தைராய்டு குறைப்பாட்டின் அறிகுறிகள் என்ன?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. உடலில் ஏற்படும் வளர்சிதைமாற்றப் பணிகளை ஒழுங்குபடுத்தும் முக்கியமான சுரப்பி இது.

இந்த சுரப்பி சிலசமயம் சீராக இல்லாமல் சிலருக்கு அதிகமாக சுரக்கும் அல்லது சுரக்காமல் நின்று விடும். தைராய்டு அதிகமாக சுரந்தால் ஹைபர்தைராய்டிஸம் என்று பெயர். சுரப்பது நின்று போனால் ஹைபோதைராய்டிஸம் என்று பெயர்.

Symptoms of Hypothyroidism

ஹைபோதைராய்டிஸம் :

இந்த சுரப்பி சுரப்பது நின்று போனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதன் அறிகுறிகள், ஆரம்பநிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும்; சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது; முகம் வீங்கி போகும்.

தொண்டைபகுதியில் வீக்கம் உண்டாகும். தோல் வறட்சி ஆகும், பசி ஏற்படாது. ஆனால், உடல் எடை அதிகரிக்கும். கொழுப்பு அளவு அதிகரிக்கும். ஞாபக மறதி, அதிகத் தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம் ஆகியவைகளும் உண்டாகும். கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, மூட்டுவலி இப்படிப் பல பிரச்சினைகள் அடுத்தடுத்துத் தலைதூக்கும்.

Symptoms of Hypothyroidism

மனசோர்வு :

சிலருக்கு குழந்தை பெற்ற பின் ஹைபோதைராய்டிஸம் உண்டாகலாம். முக்கிய பிரச்சனை மனசோர்வாக இருக்கும். காரணமில்லாமல் மனக்குழப்பங்கள் உண்டாகும். மனப்பதட்டம், பயம், மன நிலை பாதிப்புகளும் இதனால் உண்டாகும்.

Symptoms of Hypothyroidism

தூக்கமின்மை :

மிக முக்கிய பிரச்சனை, ஹைபோதைராய்டிஸம் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை வியாதி உண்டாகும். சிலருக்கு, மறு நாள் தலையணையிலிருந்து தலையை தூக்க இயலாதவாறு பாரம் உண்டாகும். இன்னும் சிலருக்கு நாள் பூராகவும் தூங்கலாம் என தோன்றும்.

Symptoms of Hypothyroidism

மூச்சுத்திணறல் பாதிப்பு :

ஹைபோதைராய்டு பாதிப்புகள் இருப்பவர்களுக்கு தூங்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஸ்லீப் ஆப்னியா என்று மருத்துவத்தில் பெயர். இதனால் பல பிரச்சனைகளை தைராய்டு குறைபாட்டினால் சந்திக்க நேரிடும்.

Symptoms of Hypothyroidism
English summary

Symptoms of Hypothyroidism

Symptoms of Hypothyroidism
Subscribe Newsletter