Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கல்லீரலுக்கு பலம் தரும் ஊர்த்வ ப்ராசாரித ஏக பாதாசனா !!
நமது உடலில் கல்லீரலும் சிறு நீரகமும் மிக முக்கியமான செயல்களை செய்யும் உறுப்புகளாகும். அன்றாடம் அதிக பாரங்களை சுமக்கும் பொறுப்புகளை கொண்டது. நாம் சாப்பிடும் உணவுகளை சீரணம் செய்ய வைத்து, கழிவுகளை சிறு நீரகத்திற்கு அனுப்பும் வேலையை கல்லீரல் செய்கிறது.

அவ்வாறு வந்தடையும் கழிவுகளை பிரித்தெடுத்து சில முக்கிய காரணிகளை திரும்பவும் மறு சுழற்சிக்கு ஈடுபடச் செய்ய வைத்து, மற்ற கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுவது சிறு நீரகத்தின் வேலையாகும். ஓயாமல் வேலை செய்யும் இந்த உறுப்புகள் பலமாக இருந்தால்தான் நாம் நன்றாக சமூகத்தில் இயங்க முடியும்.
கண் பார்க்கும் அத்தனையும் சாப்பிட்டு, நல்லது கெட்டது என பிரித்து பார்க்காமல் ருசியை மட்டுமே நினைத்து நீங்கள் சாப்பிடுகிறீர்கள். ஆனால் அவைகளை எவ்வாறு ஜீரணிக்க வைப்பது என கல்லீரலுக்குதான் தெரியும் அதன் பாடு. வயிற்றிற்கு உகந்ததை மட்டும் அளவோடு சாப்பிட்டு கல்லீரலை பாதுகாப்பது உங்கள் கையில்தான். அதோடு யோகாவையும் செய்தால் உங்கள் கல்லீரல் யானை பலம் பெறும்.
யோகாவிலுள்ள ஊர்த்வ ப்ராசாரித ஏக பாதாசனா என்ற ஆசனம் கல்லீரலையும் சிறு நீரகத்தையும் நன்றாக செயல்பட வைக்கிறது. அவற்றிற்கு பலம் தந்து, ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஆசனதை எப்படி செய்வது என பார்க்கலாம்.
ஊர்த்வ ப்ராசாரித ஏக பாதாசனா :
முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். கால்கள் நேராக வைக்க வேண்டும். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நில்லுங்கள்.
இப்போது மெதுவாகஇடது காலை மேலே தூக்குங்கள். மெதுவாக வலது பாதத்தை நோக்கி உடலை வளையுங்கள். கைகளால் தரையை தொட முயலுங்கள். தரையை தொட முடியாவிட்டாலும், கால்களை பிடித்துக் கொள்ளலாம்.
இடது காலை மேலே நீட்டியபடி, வலது பக்கம் உடலை சாய்ந்தபடி சில நிமிடங்கள் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரலாம். பின்னர் இப்போது இடது காலை ஊன்றி, வலது காலை தூக்கி இதே போல் செய்யுங்கள்.
பலன்கள் :
மன அமைதி தரும். தொடை, இடுபு வலு பெறும். கல்லீரல், சிறு நீரகம் செயல்கள் தூண்டப்படும். ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும்.தலைவலி குணமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


