தினமும் மாலை 4 மணிக்கு நமது உடலில் வெளிப்படும் ஒளிக்கதிர் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகிலேயே புரிந்துக் கொள்ள மிகவும் கடினமான மற்றும் முழுதாய் அறியப்படாத விசித்திரம் நிறைந்த ஒன்றாய் திகழ்வது நமது உடல் தான். இன்றளவிலும் நம் உடலின் பல இயக்கங்கள் குறித்த ஆய்வுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

நமது உடலின் கட்டமைப்பு பற்றிய இன்றியமையாத அதிசயத்தக்க தகவல்கள்!!!

இந்த வகையில், நமது உடலில் இருந்து குறிப்பிட்ட சில நேரங்களில் ஒளிக்கதிர்கள் வெளியாகின்றன என ஜப்பானை சேர்ந்த கியோடோ பல்கலைக்கழக ஆய்வாளர் ஹிட்டோஷி ஒகமுரா கண்டறிந்துள்ளார்....

பெரும்பாலும் யாரும் அறியாத ஆண், பெண் உடல் கூறு சார்ந்த தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலக உயிரினங்கள்

உலக உயிரினங்கள்

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களில் இருந்தும் மிகக் குறைந்த அளவில் ஒளி வெளிப்படுகிறது. மனித உடலிலும் இதுப் போன்ற ஒளிக் கதிர்கள் வெளி வருகின்றன என ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கண் திறன் குறைவு

கண் திறன் குறைவு

நமது கண்களால் பார்க்கும் திறனை விட ஆயிரம் மடங்கு குறைந்த அளவில் ஒளிக் கதிர்கள் நமது உடலில் இருந்து வெளி வருகின்றன என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மாலை 4 மணி

மாலை 4 மணி

தினமும் காலை 10 மணி அளவில் மிக குறைந்த அளவில் இந்த ஒளிக் கதிர்கள் நமது உடலில் இருந்து வெளி வருகின்றன. ஆனால், மாலை 4 மணியளவில் அதிகளவில் ஒளிக் கதிர் வெளிப்படுவதாக ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிறகு மெல்ல மெல்ல இதன் அளவு குறைந்துவிடுகிறது.

முகம்

முகம்

நம் உடலிலே முகத்தில் தான் அதிகளவில் ஒளிக் கதிர் வெளிப்படுகிறது. அதிகமாக சூரியனின் ஒளியால் முகத்தின் தோல் பதப்பட்டு இருப்பதால் தான் முகத்தில் இருந்து அதிகளவு பிரகாசம் வெளிப்படுகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஐந்து இளைஞர்கள்

ஐந்து இளைஞர்கள்

ஆரோக்கியமான ஐந்து இளைஞர்களை ஓர் இருட்டு அறையில் அடைத்து வைத்து ஆராய்ச்சி செய்தனர். ஆய்வின் போது சிறப்பு கேமராக்கள் வைத்து அவர்களது உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் கண்டறியப்பட்டது.

இரசாயன மாற்றம்

இரசாயன மாற்றம்

நம் உடல் இயக்கத்தில் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் தான் இந்த ஒளிக் கசிவு ஏற்படுகிறது என இந்த ஆய்வை நடத்திய ஜப்பானிய ஆய்வாளர் ஹிட்டாஷி கூறியுள்ளார்.

உடல் இயக்கங்கள்

உடல் இயக்கங்கள்

நமது எண்ணங்கள் மற்றும் கை வேலைகள் / உடல் உழைப்பு இன்றி, உடலுக்குள் நடக்கும் மற்ற இயக்கங்களான, மூச்சு விடுதல், இரத்த ஓட்டம், செரிமானம், வியர்வை சுரத்தல் போன்றவை நாம் உறங்கும் போதும் கூட இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. இந்த செயல்பாடுகளினால் தான் உடல் பிரகாசம் ஆகிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Our Body Becomes Brighter Everyday Eve 4o Clock

Did you know? Our body becomes brighter everyday eve 4o clock
Subscribe Newsletter