உங்களிடம் இந்த 7 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்!!

Written By:
Subscribe to Boldsky

அன்றாட வேலைப் பளு, பல போட்டிகளை சமாளிக்க வேண்டும்.

பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என முன்னேற்றப் பாதையையே நோக்கி வேகமாக ஓடும்போது எங்கே பின்தங்கிவிடுவோமோ, நம்மால் முடியாதோ என்ற பயம், சந்தேகம் எழுகிறது. இதனால் உண்டாவதுதான் மன அழுத்தம்.

மன அழுத்தம் சாதரணமானதுதானே எல்லாருக்கும் அது இல்லாமல் இருக்குமா என நினைக்காதீர்கள். மன அழுத்தம் பல மோசமான விளைவுகளைத்தான் தருகிறது.

Symptoms that reveal you are in depression

தன் நிம்மதி இழந்து. பின்னர் குடும்பத்தின் நிம்மதியை இழந்து அன்றாடம் பிரச்சனைகளை முடிச்சு போட ஆரம்பித்துவிடுவீர்கள்.

இங்கே சொல்லப்பட்டுள்ள ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன நிலை மாற்றம் :

மன நிலை மாற்றம் :

மிக மகிழ்ச்சியாய் செய்த ஒரு விஷயத்தில் இப்போது நாட்டம் குறைந்து அல்லது இல்லாமல் இருக்கிறீர்களா. எனர்ஜி அளவு குறைந்து கொண்டே போகிறதா? ஏதோ ஒரு பிரச்சனை உங்களை தொந்தரவு செய்கிறது என அர்த்தம்.

 தீய பழக்கங்களுக்கு அடிமை :

தீய பழக்கங்களுக்கு அடிமை :

ஆரம்பித்தில் இல்லாத பழக்கங்களான மது, புகை ஆகியவற்றிற்கு இப்போது அடிமையாகிவிட்டது போலிருக்கிறதெனில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம்.

கவனக் குறைவு :

கவனக் குறைவு :

எதிலும் முழு ஈடுபாடு இல்லாமல் அவ்வப்போது கவனக் குறைவு உண்டாகிறதா? முக்கியமான வேலை செய்யும்போது கூட மனம் நிலையில்லாமல் வேறெங்கோ போகிறதென்றால் அம்ன அழுத்தமே காரணமாக இருக்கும்.

தூக்கம் :

தூக்கம் :

சரியாக தூக்கம் இல்லாமல் பாதி இரவில் விழிப்பு வந்தால், அல்லது தூங்கி எழுந்ததும் தூங்கியது போன்றே உணர்வில்லாத அரைகுறைத் தூக்கம் இருந்தால் இந்த பிரச்சனை உண்டு என அர்த்தம்.

உணவு :

உணவு :

திடீரென ஒரு நாள் அதிக உணவு சாப்பிடுவது மற்றொரு நாள் சாப்பிடாமலேயே இருப்பது என சமயத்திற்கு தகுந்தாற்போல் இருப்பது, உடல் திடீரென அதிகரிப்பது, சடாரென குறையச் செய்வது என இருந்தால் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 நம்பிக்கையின்மை :

நம்பிக்கையின்மை :

எதன்மீதும் நம்பிக்கை அல்லது பிடிப்பே இல்லாமல் இருப்பது. இதனால் காரியங்கள் தடைபட்டு அப்படியே தேங்கி இன்னும் மன உளைச்சல் தருவது போலிருந்தால் இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது.

 வலி :

வலி :

அடிக்கடி தோள்பட்டை உடல் வலி, கைகள் கால்கள் இழுத்து பிடிப்பது போல் உணர்வு, ஆகியவை ஏற்படால் மன அழுத்தம் உங்களுக்கு இருக்கிறது என்று பொருள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms that reveal you are in depression

These 7 Symptoms may reveal you are in depression
Story first published: Wednesday, October 12, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter