மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் பவனமுத்தாசனம்- தினம் ஒரு யோகா

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

மலச்சிக்கலால் அநேக பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவகையில் போதிய உடற்பயிற்சி இல்லாததும் காரணம்.

மேலும் கொழுப்பு மிகுந்த உணவுகள் , நார்சத்து குறைந்த உணவுகள், மைதா கலந்த உணவுகள் சாப்பிடுவதால், குறைவான நீர் குடிப்பதால், மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புண்டு.

Pavanmukthasana cures constipation

மலச்சிக்கல் இருந்தால் நச்சுக்கள் வெளியேறாது. கழிவுகள் வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கிவிடும்போது, வயிற்றில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும்.

இவை உடலில் தொற்றுக்களையும், வாய்வினையும் ஏற்படுத்தும். அப்படியே அதனை கவனிக்காமல் விட்டால் பைல்ஸ் போன்ற வியாதிகளை பெற வேண்டிய நிலைமை வரும்.

மலச்சிக்கலை சரிபடுத்த என்னென்னமோ செய்து பார்த்தும் சரியாகாமல் தினம் தினம் போராடிக் கொண்டிருந்தால், நீங்கள் மாற்றுவழியை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

மலச்சிக்கலை குணமாக்க ஒரு எளிய வழி இருக்கிறது தெரியுமா?ஆமாம் யோகாதான். யோகாவினால் எதுவும் முடியும். உங்கள் மலச்சிக்கலையும் குணப்படுத்த முடியும். எப்படி என பார்க்கலாமா?

பவனமுத்தாசனம்:

பவன் என்றால் சமஸ்கிருதத்தில் வாயு. முக்தா என்றால் விடுதலை. இந்த ஆசனத்தில் அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுகிறது. மலக்குடல் நெகிழ்த்தபட்டு மலச்சிக்கலை விடுவிக்கின்றது.

செய்முறை :

Pavanmukthasana cures constipation

முதலில் நேராக படுத்துக் கொள்ளுங்கள். கைகள் தரையில் பதிந்திருக்க வேண்டும். கால்கள் வளையாமல் நேராய் வைத்திருங்கள்.

Pavanmukthasana cures constipation

இப்போது மேலே படத்தில் காட்டியது போல், இடது காலின் முட்டியை மடித்து, தொடை வயிற்றில் படுமாறு கொண்டு செல்லுங்கள்.

வலது கால் தரையிலேயே இருக்கவேண்டும். பின்னர் மெதுவாக தலையை தூக்கி, நெற்றில் இடது முட்டியில் படுமாறு வையுங்கள்.இந்த நிலையிலேயே சில நொடிகள் இருக்க வேண்டும்.

ஆழ்ந்து மூச்சை விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவேண்டும். இடது காலில் செய்தது போல், இப்போது வலது காலுக்கும் செய்யுங்கள்.

Pavanmukthasana cures constipation

இந்த யோகாவை ஒரே சமயத்தில் இரு கால்களிலும் சேர்ந்து செய்யலாம்.

பலன்கள் :

மலச்சிக்கல் தீரும், ஜீரணம் அதிகரிக்கும். வாய்வு உருவாகாமல் தடுக்கும். மலக்குடல் பெருங்குடல் ஆகிவயவை நெகிழப்படும். நச்சுக்கள் வெளியேறும்.

குறிப்பு : கர்ப்பிணிகள் இந்த யோகாவை செய்ய வேண்டாம்.

English summary

Pavanmukthasana cures constipation

Pavanmukthasana cures constipation
Please Wait while comments are loading...
Subscribe Newsletter