சள் தூளை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்திருங்கள். ஊற்றிய நீரின் அளவு பாதியாக குறைந்ததும் அடுப்பை நிறுத்தி விடுங்கள். இறதியாக அந்த ஜூஸை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலை எழுந்தவுடனும் இரவு தூங்கப் போகும் முன்பும் இந்த ஜூஸை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு குடிக்க வேண்டும்.

இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

An amazing juice to prevent lung cancer

An amazing juice to prevent lung cancer
Story first published: Saturday, March 11, 2017, 10:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter