For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதுகுவலியை குணப்படுத்த இந்த ஆசனத்தை தவறாமல் செய்யுங்க!!

முதுகுவலியை குணப்படுத்த யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சப்த படங்குஸ்தாசனம். இதை செய்யும்போது முதுகிற்கு நெகிழ்வுத்தன்மையும் பலமும் ஏற்படுகிறது. அதோடு இந்த ஆசனத்தை தினமும் செய்வதால் ப

|

முதுகுவலியை குணப்படுத்த யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சப்த படங்குஸ்தாசனம். இதை செய்யும்போது முதுகிற்கு நெகிழ்வுத்தன்மையும் பலமும் ஏற்படுகிறது. அதோடு இந்த ஆசனத்தை தினமும் செய்வதால் பலவித நன்மைகளை பெறலாம்.

supta padangusthasana to strengthen back and thigh muscle

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு முதுகு அதிக பாதிப்புக்குள்ளாகும். இதனால் தாளாத முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர்.

தொடைகளிலும் அடிக்கடிபிடிப்பு உண்டாகும். அமர்ந்த நிலையில் தொடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் த்சைகளில் உண்டாகும் பிடிப்பே தொடை வலிக்கு காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா :

யோகா :

முதுகு வலி போக்கும் வகையில் மருந்துகள், பிஸியோதெரபி என இருந்தாலும், யோகாதான் சிறந்தது என சொல்லலாம். ஏனென்றால் மருந்தோ தெரபியோ அந்த குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் நிவர்த்தி தரும்.

ஆனால் யோகாவை செய்வதனால் இன்னும் கூடுதலாக பல உறுப்புகள் பலம் பெற்று வலிகளை குணப்படுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

சப்த படங்குஸ்தாசனம் :

சப்த படங்குஸ்தாசனம் :

சப்த படங்குஸ்தானம் என்பது கைகளால் பாதத்தை தொடுவதாகும். இந்த ஆசனத்தால் தொடைகள் பலம் பெறுகிறது. முதுகிற்கு நெகிழ்வுத்தன்மை அதிகரித்து ரத்த ஓட்டம் நன்றாக பாய்கிறது எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

 செய்முறை :

செய்முறை :

முதலில் கால் நீட்டி அமர்ந்து மெதுவாய் மூச்சை இழுத்து விடுங்கள்.

பின்னர் தரையில் படுத்துக் கொள்ளவும். கால்களையும் கைகளையும் தளர்வாய் வைத்துக் கொள்ளுங்கள். மெதுவாய் மூச்சை இழுத்து ஆழமாய் விடவும்.

 செய்முறை :

செய்முறை :

பின் மெதுவாக வலது காலை மட்டும் உயர்த்தவும். நேராக வளைக்காமல் உயர்த்துங்கள்.

உங்களால் ஆரம்பித்தில் நேராக உயர்த்த முடியவில்லையென்றால் யோகா ஸ்ட்ராப் கிடைக்கிறது. அதனை பாதத்தில் மாட்டி உயர்த்தவும். இதனால் முட்டி வளையாமல் நேராக இருக்கும்.

செய்முறை :

செய்முறை :

கைகளை நீட்டில் வலது பாதத்தின் கட்டை விரலை தொட முயலுங்கள். ஆரம்பித்தில் முயன்றாலும், நன்றாக பயிற்சி செய்தபின் கால் கட்டை விரலை தொட வேண்டும்.

இதே நிலையில் 1 நிமிடம் இருந்த பின் கால்களை தளர்த்துங்கள். அதன்பின் இதே போல் இடது காலிற்கும் செய்ய வேண்டும்.

 பலன்கள் :

பலன்கள் :

முட்டியை பலப்படுத்தும். முதுவலியை சரிசெய்யும். தொடை தசைகளை உறுதியாக்கும். கருப்பையின் பலத்தை அதிகப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். இடுப்பு எலும்புகளை வலுவாக்கும். ரத்த அழுத்தத்தை சமன்படுத்தும்.

குறிப்பு :

குறிப்பு :

தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

supta padangusthasana to strengthen back and thigh muscle

how to do supta padangusthasana to cure back pain
Story first published: Wednesday, October 12, 2016, 17:41 [IST]
Desktop Bottom Promotion