இதை தினமும் 3 டீஸ்பூன் சாப்பிட்டால் உடல் சுத்தமாகும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மனித உடலில் அன்றாடம் டாக்ஸின்கள் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அதே சமயம் கல்லீரலும், சிறுநீரகங்களும் அந்த டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும்.

Purify Yourself From Toxins With This Amazing 2 Ingredient Mix

எப்படி ஒரு இயந்திரம் தொடர்ந்து செயல்படும் போது, அதில் தூசிகள் படிந்து, அந்த இயந்திரத்தின் வேகத்தைக் குறைக்கிறதோ, அதேப் போல் தான் கல்லீரலிலும், சிறுநீரகங்களிலும் அழுக்குகள் தேங்கி, அதன் செயல்பாட்டைக் குறைக்கும். எனவே அவ்வப்போது உடலை முழுமையாக சுத்தம் செய்யும் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நச்சுக்களின் தேக்கத்தால் ஏற்படும் விளைவுகள்

நச்சுக்களின் தேக்கத்தால் ஏற்படும் விளைவுகள்

உடலில் டாக்ஸின்கள் அதிகரித்தால், உள்ளுறுப்புக்களின் செயல்பாடு குறைந்து, உடலில் சோர்வு அதிகரித்து, எப்போதும் மிகுந்த களைப்பை உணரக்கூடும். நீங்கள் எக்காரணமுமின்றி மிகுந்த களைப்பை உணர்ந்தால், உங்கள் உடலில் அழுக்குகள் அதிகம் தேங்கியுள்ளது, உடலை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

உடலை சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளன. இப்போது அதில் உடலை சுத்தம் செய்யும் ஒரு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

பூண்டு பற்கள் - 12

ரெட் ஒயின் - 500 மிலி

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் பூண்டின் தோலை நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு கண்ணாடி பாட்டிலில், அதனை போட்டு அத்துடன் ரெட் ஒயினை ஊற்றி, பாட்டிலை காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

2 வாரம்

2 வாரம்

இந்த கலவையை 2 வாரம், அதாவது 14 நாட்கள் பிரகாசமான இடத்தில் வைத்து ஊற வைக்கவும். ஒவ்வொரு நாளும் அந்த பாட்லை 30 நொடிகள் குலுக்க வேண்டும். இதனால் கலவை நன்கு ஒன்று சேரும். பின் 14 நாட்கள் கழித்து, பாட்டிலைத் திறந்து, வடிகட்டி, மீண்டும் அக்கலவையை அதே கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை:

உட்கொள்ளும் முறை:

இந்த மருந்தை தினமும் மூன்று வேலை உணவு உண்பதற்கு முன் 1 டீஸ்பூன் சாப்பிட வேண்டும். அதுவும் ஒரு மாதம் இப்படி உட்கொள்ள வேண்டும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது மிகவும் சக்தி வாய்ந்த பானம். இது இரத்தத்தை மட்டுமின்றி, உடலுறுப்புக்களையும் சுத்தம் செய்வதுடன் வலிமையாக்கும். இந்த சிகிச்சையை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்வது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Purify Yourself From Toxins With This Amazing 2 Ingredient Mix

This amazing 2 ingredient mixture purify yourself from toxins. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter