Latest Updates
-
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்!
ஆழமான நரம்பு இரத்த உறைவு (DVT) இருப்பதற்கான அறிகுறிகள்!!!
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் செல்ல வேண்டும். அப்படி ஒருவேளை செல்லாவிட்டால், அதனால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
இப்படி இரத்தம் உடல் முழுவதும் செல்லாமல் தடைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று இரத்த உறைவு ஏற்பட்டிருப்பது. இரத்த உறைவு சரும பகுதியில் ஏற்பட்ட வெட்டுக் காயத்தால் ஏற்படும். இது சாதாரணமான ஒன்று.
ஆனால் எவ்வித காரணமும் இல்லாமல் கால்களில் இரத்தம் உறைந்து போனால், இந்த நிலையைத் தான் ஆழமான நரம்பு இரத்த உறைவு அல்லது டிவிடி (Deep Vein Thrombosis) என்று அழைப்பார்கள்.
டிவிடி மிகவும் ஆபத்தான நிலை. இது உடல் பருமன், புகைப்பிடிப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, புற்றுநோய், நுரையீரல் நோய், இதய பிரச்சனைகள், ஆர்த்ரிடிஸ் போன்ற பல காரணங்களால் ஏற்படலாம்.
இதனை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், உயிரையே இழக்க வேண்டியிருக்கும். இங்கு ஆழமான நரம்பு இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.

வலி
பெரும்பாலான நேரங்களில் இப்பிரச்சனை இருந்தால், வலியுடன் வீக்கமும் இருக்கும். இந்த வலி தீவிரமாகவோ அல்லது லேசாகவோ கூட இருக்கலாம். ஆனால் நடக்கும் போது கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும்.

சருமத்தின் நிறம்
இரத்த உறைவு ஏற்பட்டுள்ள இடத்தின் நிறமானது நீல நிறத்திலோ அல்லது வேறு ஏதேனும் அசாதாரண நிறத்திவே இருந்தால், அதற்கும் ஆழமான நரம்பு இரத்த உறைவு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

காய்ச்சல்
ஒருவருக்கு டிவிடி இருந்தால் அவருக்கு தொடர்ச்சியான காய்ச்சல் இருக்கும். அதிலும் காய்ச்சலானது முற்றிய நிலையில் தான் வரும். எனவே காய்ச்சல் வந்தால் அசாதாரணமாக விட்டுவிடாதீர்கள். உடனே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

வீக்கம்
கால்களில் திடீரென்று வீக்கம் கடுமையாக இருந்தால், அதற்கு டிவிடி காரணமாக இருக்கலாம். அதிலும் பாதிக்கப்பட்ட இடம் அளவுக்க அதிகமாக பெரிதாக வீங்கி இருக்கும். எனவே இம்மாதிரியான நிலையில் வீட்டிலேயே சிகிச்சை எடுக்காமல், உடனே மருத்துவரை சந்தித்து பரிசோதியுங்கள்.

மூச்சுவிடுவதில் சிரமம்
கால் வீக்கம், வலி, நிறமாற்றத்துடன் மூச்சு விடுவதில் சிரமத்தையும் சந்தித்தால், உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அர்த்தம். எனவே கவனமாக இருங்கள்.

சளி
அதிகப்படியான இருமல் மற்றும் சளியில் இரத்தம் கலந்து வெளிவருதல் போன்றவையும் டிவிடி-க்கான தீவிர அறிகுறிகளுள் ஒன்று. இந்த அறிகுறி நுரையீரல் வரை பிரச்சனை தீவிரமாகியுள்ளது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

பலவீனம்
ஒருவர் மிகுந்த சோர்வு, பலவீனம், கால்களை நகத்தவே வலிமை இல்லாதவாறு உணர்ந்தால், அத்தகையவர்களுக்கும் டிவிடி இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

நெஞ்சு வலி
நுரையீரலில் இரத்தம் உறைந்திருந்தால், அவர்கள் தீவிரமான நெஞ்சு வலியை அனுபவிக்கக்கூடும். மேலும் மூச்சு விடுவதிலும் சிரமமாக இருக்கும்.

வெதுவெதுப்புத்தன்மை
டிவிடி இருந்தால், பாதிக்கப்பட்ட பகுதி உடலின் மற்ற பகுதிகளை விட வெதுவெதுப்புத்தன்மையுடன் இருக்கும். குறிப்பாக நடக்கும் போது வலியுடன், அப்பகுதி ஒருவித வெப்பத்துடன் இருப்பதை உணர முடியும்.



Click it and Unblock the Notifications
