நீங்கள் காலையில் செய்யவேண்டிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

காலையில் ஸ்ட்ரெட்ச்சிங் அல்லது இழுவை உடற்பயிற்சிகள் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இது உடலை இலகுவாக்கி, சமநிலைப் படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியையும் உங்களுடைய தோற்றத்தையும் முன்னேற்றும்.

குறிப்பாக வேளையில் ஈடுபட்டுள்ளவர்கள் தினமும் காலையில் இந்த பயிற்சிகளை மேற்கொள்வது மிகப்பெரும் மாற்றத்தை தோற்றத்திலும் நெகிழ தன்மையிலும் ஏற்படுத்தும். மேலும் இந்த பயிற்சிகள் பொதுவாகவே செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே போதுமானது.

Stretches You Should Do Every Morning

எனவே போல்ட்ஸ்கை இன்று உங்களுக்கு சில சக்திவாய்ந்த இழுவை உடற்பயிற்சிகளை நீங்கள் தினமும் காலையில் செய்யவும் உங்கள் தசைகளில் உள்ள இருக்கத்தைக் குறைக்கவும் நெகிழ்த்தன்மையுடன் செயல்படவும் சொல்லித்தர போகிறது.

இவற்றை தினமும் செய்யும் பெரும்பாலான மக்கள் இது நல்ல பலன்களைத் தருவதாக உறுதியுடன் கூறுகிறார்கள். இதை செய்வது மேலும் உங்களுக்கு நல்ல புத்துணர்வையும் தருகிறது.

இந்த பயிற்சிகளை தினமும் காலையில் செய்து உடலளவிலும் மனத்தளவிலும் புத்துணர்வோடு கண்விழியுங்கள்.

ஆனால் இதற்கு முன் உடலில் அடிபட்டோ அல்லது காயங்கள் ஏற்பட்டோ இருந்தால் எதையும் துவங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரை முதலில் அணுகி அவருடைய அறிவுரைகளை பெறுவது நல்லது.

இதை புரிந்துகொண்டு இதோ பின்வரும் எளிய உடற்பயிற்சிகளை உங்கள் காலை நேர வழக்கமாகி கொள்ளுங்கள். உங்கள் உடல் இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.

பக்கவாட்டுச் சாய்வு (Standing side stretch)

இந்த சூப்பரான பயிற்சியில் நீங்கள் நேராக நின்று கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி கால்களை நீராக ஒட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கைகளை தலைக்கு மேல் பின்னி பக்கவாட்டில் உடம்பை சாய்க்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு இதனை வலது மற்றும் இடது புறம் செய்ய வேண்டும். காலையில் இதனை முதலில் செய்வதன் மூலம் உடலும் மனமும் சுறுசுறுப்படையும்.

Stretches You Should Do Every Morning

முதுகுத்த தண்டு சுழல் (Seated spinal twist)

இதைச் செய்ய நீங்கள் கட்டிலிலிருந்து இறங்கக் கூட வேண்டியதில்லை. நேராக கால்களை முன் நீட்டியவாறு உட்கார்ந்து கொள்ளவும். பிறகு உங்கள் ஒரு காலை நேராக வைத்துக் கொண்டு மற்றொரு காலை மடக்கவும். பிறகு உங்கள் உடம்பை மடக்கிய கால் இருக்கும் திசையில் திருப்பவும். இதைப்போலவே மற்றொரு களையும் மடக்கி செய்யவும். இது உங்கள் முதுகுத்த தண்டில் உள்ள அழுத்தத்தைக் குறைத்து உங்கள் உடம்பு நெகிழ்வுடன் எளிதாக இயங்க உதவுகிறது.

முழங்கால் தசை இழுவை (Standing hamstring stretch)

முழங்கால்களுக்கு பின்புறம் உள்ள கடின தசைகள் ஹாமாஸ்ட்ரிங் என்று அழைக்கப்படுகின்றன. இவை மற்ற தசைகளைக் காட்டிலும் அதிகம் பிடிப்புக்குள்ளாகும் என்பதால் இந்தப் பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டியது அவசியம். இதைச் செய்ய நீங்கள் உங்கள் கால்களை ஒன்றாக வைத்து நேராக நின்று உங்கள் இஇடுப்பை சற்று சாய்த்து உங்கள் வலதுகாலை இடது காலில் இருந்து சற்று நகற்றி வைக்க வேண்டும். உங்கள் இடது காலை சற்று வளைத்தால் உங்கள் வலது முழங்கால் பின்புற தசைகளில் இறுக்கத்தை உணர்வீர்கள். இதே போன்று மற்ற காலையும் மாற்றிச் செய்யவேண்டும்.

கழுத்து இழுவைப் பயிற்சி (Lateral neck stretch)

இந்த எளிய சக்திவாய்ந்த பயிற்சி உங்களுடைய தோற்றத்திலும் உங்கள் கழுத்துப் பகுதி நெகிழ்விற்கும் சிறந்த பலன்களை தரக்கூடியது. இதைச் செய்ய நீங்கள் நேராக உட்கார்ந்தோ அல்லது நின்றுகொள்ளவோ வேண்டும்.

Stretches You Should Do Every Morning

உங்களுடைய பின்புறத்தையும் மார்பையும் நேராக வைத்துக்கொள்ளவும். பின்னர் உங்கள் தலையை இடதுபுறமாக சாய்த்து அதே நிலையில் ஐந்து வினாடிகள் வரை இருக்க வேண்டும். இதை போலவே உங்கள் தலையை வலதுபுறம் சாய்க்க வேண்டும். இது உங்கள் கழுத்தில் உள்ள தசைகளை தளர்வாக்கி உங்களுடைய தோற்றத்ததை நன்றாக மாற்றும்.

என்ன எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாக்கறீங்களா ?

English summary

Stretches You Should Do Every Morning

Stretches You Should Do Every Morning
Story first published: Friday, October 7, 2016, 19:30 [IST]
Subscribe Newsletter