For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் தோற்றப் பொலிவை கம்பீரமாக்கும் உஸ்த்ராசனா - தினம் ஒரு யோகா

By Hemalatha
|

யோகாவின் முடியாத காரியம் எதுவுமில்லை. எல்லா வித பிரச்சனைகளுக்கும் இது தீர்வுகள் தருகின்றது. வராமல் காக்கவும் உதவுகிறது. இன்றைக்கு உஸ்த்ராசனா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

உஸ்த்ராசனா :

உஸ்த்ரா என்றால் சமஸ்கிருதத்தில் ஒட்டகம் என்று பெயர். இந்த யோகாசனத்திற்கு ஓட்டக போஸ் என்று பெயர் உள்ளது. இந்த ஆசனத்தில் , உடலை பின்னோக்கி வளைக்க வேண்டும்.

நீங்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வீர்கள். ஆனால் என்றைக்காவது பின் வளைந்திருக்கிறீர்களா? அப்படி செய்வதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என இந்த கட்டுரையின் கடைசியில் சொல்லப்பட்டிருக்கும் பலன்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

 Ustrasana to improve your posture

இதனை செய்வதற்கு ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், செய்யத் தொடங்கிவிட்டீர்களேயானால், உங்கள் வயிற்றில் இருக்கும் தொப்பை குறைந்து, உடலை வில் போன்று வளைக்கக் கொடிய நெகிழ்வுத் தன்மை வந்துவிடும்.

தோள்பட்டைகள் விரிந்து, குறுகிய எலும்புக் கூடுகள் பலமடைந்து, கூன் முதுகு போய் கம்பீர தோற்றம் கிடைக்கும்.

செய்முறை :

இந்த ஆசனத்தை செய்யத் தொடங்கும்போது, மூச்சினை நிதானமாகவே விட வேண்டும்.

முதலில் தரையில் முட்டி போட்டு நில்லுங்கள். மெதுவாய் மூச்சை விடுங்கள். பின்னர் மெதுவாய் முதுகினை வளைக்கவும். முதுகை ஆரம்பத்தில் வளைக்க முடியவில்லை என்றால் மெதுவாய் இடுப்பை பிடித்தபடி வளைக்க முயற்சி செய்யுங்கள்.

மெதுவாய் வளைந்து இடது கையினால் இடது பாதத்தினையும், வலது கையினால் வலது பாதத்தினையும் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் முகம் மேலேயே பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் 1 நிமிடம் இருக்கலாம். முதுகு வலிப்பது போல் அல்லது அசௌகரியமாக இருந்தால், 1 நிமிடத்திற்கு முன்னதாகவே நிமிர்ந்து கொள்ளலாம்.

இப்போது மெதுவாய், பாதத்தினை விடுவித்து, பழையபடி முட்டி போடும் நிலைக்கு வாருங்கள். இந்த நிலையில் 30 நொடிகள் இருக்க வேண்டும்.

ஏனெனில் உடனே எழுந்தால், உங்கள் உடல் சம நிலையில் இல்லாமல் ஆடுவது போல் இருக்கும். ஆகவே உடல் நிதானத்திற்கு வர அரை நிமிடம் முட்டி போட்ட நிலையில் இருந்துவிட்டு மெதுவாக எழுந்து கொள்ளலாம்.

சில நொடிகள் கழித்து மீண்டும் இதே போல் தொடருங்கள். இவ்வாறு 5 முறை செய்யலாம்.

பலன்கள் :

முதுகுத் தண்டு,கழுத்து ஆகியவை பலம் பெற்று, நெகிழ்வுத் தன்மையை பெறும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். ஒழுங்கற்ற மாதவிலக்கு சீராகும். உங்கள் தோற்றம் கம்பபீரமாய் நடை போடும். முதுகு தசை வலிமை பெறும். முதுவலி இடுப்பு வலி ஆகியவை நீங்கும்.

English summary

Ustrasana to improve your posture

Ustrasana to improve your posture
Desktop Bottom Promotion