செல்ஃபி எடுக்கப் போறீங்களா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் உஷார்!!

Written By:
Subscribe to Boldsky

செல்ஃபி எடுப்பதில் என்ன பிரச்சனை. நம முகம் அழகாய் இருக்கிறதா என பார்த்துக் கொள்கிறோம். நமது குறைகள் என்னவென்று தெரிந்து கொள்கிறோம்.

எந்த கோணத்தில் நாம் அழகாய் இருக்கிறோம் என உறுதிபடுத்திக் கொள்கிறோம். இதெல்லாம் சரிதான். ஆனால் இதுவே மிகையாகும்போது ஆபத்துக்கள் தராதா?

Selfie obsession may give harm to your health

பிறந்த குழந்தையே செல்ஃபி எடுக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்கும் எப்போதும் செல்ஃபிதான். இது சிலருக்கு நோயாகவும் மாறியிருக்கிறது. நிமிடத்திற்கு ஒருமுறை செல்ஃபி எடுக்காவிட்டால் நிம்மதியின்றி இருப்பார்கள்.

செல்ஃபி உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பாதிப்புகளை தருகிறது என நிறைய ஆய்வுகள் கூறுகின்றது. செல்ஃபியினால் உண்டாகும் பாதிப்புகள் எவையென பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதீத ஈடுபாடு :

அதீத ஈடுபாடு :

சமீபத்தில் ஒஹியோ பல்கலைக்கழகத்தில் எடுத்த ஆய்வில் செல்ஃபி எடுத்துக்க் கொண்டேயிருப்பவர்கள் உளவியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்பவும் செல்ஃபி எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பவர்கள் உளவியல் ரீதியாக அதீத ஈடுபாடு ஒன்றின் மீது வைப்பார்கள்.

இதனால் பலவிதமான பாதிப்புகள் உண்டாகும். உதாரணத்திற்கு ஃபேஸ்புக் அவருக்கு பிடித்தமானதென்றால் அதற்கு அடிமையாகி வேறெந்த வேலையிலும் கவனமில்லாமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பவர்களுக்கு தெரபி மிகவும் அவசியம்.

உயிருக்கு ஆபத்தை தரும் :

உயிருக்கு ஆபத்தை தரும் :

எப்படியென்றால் வித்யாசமாக எடுக்க வேண்டுமென நினைத்து மிக உயரமான கட்டங்கள் அல்லது அருவி போன்ற நீர்நிலைகளில் அமர்ந்து செல்ஃபி எடுக்கும்போது தங்கள் முகம் சரியாக இருக்கிறதா என கவனத்தை அதில் வைக்கும்போது பிசகி விழுந்து உயிரை துறந்தவர்கள் ஏராளம்.

உயிருக்கு உலை வைக்கும் இதனை சற்று ஆபத்தான் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 தலையில் பேன் வர வாய்ப்புகள் உண்டு:

தலையில் பேன் வர வாய்ப்புகள் உண்டு:

நண்பர்களுடன் எப்போதும் தலையை ஒன்றாக வைத்து ஒட்டி உறவாடு செல்ஃபி எடுத்துக் கொள்ளும்போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பென் வர வாய்ப்புகள் அதிகம்.

உடலை இளைக்கச் செய்தல் :

உடலை இளைக்கச் செய்தல் :

செல்ஃபி எடுக்கும்போது மிக அருகில் மொபைலை வைப்பதால் உடல் குண்டாக தெரியும்.

இதனை சமூக வலைதளங்களில் பதிவிடும்போது தாங்கள் குண்டாக தெரிகிறோம் என்று நினைப்பதால் மொபைலில் ஒல்லியாக தெரிய வேண்டும் என தங்கள் சாப்பாட்டின் அளவை குறைத்து உடலை மெலியய்ச் செய்கிறார்கள்.

இதனால் சத்து குறைந்து பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

முழங்கை பாதிப்பு :

முழங்கை பாதிப்பு :

தொடர்ந்து முழங்கையை வளைத்தபடியே ஃபோட்டோ எடுப்பதால் முழங்கைகளில் திசுக்கள் பாதிப்படைந்து வீக்கம் உண்டாகிறது.

இதனால் முழங்கை வலி உண்டாகி அங்கே தேய்மானமும் நடக வாய்ப்புகள் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Selfie obsession may give harm to your health

Selfie obsession if affecting your physical and mental health,
Story first published: Thursday, October 13, 2016, 10:54 [IST]
Subscribe Newsletter