For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும் தீமைகளும்!!

சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும், தீமைகளும் இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Ambika Saravanan
|

சாக்லேட் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் அதன் சுவை பிடிக்கும். உலகம் உள்ள காலம் வரை ஒரு பொருள் அனைவருக்கும் பிடிக்கும் என்றால் அது சாக்லெட்டாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அதன் சுவையில் அனைவரும் அடிமைப்பட்டு இருந்தோம், இருக்கிறோம், இருப்போம்.

சாக்லேட் நமது வாழ்வில் ஒரு அங்கமாக விளங்குகிறது. குழந்தை பிறந்தால் சாக்லெட், நடந்தால் சாக்லெட், முதன் முதலில் ஸ்கூலுக்கு போனால் சாக்லேட் என்று எல்லாவற்றிற்கும், ஸ்வீட் எடு கொண்டாடு என்ற ரீதியில், எல்லாவற்றிற்கும் சாக்கலேட்டை உண்ணுகிறோம்.

சாக்லேட் பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. இன்று பல வித சுவைகளில் கிடைக்கும் சாக்லேட்கள் தனித்துவம் பெற்றவை. இதன் விலையும் மலிவாக இருப்பதால் அனைவராலும் உண்ணப்படுகிறது. சில வகை சாக்லேட்கள் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.

Advantages and disadvantages of eating chocolates

எப்படி இருந்தாலும் சாக்லேட்கள் உண்ணும்போது உடலுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கிறது. அதிலும் இந்த டார்க் சாக்கலேட்களுக்கு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் தன்மை இருக்கிறது.

சாக்லெட்டில் ட்ரிப்டோபன் என்ற இரசாயனம் உள்ளது. இது மூளையை சிறப்பாக செயலாற்ற உதவுகிறது, இதன்மூலம் மகிழ்ச்சியை உருவாக்குகிறது. ஒயின் மற்றும் டீயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சாக்லேட்டில் காணப்படுகின்றன.

சாக்லெட் பற்றிய கருத்துகள் எப்போதும் வந்த வண்ணம் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் சாக்லேட் உண்ணலாமா கூடாதா , உடலுக்கு நல்லதா கெட்டதா போன்ற கேள்விகள் இருந்து கொன்டே இருக்கும். அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் இங்கே கொடுக்க பட்டிருக்கின்றன. அதனை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாக்லேட்டின் பரிந்துரைக்கப்பட்ட அளவு:

சாக்லேட்டின் பரிந்துரைக்கப்பட்ட அளவு:

அதிகமான அளவில் சாக்லேட் உண்ணுவது தடுக்க பட வேண்டியது தான். என்ன தான் அதன் சுவை நமது நாவை ஊறச் செய்தாலும் , குறிப்பிட்ட அளவிற்கு மேல், இதனை உண்ணுவதால் சில தீங்குகள் உடலுக்கு ஏற்படும். ஒரு நாளைக்கு 28கிராம் சாக்லேட் உட்கொள்ளல் பரிந்துரைக்கப்படுகிறது.

 ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது. பிளவனாய்டு மற்றும் கார்லிக் அமிலம் அதிகமாக இருப்பதால் அவற்றில் இருக்கும் பாதுகாப்பு கூறுகள் இதயத்திற்கு வலு சேர்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான பாதிக்குகள் குறையும்.

புற்று நோய் :

புற்று நோய் :

செரிமானத்தை அதிகரிக்கிறது. புற்று நோயை தடுப்பதில் சிறந்த பங்காற்றுகிறது. வயது அதிகரிக்கும் போது நரம்பின் செயல்பாடுகள் குறையும். இத்தகைய குறைப்பாடுகள் எளிதில் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. சாக்லேட் உண்பதால் ஏற்படும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களில் அதிகரிப்பால், இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இரத்த சோகை வராமல் தடுக்க படுகிறது.

சிறு நீரக கற்கள் :

சிறு நீரக கற்கள் :

சிறுநீரக கற்களுக்கு எதிராக நன்மை பயக்கிறது. இரத்த திட்டுகள் கொத்தாக சேராமல் பார்க்கிறது இதனால் இரத்தம் உறைவது தவிர்க்க படுகிறது.

பிற நன்மைகள் :

பிற நன்மைகள் :

சாக்லெட்களில் பிளவனாய்டுகள் அதிகம் என்பதால், தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இவை தடுக்கின்றன. சூரிய ஓளியால் தீக்காயங்கள் ஏற்படாமல் இவை தடுக்கின்றன.

சாக்கலேட்கள் குறிப்பாக டார்க் சாக்லேட்கள் ப்ரீ எக்லம்ப்சியா(Pre Eclampsia ) என்ற முன்சூல்வலிப்பை ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது என்று ஒரு பத்திரிகை குறிப்பிடுகிறது. மற்றும் நமது உடலின் உறுப்புக்கள் மற்றும் செல்கள் தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளால் பாதிக்காதவாறு உடலை பாதுகாக்கின்றன.

இவ்வளவு நன்மைகள் இருக்கும் சாக்லெட்களில் சில தீங்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. சாக்லேட்களை அதிக அளவு உட்கொள்ளும்போது ஊட்டச்சத்து தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சாக்லெட் உண்பதால் ஏற்படும் தீமைகளை இப்போது காண்போம்.

தீமைகள் :

தீமைகள் :

சாக்லேட் உண்ணுவதற்கு மனம் விழையும் போது ஒரு சிறு துண்டு சாக்லேட் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட நினைத்தால் உடலில் சிக்கல் ஏற்படும். இப்போது சந்தைகளில் குறைந்த கொழுப்பு சாக்லேட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அவற்றில் உள்ள எண்ணெய், இதயத்திற்கு கொழுப்பை இடமாற்றம் செய்துவிடும்.

டார்க் சாக்லெட்களில் கலோரிகள் அதிகமாக இருக்கிறது. கொழுப்பு சத்தும், சர்க்கரையும் அதிகமாக இருக்கிறது. சாக்லெட்களில் இருக்கும் காஃபைன் ,தியோப்ரோமின் மற்றும் சர்க்கரை போன்றவற்றிற்கு போதை பண்புகள் இருப்பதால், அதிகம் உண்ணும் போது, உண்பவரின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

ஒற்றை தலைவலி :

ஒற்றை தலைவலி :

ஒற்றை தலைவலிக்கு வழி வகுக்கிறது. மூளைக்கு செல்லும் இரத்த நாளங்களை தளர்த்துகிறது. அக்கியை ஏற்படுத்தும் கிருமிகளை உற்பத்தி செய்கிறது. ஆகையால் அக்கி நோயில் இருந்து மீண்டவர்கள் டார்க் சாக்லேட்கள் உண்ணாமல் இருப்பது நல்லது.

பற்கள் அழுகும்:

பற்கள் அழுகும்:

சாக்லேட்டில் உள்ள கொக்கோ கிருமிகளை எதிர்த்து வினை புரியும். ஆனால் அதில் சேர்க்கப்படும் அதிக அளவு சர்க்கரையால் , பற்கள் அழுகும் நிலை ஏற்படும். கசப்பு தன்மை உடைய சாக்லேட்கள் உண்ணுவதற்கு ஏற்றது. சாக்லேட்கள் காரத்தன்மையுடன் இருக்க கூடாது.

உலர வைக்க பட்டிருத்தல் கூடாது. குளிர் அழுத்தம் செய்யப்படாமல் இருக்க வேண்டும். 70% கொக்கோவால் தயாரிக்கப்பட்ட சாக்லெட்டாக இருக்க வேண்டும். சுத்தீகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதில் கரும்பு சாறு பயன்படுத்தலாம்.

நமக்கு சாக்லேட் மோகம் இருக்கும் வரை சாக்லேட் தயாரிப்பாளர்கள் லாபத்தை ஈட்டி கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் நமது உடல் ஆரோக்கியத்தை மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். ஆகையால், அதிகம் சுவைக்காதீர், அவதி படாதீர் என்று கூறுவது இந்த தொகுப்பிற்கு சரியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Advantages and disadvantages of eating chocolates

Advantages and disadvantages of eating chocolates
Story first published: Thursday, August 31, 2017, 15:02 [IST]
Desktop Bottom Promotion